Published:Updated:

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!
பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

இந்த வார நாணயம் விகடன்  படிக்க: https://bit.ly/2DT48gt

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!


2019-20-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்தான். இதில் எந்தப் பெரிய அறிவிப்பும் இருக்காது. அப்படி அறிவித்தால், அது ஜனநாயக மரபுகளை மீறக்கூடிய செயலாக இருக்கும் என முன்னாள் நிதி அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் உட்பட பலரும் எச்சரித்தனர். இந்த நிலையில், பியூஷ் கோயல் தாக்கல் செய்திருக்கும் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் அறிவிப்புகளை ஏதும் வெளியிடாமல் ஜனநாயக மரபின்படி நடந்திருக்கிறார். தனக்குக் கிடைத்திருக்கும் மிகக் குறைந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி, பா.ஜ.க அரசின்மீது மக்களுக்கு இருந்த சிறு அதிருப்தியையும் தன்னால் முடிந்த அளவுக்குத் தணிக்க முயற்சி செய்திருக்கிறார் நிதி அமைச்சர்...

- 2019-20-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் குறித்த சிறப்புப் பார்வையை முன்வைக்கிறது 'சம்பளதாரர்கள்... விவசாயம்... ரியல் எஸ்டேட்... சலுகைகளை வாரி வழங்கிய தேர்தல் பட்ஜெட்!'

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

``மேலோட்டமாகப் பார்த்தால், ரூ.5 லட்சம் வரை வரி இல்லை என்பது அனைவருக்கும் லாபமானதாகத் தோன்றும். இந்தச் சலுகையை மத்திய அரசு, வரித் தள்ளுபடி என்கிற பெயரில்  வருமான வரிப் பிரிவு 87ஏ-ன் கீழ் வழங்கப்போகிறது. ஏற்கெனவே, இந்தப் பிரிவின் கீழ் ரூ.3.5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 வரித் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.5 லட்சம் வரை வரிக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ.12,500 வரை வரி தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது. அடிப்படை வருமான வரி வரம்பு (5%, 20%, 30%) அடுத்த நிதி ஆண்டு வரைக்கும் தொடரும் என நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். காரணம், இடைக்கால பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பை (tax slab) மாற்ற முடியாது. அடிப்படை வருமான வரம்பில் மாற்றம் செய்தால்தான் அனைத்து வரிதாரர்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும். அந்த வகையில், நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பால் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்தைத் தாண்டுபவர்களுக்கு எந்தச் சலுகையும் கிடையாது."

- 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் சம்பளதாரர்களுக்கு எந்த அளவுக்கு லாபம் தரும் என்பதை எளிதாகப் புரியவைக்கிறது 'பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்?' எனும் கட்டுரை.
 

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

> கடன் வாங்கும்போது, கடனுக்காக விதிக்கப்படும் நிபந்தனைகளை முழுவதுமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வட்டி எவ்வளவு, குறிப்பிட்ட காலத்துக்குமுன்பே கடனைத் திரும்பக் கட்ட முடியுமா என்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

> முதலீட்டைக் குறுகிய காலத்துக்கானதாகப்  பார்க்காமல், பங்குச் சந்தை முதலீட்டை நீண்ட கால முதலீடாகப் பார்க்க வேண்டும். நீண்டகால முதலீட்டின்போது ஏற்றத் தாழ்வுகளையும் தாண்டி வருமானம் பார்க்க இயலும். சந்தை ஏற்ற இறக்கத்தைப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவும் எடுக்கக்கூடாது. 

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2G7SAZ6

> ``காணாமல்போகும் நிறுவனங்கள் என்பது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, ஐ.பி.ஓ மூலம் நிதி திரட்டி, இரண்டாண்டுகள் செயல் பட்டபின், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியில் நிறுவனமே இல்லாமல் போவதாகும். இப்படியான நிறுவனங்களின் எண்ணிக்கை மண்டல வாரியாகக் கிடைக்கிறது...

- முதலீடு குறித்த நமது தவறான எண்ணங்களைத் தவிடுபொடியாக்கி, சரியான முதலீடு எது என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது ``பாதுகாப்பான முதலீடு... காணாமல்போகும் கம்பெனிகள், ஜாக்கிரதை!' எனும் செய்திக் கட்டுரை. 

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

* சம்பளதாரர் வாடகை வீட்டில் வசிக்க வேண்டும். சொந்த வீட்டிலோ, வாடகையில்லாக் குடியிருப்புகளிலோ வசிப்பவராக இருக்கக் கூடாது.

