Published:Updated:

முதலீட்டு மந்திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்!

இன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தைச் சேமித்துவைத்து திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது. அத்தகைய வெற்றிக்கான விழிப்பு உணர்வை ஊட்டுவதே, 'மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டமாகும்.

முதலீட்டு மந்திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்!
முதலீட்டு மந்திரங்கள் -ராஜபாளையத்தில் மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புஉணர்வுக் கூட்டம்!

பங்குச்சந்தை முதலீட்டுக்கு முதன்முறை வருபவர்கள், அனுபவக்குறைவு காரணமாக அதிக ரிஸ்க்கில்லாத, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கவனிக்கவேண்டிய விஷயங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய வகைகள், யார் யாருக்கு எந்த வகையான முதலீட்டுத்திட்டம் பொருத்தமாக இருக்கும், முதலீட்டுக் காலங்களை எப்படித் தேர்வுசெய்வது போன்ற சூட்சுமங்களைக் கற்றுத் தெளிவுபெறுவதற்காக நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சார்பாக விழிப்பு உணர்வுக் கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெறவுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தைச் சேமித்துவைத்து திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது. அத்தகைய வெற்றிக்கான விழிப்பு உணர்வை ஊட்டுவதே, `மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்' என்னும் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டமாகும்.

வரும் ஜனவரி 27, 2019, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் 1 மணி வரை, ராஜபாளையம் தலைமை தபால் நிலையம் எதிரிலுள்ள ஆனந்த் திருமண மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முந்துபவர்களுக்கே முன்னுரிமை.