Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

நீங்களும் அனலிஸ்ட்தான்!

அறிமுகமில்லாத இரண்டு பேர் ரயிலில் அடுத்தடுத்த சீட்டில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போரடிப்பதைத் தவிர்க்க ''ஒரு கேம் ஆடலாமா?'' என்றார் ஒருவர். மற்றொருவரோ, ''வேண்டாம். எனக்குத் தூக்கம் வருது'' என்றார்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ரொம்ப இன்ட்ரெஸ்டிங் கேம் சார். நான் ஒரு கேள்வி கேட்பேன். உங்களுக்குப் பதில் தெரியலைன்னா, நீங்க 5 ரூபா கொடுக்கணும். நீங்க ஒரு கேள்வி என்னையக் கேளுங்க. எனக்குப் பதில் தெரியலைன்னா, நான் 5 ரூபாய் உங்களுக்குத் தருவேன்'' என்றார். ''இல்லீங்க, நான் தூங்கப் போறேன்'' என்றார் மற்றொருவர்.

''சார், கொஞ்சம் விளையாடித்தான் பாருங்களேன். உங்களுக்காக ரூலை மாத்தறேன். நான் கேள்வி கேட்டு உங்களுக்குப் பதில் தெரியலைன்னா, நீங்க 5 ரூபாய் தந்தாப் போதும். நீங்க கேட்டு எனக்கு பதில் தெரியலைன்னா, நான் 50 ரூபாய் தர்றேன்'' என்றார். தூங்கப் போறேன் என்றவர், கேமில் இருக்கும் அட்ராக்ஷனை பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்து, ''கேளுங்க'' என்றார்.

##~##
''பூமிக்கும் சந்திர மண்டலத்துக்கும் உள்ள தூரம் எவ்வளவு?'' என்றார் முதலாமவர். தூங்கப் போனவரோ பதில் தெரியாததால் 5 ரூபாயை எடுத்து நீட்டினார்.

''சரி! இப்ப நீங்க கேளுங்க'' என்றார் ஜெயித்தவர். தூங்கப் போனவர், ''கீழிருந்து மேலே போகும்போது மூன்று காலோடு போகும். மேலிருந்து கீழே வரும்போது நான்கு காலோடு வரும். அது என்ன?'' என்றார்.

ரொம்பவுமே யோசித்தும் பதில் தெரியாததால் முதலில் விளையாடக் கூப்பிட்டவர் 50 ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டார். 50 ரூபாயை ஜெயித்தவர் அவருடைய பெர்த்தில் படுத்து தூங்க ஆரம்பித்தார்.

மறுநாள் காலை இருவரும் இறங்கும் இடம் வந்தது. இறங்கும்முன் அந்த கேள்விக்கான பதிலைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார் 50 ரூபாயை இழந்தவர். ''நேத்து ராத்திரி நீங்க கேட்ட கேள்விக்கு என்ன பதில்?'' என்று கேட்டார்.  சூட்கேஸை திறந்து பர்ஸை எடுத்து 5 ரூபாயைக் கொடுத்துவிட்டு ரயிலை விட்டு இறங்கிப் போனார் 50 ரூபாய் ஜெயித்தவர்.

''இந்தக் கதைதான் பெரும்பாலும் ஸ்டாக் மார்க்கெட்டில நடக்குது'' என்று சொல்லி விட்டு பெரிதாகச் சிரிப்பார் டிரேடிங்கைத் தொழிலாக கொண்ட என் நண்பர் ஒருவர்.

கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்தால் உண்மை என்னவோ அதுவேதான். சந்தை இதுபோன்ற இரண்டு சாரார் களைக்கொண்டே செயல்படுகிறது. சாதுர்யமும் சாமர்த்தியமும் இருந்தால் மட்டுமே டிரேடிங்கில் ஜெயிக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த சாதுர்யத்தை வளர்த்துக்கொள்ள டெக்னிக்கல் அனாலிசிஸ் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் ஆஸிலேட்டரின் பெயர் 'ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ்’ (ஆர்.எஸ்.ஐ.). பெயர் சொல்வதைப் போலவே காளைகளுக்கும் கரடிகளுக்கும்  இடையே நடக்கும் பலப்பரிட்சையில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு யார் கடந்த தினங்களில் அதிக பலத்துடன் இருந்தார்கள், யார் பலம் பெற்று வருகிறார்கள் மற்றும் யார் பலமிழந்து வருகிறார்கள் என்பதைக் காட்டும் ஆஸிலேட்டர் இது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதுவும் ஒவ்வொரு நாட்களுக்கும் இடையே உள்ள குளோஸிங் விலையை ஒப்பிட்டுப் பார்த்தே கணக்கிடப்படும் ஒரு ஆஸிலேட்டர் ஆகும். நீங்கள் டிரேடிங் செய்யும் போது காலை 9.30 மணிக்கு ஒரு ஷேரை விற்றால் அது 3.00 மணிக்கு இறங்கினால் வாங்கி கவர் செய்துவிடுவோம் என்ற எண்ணத்தோடு செயல்படலாம். அதே விற்பனையை நீங்கள் 3.29 மணிக்கு செய்தால் நிச்சயம் டெலிவரி கொடுக்க நினைத் துத்தானே விற்கிறீர்கள்?

சந்தை முடிவடையும் நேரம் என்பது ஒவ்வொரு டிரேடரும் முதலீட்டாளரும் பாக்கெட்டை பார்த்து, எவ்வளவு பணம் இருக்கிறது, எவ்வளவு ஷேர் இருக்கிறது, எவ்வளவு பொசிஷன் எடுக்க முடியும் என்று சரிபார்த்து கணக்கு போடும் நேரமில்லையா? ஒரு நாளின் இறுதியில் இருக்கும் பெரும்பான்மையான பொசிஷன்களும் சரி, விற்க மற்றும் வாங்கப்படும் விலைகளும் சரி, வியாபாரம் செய்பவர்கள் உண்மையாகவே அந்த ஷேரை வாங்கி டெலிவரி எடுக்கவோ அல்லது விற்று டெலிவரி கொடுக்கவோ நினைப்பதாலேயே அமைகிறது. இப்படி சந்தை முடியும் கடைசி நேரத்தில் நடக்கும் வியாபாரங்கள் நிச்சயத்தன்மையுடன் இருப்பதால் விலைகளும் சரியானவையாகவே இருக்கும் என்பதுதான் சரியான லாஜிக். இதனாலேயே குளோஸிங் விலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

குளோஸிங் விலையில் நடைபெறும் மாறுதல்களை கவனித்து பின்தொடர்வதால் பல நல்ல அனுமானங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் இந்த ஆஸிலேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இண்டிகேட்டர் வடிவமைக்கப்பட்ட விதத்தை வைத்துப் பார்த்தால், இது மாற்றம் வருவதை முன்கூட்டியோ அல்லது மாற்றம் நடைபெறும்போதோ சொல்லிவிடும் திறன் கொண்டது என்பது புரியும்.  

ஆர்.எஸ்.ஐ. என்பதில் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் என்பதை முதலில் கணக்கிட வேண்டும். பின்னர் அதை ஒரு இண்டெக்ஸ்ஸாக மாற்ற வேண்டும். ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த்தை எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம்.

ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த்தை 7 நாள் அல்லது 9 நாள் என உங்கள் தேவைக்கேற்ப கணக்கிட்டுக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஏழு நாட்களுக்கு ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த்தை நாம் கணக்கிடுவதாக வைத்துக் கொள்வோம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

1. ஒரு ஸ்டாக்கின் ஏழு நாள் குளோஸிங் விலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. அந்த ஏழு நாட்களில் எத்தனை நாள் அந்த ஸ்டாக் முந்தைய நாள் விலையைவிட அடுத்த நாள் அதிகமான விலையில் குளோஸாகியுள்ளது என்று பார்க்க வேண்டும். அப்படி அதிகமாக குளோஸான நாட்கள் அனைத்திற்கும், முதல் நாளுக்கும் அன்றைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு அதனை கூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு 'விலை அதிக வித்தியாசம்’ என்று பெயரிடுவோம்.

