Published:Updated:

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!
ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

இந்த வார நாணயம் விகடன்: https://bit.ly/2Nj0MGR

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

1. உங்களின் கடன்களை மிகச் சிறியது முதல் பெரியது வரை முதலில் பட்டியலிடுங்கள்.

2. மிகக் குறைவான கடன் தொகையைத் தவிர்த்து, பாக்கி அனைத்துக் கடன் தொகைகளுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடவும்.

3. உங்களின் சிறிய கடன் பட்டியலைப் பார்த்து அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தையும் செலுத்திவிடவும். 

4. கடன் முழுமையாகக் கொடுக்கப்படும் வரை ஒவ்வொரு கடனையும் செலுத்தவும்.  

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

5. உங்களுக்கு ஏதாவது கூடுதல் பணம் கிடைத்தால், அதையும் முதலில் மிகக் குறைந்த கடனைச் செலுத்துவதற்கு இதே முறையைப் பயன்படுத்துங்கள்.

- நீங்கள் படிப்படியாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய இந்தச் செயல்முறையை உதாரணத்துடனும், செயல்திட்டத்துடன் விளக்கி வழிகாட்டுகிறது 'கடன் தொல்லை... விடுபடுவது எப்படி? - ஸ்னோபால் வழிமுறைகள்' எனும் அசத்தலான கவர் ஸ்டோரி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஜி-மெயில் சேவையே ஒரு சாஸ் சேவைதான். முன்பு இருந்ததுபோல ஒவ்வொரு கணினியிலும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும், அவை அனைத்துக்கும் கட்டணம் செலுத்த வேண்டும், ஒவ்வொரு முறையும் நாமாகப் பார்த்து மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் இதில் இல்லை. இணையம் மட்டும் இருந்தால்போதும்; மற்றவையெல்லாம் சாஸ் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். அதேபோல மென்பொருள் சேவை முழுமைக்கும் பணம் செலுத்தாமல், நாம் எந்தளவுக்குப் பயன்படுத்துகிறோமோ அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இன்றைக்கு அலுவலகங்களில் பயன் படுத்தப்படும் அக்கவுன்ட்டிங், மின்னஞ்சல், வாடிக்கையாளர் சேவை, பில்லிங், திட்டமிடல் மென்பொருள்கள் என அனைத்திற்குமே இந்த சாஸ் மென்பொருள்கள்தான் கைகொடுக்கின்றன. 

- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் இந்தியாவின் டெட்ராய்டு... இவை இரண்டுமே இருப்பது நம் தமிழகத்தில்தான். இரண்டுமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சான்று. இந்தப் பட்டியலில் புதிதாக `சாஸ்' (SaaS - Software as a service) தலைநகரம் சென்னை என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். அந்தளவுக்கு மென்பொருள் சந்தையில் இந்திய அளவில் கோலோச்சுகின்றன சென்னையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனங்கள். தமிழகத்திலும் ஒரு சிலிக்கான்வேலி உருவாவதற்கான விதைதான் இந்த சாஸ் நிறுவனங்களின் வெற்றி. இதுகுறித்த 'சாஸ் நிறுவனங்களின் தலைநகரமாகும் சென்னை!' எனும் விரிவான பார்வையைத் தவறவிடாதீர்கள்.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

ஆரம்பப் பள்ளியில் பெர்ஃபாமென்ஸ் காட்டாதவர்கள் பலரும் கல்லூரி வரை அதே நிலையிலேயே தொடர்ந்துவிடும் நிலைமையையே நாம் கண்கூடாக காண்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், ஒரு மாணவரை நாம் சூப்பர் என்றோ அல்லது உதவாக்கரை என்றோ தரம் பிரித்துவிட்டால் நம்முடைய சமூகம் சூப்பரை சூப்பராக வளர்த்தெடுக்கவும், உதவாக்கரையை மேலும் உதவாக்கரையாக்கவும் என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டுமோ அதை கனகச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஒருமுறை ஒரு மாணவரைக் குறைவான மதிப்பீடு செய்துவிட்டால், அதனுடைய விளைவுகள் பெரிதாகிக்கொண்டே போகும். மதிப்பெண் குறைவு என்பது பெற்றோருக்குச் சொல்லப்படும். அது அவர்களுக்குக் கவலையளிக்கும். இவன் உருப்படமாட்டானோ என்ற எதிர்மறை எண்ணம் தோன்றும்.

