Published:Updated:

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

Published:Updated:
கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?
பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?
கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

தி.ரா.அருள்ராஜன்
தலைவர், பங்குச் சந்தை,  கமாடிட்டி  சந்தை பயிற்சி மையம், www.ectra.in

மாடிட்டிச் சந்தை என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. கமாடிட்டி விலையின் மாறுதல்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடிக்கவும், சிலசமயங்களில் பொருளாதாரத்தை உலுக்கி எடுக்கவும் வாய்ப்புண்டு. இன்னொரு பக்கம், முதலீடுகளின் மதிப்பைக் காப்பாற்றவும் கமாடிட்டிச் சந்தை உதவுகிறது.

சில கமாடிட்டிகள் பல்வேறு தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் பொருள்களுக்கு மூலப்பொருளாகவும் இருப்பதால், அது அந்த நிறுவனங்களின் லாபம் ஈட்டும் திறனைப் பாதிக்கவும்  வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் அந்த நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் வலிமை பெறவும், வீழ்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது. கமாடிட்டியின் விலை மாற்றமானது, பணவீக்கத்துடனும் நேரடியாகத் தொடர்புகொண்டது.

கமாடிட்டிச் சந்தையைப் பொறுத்தவரை, நான்கு வகைகளாகப் பிரிப்போம். அவை, புல்லியன் (தங்கம் மற்றும் வெள்ளி), எனர்ஜி பொருள்கள் (கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு), அடிப்படை உலோகங்கள் (காப்பர், நிக்கல், அலுமினியம்…), விவசாய விளைபொருள்கள் (பருத்தி, மிளகு, ஏலக்காய்…) இந்த கமாடிட்டிகளில் நான்கு முக்கிய கமாடிட்டிகள் 2018-ல் எப்படி இருந்தது, 2019-ல் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

   தங்கம்

தங்கமானது நுகரும் ஒரு பொருள் என்றாலும், பல சமயங்களில் அதை ஒரு முதலீட்டுக் கருவியாகவே மக்கள் பார்க்கிறார்கள். அதாவது, பணவீக்கத்தைத் தாண்டி முதலீட்டைப் பாதுகாக்கவும், உலகப் பொருளாதார நிலை மந்தமாகவோ அல்லது நிச்சயமற்ற தன்மையில் இருந்தாலோ, முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் மதிப்பைக் காப்பாற்றவும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். 2018-ல் இவற்றின் நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

 தங்கம் இந்த வருடத்தில் மிகப் பெரிய மாற்றம் இல்லாமல் ஓரளவிற்கு ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழன்று வந்துள்ளதாகச் சொல்லலாம். இதை கேண்டில் வரைபடத்தில் பார்க்கும்போது, இது ஒரு ஸ்பின்னிங்டாப் வகையில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

2018-ம் வருடத்தில் ஆரம்பத்தில் 29332 என்ற விலையில் ஆரம்பித்து வியாபாரமான தங்கம், வருடத்தின் முடிவில் 31126 என்ற புள்ளியில் முடிந்துள்ளது (24.12.2018 வரை). இதில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சுமார் 6.12% அளவுக்கு வருமானம் தந்துள்ளது. 2017-ம் ஆண்டில் தங்கம் தந்த வருமானம் 6.14%. கடந்த இரண்டு வருடங் களாகத் தங்கம் சுமார் 6% கொடுப்பதைப்  பண வீக்கத்துடன் ஒப்பிட்டால்,  வலுவான வருமானம் என்று சொல்ல முடியாது. 2018-ம் ஆண்டில் துவக்கத்தில் 29332-ல் ஆரம்பித்து, படிப்படியாக ஏறத் தொடங்கி, உச்சமாக 31600-ஐ ஒருமுறை தொட்டு மீண்டும் இறங்கி 29268-ஐ தொட்டு, பின்பு மீண்டுள்ளது. 

2019-ம் வருடத்தைப் பொறுத்தமட்டில், உள்நாட்டில் அரசியல்ரீதியாகப் பல நிகழ்வுகள் நடக்க உள்ளது.  உலகச் சந்தையிலும், ஐரோப்பிய, சீனப் பொருளாதாரத்திலும் ஒரு மந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 2019-ல் தங்கம் மீண்டும் ஒரு ஏற்றத்தையும் காணலாம். டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், 2014 முதல் 2018 வரையிலான, ஐந்தாண்டு காலத்தில் சுமார் 32350 என்ற புள்ளிக்கு அருகில் தடுக்கப்பட்டு வந்துள்ளது.  2019-ல் இந்த எல்லை உடைக்கப்பட்டு ஏறினால், அது வலுவான ஏற்றமாக மாறி, 36000 என்ற புள்ளியை நோக்கி நகரலாம். கீழே 29150 என்ற புள்ளி வலுவான ஆதரவாக உள்ளது.

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

  வெள்ளி (விலை ஒரு கிலோவிற்கு)

வெள்ளி என்பது தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மூலப்பொருளாகவும் பார்க்கப்படுகிறது. வெள்ளி, தங்கத்தைவிட வலுவான உலோகம் ஆகும். வெள்ளி, பல்வேறு துறைகளில் வெப்பக்கடத்தியாகவும், மின்சாரக் கடத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் முக்கியமான உபயோகப் பொருளாக மாறி விட்டது. இதனுடைய மருத்துவக் குணங்களும், மருத்துவத் துறையில் பயன்படுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வெள்ளியின் தொழிற்சாலை உபயோகம் தவிர்த்து ஆபரணங்கள், வெள்ளி பார்கள், வெள்ளிக் காசுகள் என்று வாங்கப்படுகின்றன.

