Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் ஓரு பங்கினை பரிந்துரை செய்திருந்தேன். ஏற்கெனவே ஒருமுறை பரிந்துரை செய்த பங்குதான் அது (செயில்). அப்போதும் இந்த பங்கு நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை. இப்போதும் வரவில்லை. அதாவது, இந்த பங்கினை பரிந்துரை செய்த வாரத்தில் சந்தை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. கடந்த வாரம் 82 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமான செயில், இப்போது 92 ரூபாய்க்கு அருகில் இருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

னி அந்த பங்கினை பற்றி பேசி பயனில்லை, விட்டுவிடுவோம். இரண்டு முறை பரிந்துரை செய்தும் வாங்க முடியவில்லையே! அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறதே! என்று அந்த பங்கினை துரத்த வேண்டாம்.

திங்கட்கிழமை பக்கவாட்டில் வர்த்தகமான சந்தை அடுத்த இரண்டு நாட்களில் நன்றாக உயர்ந்தது. ஐ.ஐ.பி. தகவல்கள் வியாழனன்று நன்றாக வந்தாலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகள் சரியில்லை என்பதால் சந்தை சரிந்தது. இன்ஃபோசிஸ் சரிந்ததால் நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் டெக் மஹிந்திரா பங்கும் வியாழனன்று மட்டும் 4% சரிந்தது. (இருந்தாலும் தற்போதுகூட அந்த பங்கு லாபத்தில்தான் இருக்கிறது.)

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
நமது போர்ட்ஃபோலியோ வில் இருக்கும் பங்குகள் சில வெளியேற வாய்ப்பிருக்கிறது என்று கடந்த வாரமே சொல்லி இருந்தேன். அதற்கு அறிகுறியாக சில பங்குகள் உயர ஆரம்பித்திருக்கிறது. கடந்த வாரம் இரண்டு பங்குகள் மட்டுமே பாசிட்டிவ்வாக இருந்தது. ஆனால், இப்போது 4 பங்குகள் பாசிட்டிவ்வாக இருக்கிறது. குறிப்பாக, குஜராத் கேஸ் பங்கு மேலே செல்ல வாய்ப்பிருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அது நடந்திருக்கிறது.

தற்போதைய நிலையில் நிஃப்டி 4831 புள்ளிகளில் இருக்கிறது. இதைத் தாண்டிகூட செல்ல வேண்டாம். இதே நிலையிலே அல்லது 4750 என்ற புள்ளிக்கு மேலே இருந்தாலே போதும்; நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் வெளியேற வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

காரணம், தற்போதைய நிலையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயரவில்லை. ஆனால், மிட்கேப் பங்குகள் நல்ல ஏற்றத்தில் இருக்கிறது. நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் மிட்கேப் பங்குகள் உயர்ந்து வெளியேற ஆரம்பித்தவுடன், முன்னணி பங்குகள் சிறிதளவு சரிய ஆரம்பித்திருக்கும். அதன்பிறகு அந்த பங்குகளில் நாம் முதலீடு செய்யலாம்.

போர்ட்ஃபோலியோவின் இன்றைய நிலைமை:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தையின் ஏற்றத்தில் நமது போர்ட்ஃபோலியோ நன்றாக ஏறி இருக்கிறது. கடந்த வாரத்தில் நமது போர்ட்ஃபோலியோவின் நிகர நஷ்டம் 9,056 ரூபாயாக இருந்தது. இப்போது 4,993 ரூபாயாக இருக்கிறது. வரும் வாரங்களில் நஷ்டம் குறைந்து லாபம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. லாபத்தைச் சுவைக்கத் தயாராக இருங்கள்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

- தொகுப்பு: வா.கார்த்திகேயன்.