- முழு கவனத்துடன் நாம் எந்தவொரு விஷயத்தையும் கற்றுக்கொள்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். கவனத்துடன் கற்றுக்கொள்வதின் மகத்துவத்தைத்தான் சொல்லித் தருகிறது எல்லென் ஜே லாங்கர் எனும் பெண்மணி எழுதிய 'தி பவர் ஆஃப் மைண்ட்ஃபுல் லேர்னிங்' எனும் புத்தகம். அதன் சிறப்பு அம்சங்களை நமக்கு கச்சிதமாக எடுத்து வைக்கிறது `கவனத்துடன் கற்கும் சூட்சுமம்!' எனும் நாணயம் புக் செல்ஃப் பகுதி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

கடந்த சில ஆண்டுகளாகவே அனில் அம்பானி சிக்கலில்தான் இருக்கிறார். இருந்தாலும், கடந்த சில வாரங்களாக பலமுனைகளிலிருந்தும் வரும் பிரச்னைகளால் அனில் தாக்கப்படுகிறார். தற்போது அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக ரஃபேல் ஒப்பந்தம் மாறியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் பெயர் அடிப்படுகிறது. இது அரசியல் ரீதியான பிரச்னை என்றாலும், அனில் அம்பானியின் பெயர் தேவையில்லாமல் அடிபடுகிறது என்று வைத்துக்கொண்டாலும் மேலும் இரண்டு பிரச்னைகளில் அவர் சிக்கியிருக்கிறார். கடந்த வாரங்களில் அவையும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

- எரிக்ஸன் வழக்கு, எடில்வைஸ் வழக்கு, மோசமான நிதி நிலைமை, சரியும் சந்தை மதிப்பு என பல கோணங்களில் 'பலமுனைத் தாக்குதலில் அனில் அம்பானி... தொடரும் சிக்கல்கள்!' குறித்து அலசுகிறது சிறப்புக் கட்டுரை. மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

"முதல்முறையாக பங்குச் சந்தையில் அல்லது பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் பணத்தைப் போடுபவர்கள்,  முதலீட்டில் குறைவான ரிஸ்க் எடுக்கவே விரும்புகிறார்கள். அவர்களின் முதலீட்டுத் தொகை அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பதை விரும்புவதில்லை. இதுபோன்றவர்களுக்கு ஏற்றதாக நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஹைபிரீட் ஃபண்ட் இருக்கிறது. முதலீட்டாளர்கள் அவர்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் அஸெட் அலோகேஷன்படி பங்குச் சந்தை, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டைக் குறைந்தது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்கக்கூடாது. 

முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் இருக்கிறது. இந்த டைனமிக் ஈக்விட்டி ஃபண்டில் கடன் சார்ந்த ஆவண முதலீடு மற்றும் ஆர்பிட்ரேஜ் இருப்பதால் ஏற்ற இறக்கம் குறைவாக இருக்கும். நீண்ட காலத்தில் கடன் சார்ந்த ஃபண்டுகளைவிட அதிக வருமானம் கிடைக்கக்கூடும். அதேநேரத்தில், இந்த வருமானம் ஈக்விட்டி ஃபண்டை விட சற்றுக் குறைவாக இருக்கும். ரிஸ்க் என்று எடுத்துக்கொண்டால் ஈக்விட்டி ஃபண்டைவிடக் குறைவாக இருக்கும்."

- முதலீட்டு ஆராய்ச்சியில் ஒரு டஜன் ஆண்டுகளுக்குமேல் அனுபவம் கொண்டவரும், பி.என்.பி பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு தலைவருமான சொக்கலிங்கம் நாராயணன் அளித்த சிறப்புப் பேட்டியே 'முதல்முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஃபண்டுகள்!' இதில் மியூச்சுவல் ஃபண்டுகள் முதல் சிறுமுதலீட்டாளர்களுக்கான ஆலோசனை வரை பல விஷயங்களை நமக்குப் பகிர்ந்திருக்கிறார். மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

வீட்டுக் கடனாக 30 லட்சம் ரூபாயை 1999-ம் ஆண்டு 10% வட்டியில் 20 ஆண்டு கால கடனாகப் பெற்று, அதற்கு 1999-ம் ஆண்டு மார்ச் முதல் 28,951 ரூபாயை இ.எம்.ஐ–யாக மாதா மாதம் செலுத்துவதாக வைத்துக்கொள்வோம். 

அதே நேரத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தர வரிசையில் சிறந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டத்தில், நாம் செலுத்தும் இ.எம்.ஐ-யின் 10 சதவிகிதமான, 3,000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதாகவும் எடுத்துக்கொள்வோம்.

நாம் முதலீடு செய்திருக்கும், மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தின், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் (CAGR) சராசரி 15 சதவிகிதமாக இருந்தால், வீட்டுக் கடனுக்காக நாம் செலுத்தியிருக்கும் வட்டியைவிடக் கூடுதலாக ஆறு லட்சத்தை வருமானமாகப் பெற்றிருப்போம்.

நீங்கள் செலுத்த விரும்பும் இ.எம்.ஐ தொகையில் கூடுதலாக சுமார் 10% மட்டும் முதலீட்டிற்காக ஒதுக்கிவைத்தால், அது தரும் பலன் என்னவென்று புரிகிறதா..? 

