Published:Updated:

ஃபண்ட் ரிசர்ச்!

மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையான ஸ்கேன்!

எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா ஃபண்ட்

ஃபண்ட் ரிசர்ச்!

ஆசை ஆசையாக ஒரு ரோஜா செடியை நட்டு வளர்க்கிறோம். அடிக்கடி இல்லை என்றாலும், சில நாட்களுக்கு ஒருமுறையாவது ரோஜா செடி சரியாக வளர்கிறதா என்று பார்க்கிறோம். செடிக்கு தண்ணீர் இல்லையா? ஊற்றுகிறோம்; உரம் போதவில்லையா? போடுகிறோம். ஆக, அதை கண்ணும் கருத்துமாக வைத்து பராமரிக்கிறோம். எதற்கு? அழகான ரோஜாப்பூவை அது தரும் என்பதற்காகத்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இத்தனை கவனிப்புக்குப் பிறகும் அந்த செடி எந்த ரோஜாப்பூவையும் தரவில்லை என்றால்..? அந்த செடியைப் பிய்த்து எறிந்துவிட்டு, மல்லிகைச் செடியையோ, கனகாம்பரம் செடியையோ நாம் நடத் தயங்குவதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் இப்படித்தான். சில ஃபண்டுகள் சில சமயங்களில் பிரமாதமான லாபம் தரும், பூத்துக் குலுங்கும் ரோஜா செடியைப் போல. ஆனால், ஏதோ சில காரணங்களால் அந்த ஃபண்ட் சரியாகச் செயல்பட முடியாமல் போய்விடும். அதுமாதிரி சமயங்களில் அந்த ஃபண்டைவிட்டு வெளியேறுவது தவிர வேறு வழியில்லை. இத்தனை வாரம் 'முதலீடு செய்ய வேண்டிய’ ஃபண்டை பார்த்து வந்த நாம், இந்த வாரம் 'வெளியேற வேண்டிய’ ஃபண்ட் ஒன்றைப் பார்க்கப் போகிறோம். அந்த ஃபண்ட் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகித்து வரும் மேக்னம் கான்ட்ரா ஃபண்ட்.

ஃபண்ட் ரிசர்ச்!

இத்திட்டம் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு, இதை நடத்தும் ஃபண்ட் ஹவுஸைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். நம் நாட்டில் யூ.டி.ஐ-க்கு அடுத்தபடியாக, 1987-ல் மியூச்சுவல் ஃபண்ட் தொடங்க அனுமதிக்கப்பட்டபோது ஆரம்பித்த முதல் ஃபண்ட் ஹவுஸ் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட்தான்.

இதில் எஸ்.பி.ஐ. வங்கி 67 சதவிகிதமும் சொஸைட்டே ஜெனரலே என்ற பிரான்ஸ் வங்கி மீதிப் பங்கையும் கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் 44 மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ்களில், 6-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ரூ.42,000 கோடிகளுக்கு மேல் நிதியை நிர்வகித்து வருகிறது.

இவ்வளவு சொத்துக்கள் இருந்தும், பல ஆண்டுகள் அனுபவம் இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஃபண்ட் ஹவுஸின் செயல்பாடுகள், பிற முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களை ஒப்பிடும்போது, முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு லாபகரமானதாக அமையவில்லை. எஸ்.பி.ஐ. சேர்மன் பிரதீப் சௌத்ரி சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட், எஸ்.பி.ஐ. வங்கியின் பிராண்ட் மதிப்பை குறைத்துவிட்டதாக வெளிப்படையாகவே சொன்னார். அந்த அளவிற்கு எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸின் செயல்பாடு இருக்கிறது!

ஃபண்ட் ரிசர்ச்!
##~##
சரி, இனி ஃபண்டுக்குள் நுழைவோம். கான்ட்ரா முதலீடு முறை என்றால் என்ன? சுருக்கமாகச் சொன்னால், பெருவாரியான மக்கள் யோசிப்பதற்கு எதிர்மறையாக யோசித்து லாபம் ஈட்டுவதுதான். உதாரணத்திற்கு, எல்லோரும் வாங்க சொல்லும்போது விற்பதும், மற்றவர்கள் விற்றுவிடு என்று சொல்லும்போது வாங்குவதும் இதில் அடங்கும். ஒரு பங்கையோ அல்லது ஒரு துறையையோ அனைவரும் விற்றுவிட்டுச் செல்லும்போது அந்த துறையின் / பங்கின் மதிப்பு வெகுவாக குறையும். இந்த குறைந்த மதிப்பை பயன்படுத்தி, நீண்ட கால அடிப்படையில் லாபம் பார்க்க நினைப்பதே கான்ட்ரா ஃபண்டுகள். இந்த முறையில் செயல்படுவதுதான் எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா ஃபண்ட்.
ஃபண்ட் ரிசர்ச்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஃபண்ட் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தது. இதன் நீண்டகால செயல்பாடு நன்றாக இருந்தது. ஆனால், மேக்னம் கான்ட்ரா ஃபண்டின் செயல்பாடு கடந்த சில வருடங்களாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து வருடத்தில் இதன் செயல்பாடு, இதனுடைய போட்டித் திட்டங்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு லாபகரமானதாக இல்லை.

ஃபண்ட் ரிசர்ச்!

உதாரணத்திற்கு கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்திருந்தால், ஆண்டிற்கு -0.76 சதவிகிதமே வருமானம் தந்துள்ளது. அதையே ஐந்து வருடங்களுக்கு முன்பு மொத்தமாக முதலீடு செய்திருந்தால், ஆண்டிற்கு 2.63 சதவிகிதமே வருமானம் கிடைத்துள்ளது. நன்றாகச் செயல்படும் இதனுடைய போட்டித் திட்டங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருமானம் மிக குறைவு. நிஃப்டி பீஸில் முதலீடு செய்திருந்தாலே இதைவிட அதிகமான வருமானம் கிடைத்திருக்கும். நாம் கடந்த வாரங்களில் சொல்லியிருந்த ஃபண்டுகளில் ஒருவர் எஸ்.ஐ.பி.

முறையிலோ அல்லது மொத்தமாகவோ முதலீடு செய்திருந்தால் 7 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றிருக்கலாம்.

ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

இந்த காரணங்களைத் தவிர, எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட், இனிவரும் ஆண்டுகளில் இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. ஆகையால், முதலீட்டாளர்கள் இதை விட்டு வெளியேறி வேறு நன்றாகச் செயல்படும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

அதேபோல் எஸ்.ஐ.பி.  முறையில் முதலீடு செய்பவர்களும் தங்களது முதலீட்டை வேறு நல்ல ஃபண்டுகளுக்கு (கடந்த வாரங்களில் நாம் முதலீடு செய்யச் சொன்ன) மாறலாம்.

முடிவாக, இன்றைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் கான்ட்ரா போன்ற தீம் ஃபண்டுகளை நாடிச் செல்வதைத் தவிர்த்து, டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலேயே தங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண்கள் 65/100.