* குடியிருக்கும் வாடகை வீட்டின் சொந்தக்காரருக்குச் சம்பளதாரர் ஓர் ஆண்டு முழுவதும் கொடுத்த வீட்டு வாடகையானது, அவர் அந்த நிதியாண்டு முழுவதும் பெற்ற சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் (சம்பளம் என்பது அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி மட்டுமே).

* இதன் அடிப்படையில் வீட்டு வாடகை அலவன்ஸுக்கான வரிச் சலுகையானது கீழ்க்கண்ட மூன்று இனங்களில் எந்தத் தொகை குறைவோ, அந்தத் தொகை மட்டுமே சலுகை பெறும். சலுகைத் தொகை போக, மீதமுள்ள வீட்டு வாடகையைச் சேர்த்து வருமான வரி கணக்கிடப்பட வேண்டும்...

- வரப்போகும் புதிய நிதியாண்டுக்கு, பட்ஜெட்டில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள வரிச் சலுகைகளை எடைபோடும் தருணம் இது என்பதால், 
'வேறுபடும் வீட்டு வாடகை அலவன்ஸ்... மாறுபடும் வரிச் சலுகை!' முக்கிய வழிகாட்டுதலைத் தருகிறது. 

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

* பணிபுரிபவர்கள் அனைவரும் தாங்கள் செய்யும் வேலையில் இருக்கும் சவால்கள் குறித்து, தங்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் தெளிவான தொடர்ச்சியான தொடர்பு (Constant communication) இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* பணியாளர்கள் முழுமையான நேர்மையுடன் செயல்பட வேண்டும். உள்ளதை உள்ளபடி அனைவரிடத்தும் காலதாமதம் இல்லாமல் ஒளிவு மறைவின்றி சொல்ல வேண்டும்.

* பணியாளர்கள்  தங்களிடம் இருக்கும் உண்மையான தகவலின் அடிப்படையிலான அபிப்ராயங்களைத் தைரியமாக வாதிடத் தயாராக இருக்க வேண்டும்.

* பணியாளர்கள்  நிறுவனத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர, தாங்கள் நினைத்ததோ, சொல்லியதோ சரி என்பதை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

- ஒரு நிறுவனம் லாபம் சம்பாதிக்கத் திணறுகிறது என்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒரு முக்கியமான காரணம், ஊழியர்கள் முழுச் சுதந்திரம் இல்லாமல், முழுப் பொறுப்பு உணர்வுடன் செயல்பட முடியாமல் இருப்பதாகும். ஊழியர்களுக்கு எப்படி முழுச் சுதந்திரத்தைத் தந்து, முழுப் பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்வது என்பதைச் சொல்லும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் தலைமைப் பணியாளர் திறன் அதிகாரியாகப் பணியாற்றிய மெக்கார்ட் என்கிற பெண்மணி எழுதிய ‘பவர்ஃபுல்' என்கிற புத்தகத்தில் முக்கிய அம்சங்களை அடுக்குகிறது `சுதந்திரத்துடன் கூடிய பொறுப்பு... உங்கள் நிறுவனத்தை வளர்க்கும் புதிய உத்தி!' எனும் கட்டுரை.

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

தற்போதைய சூழ்நிலையில், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும் சிறுமுதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

> “சந்தையில் நடக்கும் ஏற்றம் இறக்கம் கண்டு கலங்கவேண்டாம். நீங்கள் திட்டமிட்டபடி, உங்கள் அஸெட் அலோகேஷன்படி முதலீட்டைத் தொடருங்கள். அதிலிருந்து சிறிதும் மாற வேண்டாம். முதலீடு செய்துவிட்டு அது வளர்வதற்குக் காலஅவகாசம் கொடுத்துக் காத்திருங்கள். 

சந்தையில் நேரம் காலம் பார்த்து  முதலீடு செய்ய முயற்சி செய்ய வேண்டாம். பங்குச் சந்தையை யாராலும் மிகச் சரியாக கணிக்க முடியாது. நீங்கள் வகுத்த முதலீட்டுப் பாதையில் விலகாமல் சென்றால்தான் லாபம் சம்பாதிக்க முடியும்." 

நிதித் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவருமான (ஈக்விட்டி) நிமேஷ் சந்தன் அளித்த சிறப்புப் பேட்டியில் `முதலீடு வளர்வதற்கு கால அவகாசம் கொடுங்கள்!' என்பன உள்ளிட்ட கருத்துகளை வழங்கியிருக்கிறார்.

