Published:Updated:

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!
ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

இந்த வார நாணயம் விகடன்: https://bit.ly/2DwDx7r

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

* விற்காத வீடுகள் - பில்டர்களுக்குச் சலுகை: தற்போது ரியல் எஸ்டேட் பில்டர்கள் / டெலவப்பர்களால் கட்டிமுடிக்கப்பட்டு, நிறைவுச் சான்றிதழ் பெற்ற நிலையில், விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளுக்கு வாடகையில் ஓராண்டு வரை வருமான வரி கட்டுவதில் வரிச் சலுகை இருக்கிறது...

* சொந்தப் பயன்பாடு - இரண்டு வீடுகளுக்கு வருமான வரிச் சலுகை: இரண்டாவது வீட்டை அதன் சொந்தக்காரர் தனது சுய பயன்பாட்டுக்கு அல்லது அப்பா / அம்மாவின் குடும்ப பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றால், வருமான வரி கட்ட வேண்டியதில்லை என மாற்றப்பட்டிருக்கிறது...

* வீட்டு வாடகைக்கான டி.டி.எஸ் வரம்பு உயர்வு: மத்திய இடைக்கால பட்ஜெட்டில், வீட்டு வாடகையில் பிடிக்கப்படும் டி.டி.எஸ்-க்கான வரம்பு ரூ.1.80 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்படுகிறது... 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

* ரூ.2 கோடி வரையிலான மூலதன ஆதாயம் மூலம் வாழ்நாளுக்குள் ஒருமுறை, ஒருவர் இரண்டு வீடுகள் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது...

- ரியல் எஸ்டேட் துறை மீண்டும் சுறுசுறுப்படைவதற்குப் பல அறிவிப்புகளை மத்திய இடைக்கால பட்ஜெட் வெளியிட்டிருக்கிறது. 
அந்த ஆறு அறிவிப்புகள் பற்றி விளக்கமாகப் பார்க்கிறது 'பட்ஜெட் சலுகைகள்... ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்குமா?' எனும் கவர் ஸ்டோரி. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

"மத்திய அரசின் 'ஜெம்' இ-மார்க்கெட்டிங் தளத்தில் பதிவு செய்தபின் தினமும் ஆர்டர் ஏதாவது வந்திருக்கிறதா என்று மெயிலைப் பார்ப்பேன்.  ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் சோர்ந்து போகாமல் தினமும் கவனித்தேன். மூன்று மாதத்துக்குப் பிறகு டெல்லியிலுள்ள ஹெல்த் டிபார்ட்மென்டிலிருந்து பத்து ஸ்டாம்ப் பேடுகள் கேட்டு ஆர்டர் வந்தது. 250 ரூபாய்க்கான ஆர்டராக இருந்தாலும் முதல் ஆர்டர் என்பதால், அதைச் சரியான முறையில் அனுப்பி வைத்தேன். அதைத் தொடர்ந்து வரிசையாக ஆர்டர்கள் வரத் தொடங்கின. 

இந்த நிலையில்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து இரண்டு தெர்மோ ப்ளாஸ்க் வேண்டுமென ஆர்டர் வந்தது. இந்த ஆர்டரை அனுப்பும்போது பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். காரணம், பிரதமர் உருவாக்கிய இ-மார்க்கெட்டிங் தளத்தில், அவர் கொடுத்த முத்ரா லோன் மூலம் அவருக்கே பொருள்கள் அனுப்புகிறோமே என்கிற சந்தோஷம். என் கடிதத்தைப் படித்துப் பார்த்த பிரதமர் 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் அதைப்பற்றி எடுத்துச் சொன்னார். அதன்பிறகுதான்  பலருக்கும் இந்த இ-மார்க்கெட்டிங் இணையதளம் பற்றித் தெரிந்தது..." 

