Published:Updated:

500 புள்ளிகள் உயர்வை தொட்ட சென்செக்ஸ்!

500 புள்ளிகள் உயர்வை தொட்ட சென்செக்ஸ்!
500 புள்ளிகள் உயர்வை தொட்ட சென்செக்ஸ்!

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முடிவடையும் நேரத்தில், சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வடைந்து, 20, 200 ஐ தொட்டது.

சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில், குறிப்பாக வங்கிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் மற்றும் உலோக துறை பங்குகளை வாங்க மிக அதிக ஆர்வம் காட்டியதால், சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டன.

இதேப்போன்று தேசியப்பங்குச் சந்தையிலும் நிப்டி 152 புள்ளிகள் வரை உயர்வடைந்து 6,148 ஐ தொட்டது.

மும்பை பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்த தகவலின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 420.99 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கியதாக தெரியவந்துள்ளது.