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

செபியின் சமீபத்திய விதிமுறைகளின்படி, எந்தத் துறை சார்ந்த ஃபண்டும், குறிப்பிட்ட அந்தத் துறையின் பங்கு மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளில் குறைந்தபட்சமாக 80 சதவிகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, ஹெல்த்கேர் துறை ஃபண்டுகளும் குறைந்தபட்சமாக 80 சதவிகிதத்தை ஹெல்த்கேர் துறை சார்ந்த முதலீடுகளில் வைத்திருக்க வேண்டும். 

துறை சார்ந்த முதலீடுகளில் பொதுவாக, ரிஸ்க் அதிகம். ஆகவே, புது முதலீட்டாளர்கள் துறை சார்ந்த ஃபண்டுகளைத் தவிர்ப்பது நல்லது. புது முதலீட்டாளர்களுக்கு டைவர்சிஃபைடு ஃபண்டுகளே சிறந்தது. சில சமயங்களில், ஒரு துறை சுழற்சியை முழுவதுமாகக் காண்பதற்கு பல ஆண்டுகள்கூட ஆகலாம். முதலீட்டு அனுபவம் உள்ளவர்கள் இதுபோன்ற துறை சார்ந்த ஃபண்டுகளில், வேல்யூவேஷன் கவர்ச்சிகரமாக இருக்கும்போது முதலீடு செய்யலாம். தற்போது ஹெல்த்கேர் துறையின் வேல்யூவேஷன் கவர்ச்சிகரமாக உள்ளது. 

- செக்டோரல் வகை ஃபண்டுகளில் ஆரோக்கியத்தைப் பேணும் ஹெல்த்கேர் துறை சார்ந்த ஃபண்டுகளைப் பற்றி விரிவாகப் பேசுகிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடரின் 'செக்டோரல் ஃபண்டுகள்... நீண்ட காலத்தில் கைகொடுக்கும் ஹெல்த்கேர்!' எனும் பகுதி.

பட்ஜெட்டும் லாபமும்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 அம்சங்கள்!

அடித்தட்டு மக்களுக்கு வாழ்க்கை என்பது கடினமான ஒன்றாக இருக்கிறபோதிலும், அவர்களின் வாழ்க்கைத்தரம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வருகிறது.  இந்த உயர்வு என்பது பின்தங்கிய மாநிலங்கள் என்று நாம் நினைத்துப் பார்க்காத மாநிலங்களிலும்கூட நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இதே நிலைதான் சி.இ.ஓ-களின் பேச்சுகள் குறித்து நீங்கள் படிக்கும்போதும். மேலெழுந்த வாரியாக நீங்கள் சி.இ.ஓ-களின் பேச்சைப் படித்தால், அதிரடிச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படாவிட்டால் நிறுவனங்களின் முன்னேற்றம் கடினமான ஒன்றாகிவிடும் என்பதைப் போன்ற தோற்றமே நம்முடைய மனதில் உருவாகும். நாம் பிறந்த காலத்திலிருந்தே எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்தப் பாட்டையே பாடி வருவதால் (அதை நாம் கேட்டும் வருவதால்) நம்முடைய மனநிலையும் அப்படியே ஆகி விட்டது. இந்தப் பாட்டை பாடும் புரமோட்டர்களே மற்றொரு புறம் ஸ்டார்ட்அப்களில் முதலீடுகளைச் செய்துகொண்டும், மும்பையில் பங்களாக்களையும், வளமான கிராமப்புறங்களில் பண்ணை வீடுகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்...

- செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் கிட்டத்தட்ட 80% முதலீட்டாளர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லாதவையாக இருக்கின்றன. மீதமுள்ள 20% செய்திகளுமே புரமோட்டர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுகளை (நடவடிக்கைகளை அல்ல) சொல்பவையாகவே இருக்கின்றன. இந்தச் சூழலில் செய்தித்தாள்களை முதலீட்டாளர்கள் எப்படி அணுகுவது என்ற வழிகாட்டுதலைத் தருகிறது `காபி கேன் இன்வெஸ்ட்டிங்' தொடரின் `முதலீட்டாளர்களின் கவனத்துக்கு... செய்திகள் சொல்லும் உண்மை என்ன?' எனும் பகுதி. 

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2G7SAZ6