- பிரதமர் மோடி சமீபத்தில் மதுரை வந்தபோது அருள்மொழி சரவணனை சந்தித்ததைத்தான் எல்லோரும் வியந்து பேசினார்கள். பெருந்தொழிலதிபர்கள் மதுரையில் இருக்கும்போது, அருள்மொழியைப் பிரதமர் சந்தித்தது ஏன்? - இதற்கான விடையையும், அருள்மொழியின் முழுமையான அனுபவப் பகிர்வையும் நமக்குத் தருகிறது 'சிறு வியாபாரிகளுக்கு உதவும் ஜெம்... மதுரையிலிருந்து கலக்கும் அருள்மொழி!' எனும் சிறப்புச் செய்திக் கட்டுரை. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

அனில் அம்பானிக்கு வேறு யாருமே எதிரி இல்லை என்ற நிலையில், அவரது சொந்த  அண்ணனே அவருக்கு வில்லனாக மாறினார். முகேஷ் அம்பானியின் ஜியோ வருகை வரை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஓரளவுக்குச் செயல்பட்டு வந்தது. அதுவரையில் கடன் இருந்தாலும், அவற்றை ஈடுகட்டும் வகையில் வருமானமும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு இருந்தது. ஆனால், ஜியோ வருகையானது, தொலைத் தொடர்புக்கான சந்தை சூழ்நிலையை வேறு விதமாக மாற்றியது...

ஆர்.காம் நிறுவனம் திவாலுக்கு விண்ணப்பித்தி ருப்பதால், அனில் குழுமத்தின் இதர நிறுவனங் களும் சிக்கலில் இருக்கின்றன.  அனில் குழுமத்தின் அனைத்துப் பங்குகளும் தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன. ஆர்.பவர், (-35%), ஆர்.கேப்பிட்டல் (-20%), ஆர்.இன்ஃப்ரா (-15%) மற்றும் குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் சரிவைச் சந்தித்தன. அனில் குழும முதலீட்டாளர்களுக்குக் கடந்த திங்கள்கிழமை மட்டும் ரூ.6,300 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் இந்த குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.38,500 கோடி அளவுக்குச் சரிந்திருக்கிறது...

- அனில் அம்பானிக்குச் சொந்தமான ஆர்.காம் தன்னுடைய இறுதி நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் முழுமையான பின்னணியைத் தெளிவாக அலசுகிறது 'கடன் தீர்ப்பாயத்தில் விண்ணப்பம்... ஆர்.காமின் முடிவு நெருங்குகிறதா?' எனும் சிறப்புக் கட்டுரை. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

இயல்பு 2: மொத்தமாக பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய யோசிக்கும் நாம், இரண்டாயிரம், இரண்டாயிரமாக ஐந்து முறை செலவழிக்க அஞ்சுவதில்லை என்பதற்கும் இந்த மனக் கணக்கியல்தான் காரணம்...

- இந்த வருட பிப்ரவரி 14 வந்துகொண்டிருக்கிறது. காதலர் தினம் என்றும், வேலன்டைன்ஸ் டே என்றும் உணர்வு பூர்வமாகக் கொண்டாடப்படுகிறது இந்த தினம்.  காதலர்களைச் சேர்த்து வைப்பதையே லட்சியமாகக் கொண்டு, அதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்த வேலன்டைன் என்ற எளிய பாதிரியின் பெயரால் கொண்டாடப்படும் இந்த நாளில் உலகளவில் செலவாவது சுமார் ரூ.2,000 கோடி...

சரி, தவறு என்ற விவாதங்களைத் தாண்டி, இளம் வயதினரின் நிதிநிலை மீது இதுபோன்ற கொண்டாட்டங்களின் தாக்கமும், அனைத்துக்கும் காரணமாக விளங்குகிற மனித இயல்புகளும் உண்மையிலேயே ஆச்சர்யம் அளிப்பவை. அந்த நான்கு இயல்புகளை விவரிக்கிறது 'காதலர் தினமும் காசுக் கணக்கும்!' எனும் சிறப்புப் பார்வை. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

கடந்த சில வாரங்களில் ஜீடெலி, ஆர்.காம் போன்ற நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக இறங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம், இந்த நிறுவனங்களின் புரமோட்டர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பெருமளவில் அடமானம் வைத்து, அந்தப் பங்குகளைத் திரும்பப் பெறமுடியாமல் போனதால்தான்.

பங்கு அடமானம் என்பது எல்லா நிறுவனங்களும் செய்வதுதான் என்றாலும், அதிக அளவில் அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை புரமோட்டர்களே மீண்டும் திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்படுவது ஆரோக்கியமான போக்கல்ல. புரமோட்டர்கள் பங்குகளை அடமானம் வைக்கவேண்டியதற்கான தேவைகள் என்ன, இதனால் சிறு முதலீட்டாளர் களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது குறித்து பார்ப்பதுடன், உரிய வழிகாட்டுதலையும் வழங்குகிறது 'பங்கு அடமானம்... முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணி!' எனும் கட்டுரை. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

"...கார்கில் போர், சர்வதேசப் பொருளாதார நெருக்கடி மற்றும் 2016-ல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை என எத்தகைய பெரிய அளவிலான இடர்பாடுகளையும் சமாளித்து, இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவருகிறது. 

அந்த வகையில், வரவிருக்கும் நாள்களில் தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகள் மற்றும் நுகர்வோர் துறை சார்ந்த பங்குகளின் செயல்பாடு நன்றாக இருக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அவற்றில் கவனம் செலுத்தலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்."

- இது மட்டுமின்றி சுஸ்லான் எனர்ஜி ஒரே நாளில் பங்கு விலை 43% வீழ்ச்சி கண்டுள்ளதன் பின்னணி, பல முன்னணிப் பங்குகளின் இலக்கு விலை உயர்த்தப்பட்டிருப்பதன் காரணம், ஏர்டெல் நிறுவனத்தின் தர மதிப்பீடு குறைந்துள்ளதன் காரணம் உள்ளிட்ட சந்தேகங்களைத் தீர்க்கிறது 'ஷேர்லக்' பகுதி. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள், கடன் சார்ந்த வகையாகும். இவை அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த வகை ஃபண்டுகள் ரீடெய்ல் முதலீட்டாளர் களிடம் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. 

இந்த வகை ஃபண்டுகள் குறுகிய காலத்திற்குக் கடன் கொடுக்கின்றன. இந்த வகை ஃபண்டுகள் கடன் மற்றும் மணி மார்க்கெட் உபகரணங்களில் முதலீடு செய்கின்றன. இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவின் வெயிட்டட் ஆவரேஜ் மெச்சூரிட்டி 3 – 6 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறையாகும். 

பொதுவாக, இந்த வகை ஃபண்டுகள் டிரஷரி பில்ஸ், கமர்ஷியல் பேப்பர், கால் மணி, சர்ட்டிஃபிகேட் ஆஃப் டெபாசிட், கமர்ஷியல் பில், டிபஞ்சர்கள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.

- அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள் குறித்த விரிவான பார்வையுடன் சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறது 'ஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை!' தொடரின் 'குறுகிய காலத்துக்கு ஏற்ற அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகள்!' எனும் பகுதி. 

ரியல் எஸ்டேட் to பங்கு முதலீடு: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 8 கைடன்ஸ்!

பெரு நகரங்களில் நாங்கள் சந்தித்த பலரும் 'ஒயிட் காலர்' எனப்படும் அலுவலகப் பணியாளர்கள். அவர்கள் தங்களுக்கு நிலையான (சரியோ/தவறோ!) வருமானம் தொடரும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதேசமயம், சிறு நகரங்களில் நாங்கள் சந்தித்த பலரும் சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் களாவார்கள். அவர்கள் அவர்களுடைய திறமை யின் அடிப்படையிலேயே வாழ்க்கையை நடத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்கள் செய்யும் தொழிலில் அன்றாடம் பல்வேறு ஏற்ற, இறக்கச் சூழல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளனர். அதனாலேயே பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குறித்து உடனடிப் புரிந்து கொள்ளலும், முறையாகச் செய்யப்படும் முதலீடு களில் இருக்கும் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் சுலபத்தில் புரிந்துகொள்கிறார்கள். 

- இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு, ஓய்வூதியக் கணக்கு, முதலீட்டில் பாதிப்புகள் உள்ளிட்ட பல அம்சங்களையும் ஆராய்ந்து சொல்கிறது 'காபி கேன் இன்வெஸ்ட்டிங்' தொடரின் 'சிறு நகரங்களிலும் அதிகரிக்கும் முதலீடுகள்... அதிரடி மாற்றங்கள்!' எனும் பகுதி. 

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2ByY1ML