Published:Updated:

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இந்தியா இறக்குமதி செய்யும் விவசாய விளைபொருட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு பெரும்பாலான விவசாய விளைபொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தியாகிவிடுகின்றன. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே முழுநேரத் தொழிலாக செய்து வருகிறார்கள்.

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ருந்தாலும், இந்திய ஜி.டிபி.யில் விவசாயத்தின் பங்கு சுமார் 14 சதவிகிதம்தான். 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில், ஆண்டிற்கு விவசாயத் துறையின் சராசரி வளர்ச்சி 2 சதவிகிதம் மட்டுமே. நம் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் துறையில் ஏன் இந்த தளர்ச்சி?, விவசாயத் துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?, சந்தை இறங்கிக் கிடக்கும் இச்சமயத்தில் விவசாயத் துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா? என பல்வேறு கேள்விகளை பங்குச் சந்தை ஆலோசகர் விவேக் கார்வாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''விவசாயத் துறையில் சில பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள். முதலாவதாக, இந்தியாவின் பருவநிலை. சில சமயம் அதிக மழை பெய்து கெடுக்கும்; சில சமயம் மழை பெய்யாமலே கெடுக்கும். இரண்டாவது பிரச்னை, விவசாயிகளுக்குச் சரியாக கடன் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் விவசாய விளைப் பொருட்களுக்கு மிக குறைந்த விலைதான் சந்தையில் கிடைக்கிறது. ஆனால், சந்தையிலோ அதிக விலையில்தான் விற்கப்படுகின்றன.

##~##
அதாவது, இடைத்தரகர்கள் நிறைய பணத்தைச் சுருட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம் என்பதே விவசாயிக்குத் தெரியாமல் போய்விடுகிறது. இப்படி பலவாறு கஷ்டப்பட்டு உழைத்தும் பலனில்லையே என்று நினைத்து விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு போய்விடுகிறார்கள்.

நமது ஜி.டி.பி.யில் விவசாயத் துறையின் பங்களிப்பு உயர வேண்டும் எனில் இத்துறையில் நிறைய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். விவசாய விளைபொருட்களின் விலையை கிராமங்களில் தெரிந்துகொள்ள ஐ.டி.சி. நிறுவனம் இ-சௌபல் மூலம் 40,000 கிராமங்களை இணைத்துள்ளது. இதேபோல கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் மூலம் விலை நிலவரங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், மிக குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளுக்குத்தான் இந்த வசதிகள் பற்றி தெரிந்திருக்கிறது.  

மேலும், இந்தியாவில் வறட்சி மற்றும் அதிக மழை காரணமாக அதிகளவு பயிர்கள் வீணாகின்றன. பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அதேபோல விளைபொருட்கள் வீணாவதைக் கட்டுப்படுத்துவதற்கு குளிர்பதனீட்டு வசதியை  அதிகரிக்க வேண்டும். ஆனால், நம் அரசு இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை.

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

இதுபோல, பல அசௌகர்யங்கள் நம் விவசாயத் துறையில் இருப்பதால் அத்துறையில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி முதலீடு செய்வது சரியா என்ற கேள்வி எழுவது இயற்கையே! ஆனால், விவசாயத் துறையில் முதலீடு செய்யலாம் என்பதற்கு பல சாதகமான காரணங்கள் இருக்கவே செய்கிறது.

கடந்த சில வருடங்களாகவே சேவைத் துறை சிறப்பான வளர்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையில் சில பிரச்னைகள் இருந்தாலும் ஓரளவுக்கு நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், விவசாயம் பெரிய அளவில் வளரவில்லை என்பதை மத்திய அரசுக்கு பல விதங்களில் எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், அடுத்த சில வருடங்களுக்கு மத்திய அரசாங்கம் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பிருக் கிறது. இதனால் பயிர்களுக்கான இன்ஷூரன்ஸ், உரம், தண்ணீர் மேம்பாடு உள்ளிட்டவற்றில் அதிக மாறுதல் நடக்க வாய்ப்பிருக் கிறது. அப்படி நடந்தால் மற்ற துறைகளை போல, விவசாயமும் ஒரு ஒருங்கிணைந்த துறையாக வளரும். இதனால், சில வருடங்கள் கழித்து விவசாயத் துறையுடன் நேரடியாக தொடர்புடைய பங்குகள் 'மிக’ நல்ல விலைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!

நேரடியாகப் பார்த்தால், விதை, உரம், நீர் மேலாண்மை உள்ளிட்ட பங்குகள் சிறப்பாக வருமானம் தர வாய்ப்பிருக்கிறது. அதேபோல விவசாயம் சிறப்பான வருமானத்தைத் தரும்போது மறைமுகமாக வேறு சில துறை பங்குகளும் நல்ல வருமானத்தைத் தர வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, டிராக்டர், பெயின்ட், எஃப்.எம்.சி.ஜி., இரு சக்கர வாகனங்கள் போன்ற துறையைச் சார்ந்த பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு.

'எதிர்காலத்தில் ஃபெராரி கார்களில் செல்லும் தகுதி விவசாயிகளுக்கு மட்டுமே இருக்கப் போகிறது’ என்று சொல்கிறார் சந்தை வல்லுநரான ஜிம் ரோஜர். சொன்னதோடு நிற்காமல் அவரும் விவசாயத் துறையில் நிறைய முதலீடு செய்து வருகிறார். இந்த வளர்ச்சியில் பங்கெடுத்து பயனடையும் முடிவை எடுப்பது உங்கள்  கையில்தான் இருக்கிறது.

-வா.கார்த்திகேயன்.

விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!
விறுவிறு லாபம் தரும் விவசாயப் பங்குகள்!