- வீட்டுக் கடன் வாங்கும்போதே இன்னொரு சிறு புள்ளியைத் தொடங்கி வைத்தால் கவலைப்படத் தேவையே இல்லை. இந்த உத்தியை விரிவாகச் சொல்லி வழிகாட்டுகிறது 'வீட்டுக் கடன்... இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா!' எனும் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

பி.எஸ்.சி 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள 500 நிறுவனப் பங்குகளில் சுமார் 60 பங்குகள் கடந்த வாரத்தில், அவற்றின் 52 வார விலை இறக்கத்தில் வர்த்தகம் ஆனது. இந்தப் பங்குகள் இப்படி விலை குறைந்து வர்த்தகமாக என்ன காரணம், இந்தப் பங்குகளை ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தால் அதை விற்கலாமா அல்லது புதிதாக வாங்கி முதலீடு செய்யலாமா என்பது போன்ற பல கேள்விகள் முதலீட்டாளர்கள் இடையே எழுந்துள்ளன. 

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 500 நிறுவனங்களில் 437 நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாகி யுள்ளன. இதில், 193 நிறுவனங்களின் (44.2% நிறுவனங்கள்) நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருக்கின்றன. 105 நிறுவனங்களின் (24%) முடிவுகள் பாதகமாக வந்துள்ளன. 139 நிறுவனங்களின் (31.8%) முடிவுகள் பெரிய லாபமோ இழப்போ இல்லாத நடுத்தரமான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன.

- இந்தச் சூழலில், . உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்காமல், ஆய்வுசெய்து அதன் அடிப்படையில் முடிவெடுத்தால் வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்க சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகிறது '52 வார இறக்கத்தில் 60 பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?' எனும் கட்டுரை.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!

இந்த இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் வருமானம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்திருக்கும்.

அந்த வகையில், முதலீட்டின்மீது ரிஸ்க் எடுக்க கூடியவர்களுக்கு ஏற்றதாக இந்த ஃபண்ட்  இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் இந்த ரிஸ்க் என்பது பரவலாக்கப்பட்டுவிடுகிறது. 

இ.எல்.எஸ்.எஸ் செய்யப்பட்ட முதலீட்டை அதன் லாக்இன் பிரீயட் மூன்றாண்டுகள் முடிந்ததும் பெரும்பாலோர் எடுத்துவிடுகிறார்கள். அது தேவை இல்லை. பணத்தை எடுக்கும்போது முதலீடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையறிந்து எடுப்பது அவசியம்...

- பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். இதுகுறித்து விரிவாக வழிகாட்டுகிறது 'வருமான வரிச் சேமிப்பு... இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது?' எனும் அலசல். மேலும் படிக்க க்ளிக் செய்க...

ஸ்னோபால் வழிமுறைகள்: 6 நிமிட வாசிப்பில் நாணயம் விகடனின் 9 பகுதிகள்!


 
கடன் சார்ந்த ஃபண்ட் வகைகளில் ஒன்றான லோ டூரேஷன் ஃபண்டுகளின் ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகளுக்கு அடுத்த நிலை ஆகும். லோ டூரேஷன் ஃபண்டுகள், அல்ட்ரா ஷார்ட் டூரேஷன் ஃபண்டுகளைவிட சற்று கூடுதலான வருமானத்தைத் தரும்; அதேசமயம், சற்றே கூடுதலான ரிஸ்க்கையும் கொண்டது. இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவின் வெயிட்டட் ஆவரேஜ் மெச்சூரிட்டி 6 - 12 மாதங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறையாகும்.

ஒரு வருடத்துக்கு மேற்பட்ட காலத்துக்கு முதலீடு செய்ய விரும்புபவர்கள் லோ டூரேஷன் ஃபண்டுகளை நாடலாம். மேலும், நீண்டகாலக் கடன் திட்டங்களில் மற்றும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கும் இந்த வகை ஃபண்டுகள் ஏற்றதாக அமையும். விருப்பத்திற்கேற்ப ஹை, மீடியம் அல்லது லோ குவாலிட்டி பேப்பர்கள் உள்ள போர்ட்ஃபோலியோவை முதலீட்டாளர்கள் தங்களின் வருமான எதிர்பார்ப்புக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.

- கடன் சார்ந்த ஃபண்ட் வகைகளில் ஒன்றான லோ டூரேஷன் ஃபண்டுகளைப் பற்றி விரிவான வழிகாட்டுதலை அளிப்பதுடன், சில பரிந்துரைகளையும் முன்வைக்கிறது 'ஃபண்ட் வகைகள்' தொடரின் 'குறுகிய காலம்... கூடுதல் வருமானம்... லோ டூரேஷன் ஃபண்டுகள்!' எனும் பகுதி.  மேலும் படிக்க க்ளிக் செய்க...

இந்த வார நாணயம் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2EhmqIC