3. அந்த ஏழு நாட்களில் எத்தனை நாள் அந்த ஸ்டாக் முந்தைய நாள் விலையைவிட அடுத்த நாள் குறைவான விலையில் குளோஸாகியுள்ளது என்று பார்க்க வேண்டும். அப்படி அதிகமாக குளோஸான நாட்கள் அனைத்திற்கும் முதல் நாளுக்கும் அன்றைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டு அதனை கூட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு 'விலை குறைவு வித்தியாசம்’ என்று பெயரிடுவோம்.

4. விலை அதிக வித்தியாசத்தை, விலை குறைவு வித்தியாசத்தால் வகுத்தால் வருவதுதான் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் (ஆர்.எஸ்.) ஆகும். தொடர்ந்துவரும் ஒவ்வொரு நாள் குளோஸிங்கிற்கும் ஆர்.எஸ். வேல்யூவை கணக்கிட வேண்டும்.

சரி, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த்தைக் கண்டுபிடித்தா யிற்று. ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த்  இண்டெக்ஸை கணக்கிடுவது எப்படி என்கிறீர்களா?

ஃபார்முலாதான்! ஃபார்முலா என்றவுடனே பயப்படாதீர்கள்..!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இந்த ஃபார்முலாவில் ஆர்.எஸ்-ஸின் வேல்யூவை போட்டால் வருவதுதான் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ். இதுபோல் கண்டுபிடிக்கப்படும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸை ஒரு சார்ட்டில் புள்ளியாக வைத்து கோடு போட்டால் வருவதுதான் ஆர்.எஸ்.ஐ. சார்ட்.

ஆர்.எஸ்.ஐ. சார்ட்டும் 0 முதல் 100 வரை மட்டுமே பாயின்டுகள் வரும். ஆர்.எஸ்.ஐ. லைன் மேலும் கீழுமாகச் சென்றுவரும். ஆர்.எஸ்.ஐ. லைன் ஒரு தூரம் வரை மேலே சென்று பின்னர் கீழ் நோக்கித் திரும்பினால் அந்த இடம்தான் டாப். அதேபோல் கீழே சென்று ஒரு இடத்தில் மேல் நோக்கித் திரும்பினால் அந்த இடம்தான் பாட்டம்.

ஏற்கெனவே பார்த்த சில இண்டிகேட்டர்கள் போல ஒரு இடத்தில் சென்று திரும்பினால் புல்லிஷ், பியரிஷ் என்ற அர்த்தம் ஆர்.எஸ்.ஐ-யில் இல்லை. புல் மார்க்கெட்டில் ஒரு லெவலிலும், பியர் மார்க்கெட்டில் ஒரு லெவலிலும் இந்தத் திருப்பங்கள் இருக்கும். அனுபவஸ்தர்கள் புல் மார்க்கெட்டில் 40 மற்றும் 80 லெவல்களிலும், பியர் மார்க்கெட்டில் 20 மற்றும் 60 லெவல்களிலும் லைனைப் போட்டு சந்தையில் வரும் திருப்பத்தைக் கணக்கிட முயற்சிப்பார்கள். இந்த ரெபரன்ஸ் லைன்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆர்.எஸ்.ஐ. செல்லும் ரேஞ்சுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, ஆர்.எஸ்.ஐ. ஆஸிலேட்டரை உபயோகித்து சந்தையை எப்படி புரிந்து கொள்வது என்று அடுத்த வாரம் சொல்கிறேன்.

(வளரும்)