வெள்ளி 2017-ம் ஆண்டு சுமார் 1.29% வருமானத்தைக் கொடுத்து இருக்கும்வேளையில், 2018-ம் ஆண்டு அதுவே -4.30% என்ற எதிர்மறையான வருமானத்தைக் கொடுத்துள்ளது.  வெள்ளி தங்கத்தைப் போல் நகர்வதாக எடுத்துக் கொண்டாலும், வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் தங்கம் ஏறியது, வெள்ளி இறங்கி உள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியும், 2018-ம் ஆண்டு ஒரு ஸ்பின்னிங் டாப் வகையான கேண்டிலைத் தோற்றுவித்துள்ளது. இது  நிச்சயமற்றதன்மையைக் குறிப்பதாகும்.

2019-ம் வருடத்தில் வெள்ளியின் தொழிற்சாலை உபயோகம் அதிகரித்தாலும், நுகரும் கலாசாரம் வெள்ளியின் தேவையை சற்றே குறைத்துள்ளது.  வெள்ளி தற்போது 35500 என்ற எல்லையை முக்கிய ஆதரவாகக் கொண்டுள்ளது. இந்த எல்லை உடைக்கப்பட்டால் விலை நன்கு இறங்கலாம். மேலே 38850 என்ற எல்லையைத் தாண்டும்போது வலிமை பெறலாம். 41450 என்ற இலக்கை நோக்கி நகரலாம்.

   கச்சா எண்ணெய்

2018-ம் ஆண்டு கச்சா எண்ணெய்க்கு ஒரு வித்தியாசமான ஆண்டாகவே அமைந்திருந்தது.  2018 ஜனவரி மாதம் 3858 என்ற விலையில் ஆரம்பித்த கச்சா எண்ணெய், அடுத்தடுத்த மாதங்களில் படிப்படியாக ஏற ஆரம்பித்தது. இடையே ஒரு சில மாதங்களில் விலை தேக்கநிலையில் இருந்தாலும், அதற்கு அடுத்துவரும் மாதங்களில் விலை ஏறியது. 2018 அக்டோபர் மாதம் உச்சமாக 5669-ஐ தொட்டது. அதன்பிறகு, கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. 2018 டிசம்பரில் 3077 என்ற புள்ளியை நோக்கி இறங்கியது.  வருடத்தின் அடிப்படையில் சுமார் 20% விலை குறைந்து இருந்தாலும், இதன் உச்சத்திலிருந்து கணக்கிட்டால், 40% மேலாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளதைக் காணலாம்.

டெக்னிக்கலாகச் சொல்வதாக இருந்தால், 2018-ல் கச்சா எண்ணெய் ஷூட்டிங் ஸ்டார் உருவமைப்பைத் தோற்றுவித்துள்ளது. இந்த கேண்டில் 2018-ல் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதைக் காட்டுவது மட்டும் அல்லாமல், வரக்கூடிய காலங்களில் இதன் விலை இன்னும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.

கமாடிட்டி... 2018-ல் எப்படி இருந்தது... 2019-ல் எப்படி இருக்கும்?

   அடிப்படை உலோகங்கள்

அடிப்படை உலோகம் என்று சொல்லும்போது காப்பர், நிக்கல், லெட், ஜிங்க், அலுமினியம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  அடிப்படை உலோகங்களைப் பொறுத்தமட்டில், அவை முழுவதும் தொழிற்சாலை உபயோகங் களைச் சார்ந்தது ஆகும்.

2018-ஐ பொறுத்தவரை, அடிப்படை உலோகங் களின் விலை பெரும் சரிவையே சந்தித்தது.  நாம் மேலே தந்துள்ள சொன்ன உலோகங்களைப் பார்க்கும்போது, குறைந்தபட்சமாக 7% முதல் அதிகபட்சமாக சுமார் 16% வரை இறங்கியுள்ளதைப் பார்க்கிறோம். முடிவு விலை அடிப்படையில் நாம் இந்த விலை வீழ்ச்சியைப் பார்த்தாலும், இதன் உச்சத்தைக் கணக்கில் கொண்டால், நிக்கல், அலுமினியம் போன்றவை மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதைக் காணலாம்.

டெக்னிக்கலாகச் சொன்னால், நிக்கல் மற்றும் அலுமினியம் போன்றவை ஷூட்டிங் ஸ்டார் வகை கேண்டிலைத் தோற்றுவித்து, விலை வீழ்ச்சியை உறுதி செய்துள்ளது.  மற்ற உலோகங் கள் எல்லாம் ஸ்பின்னிங்டாப் வகை கேண்டிலைத் தோற்றுவித்து, நிச்சயமற்ற தன்மையை நிரூபித்துள்ளது.  

உலகப் பொருளாதார நிலை மந்தமாக இருப்பதும், குறிப்பாக, உலோங்கங்களை அதிக அளவில் வாங்கும் சீனாவின் பொருளாதார நிலை வளர்ச்சி குன்ற ஆரம்பித்துள்ளது. 2019-ல் அடிப்படை உலோகங்கள் இன்னும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.

2019-ம் ஆண்டில் உலக வங்கி உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் உலகப் பொருளாதார வளர்ச்சியை 25 - 50 பேசிஸ் புள்ளிகள் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2019-ம் ஆண்டின் ஆரம்பம் அடிப்படை உலோகங்கள் விலையில் ஒரு மந்தநிலையையே தொடர வாய்ப்புள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism