டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

கடந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமே முக்கியமான அம்சமாக இருந்தது. உலகளாவிய போக்குகளே சந்தையின் போக்கை நிர்ணயம் செய்தன. சந்தையின் நகர்வு, வர்த்தகர்களைப் போதுமான அளவுக்கு லாபகரமாக வர்த்தகம் செய்யவிடவில்லை. மறுநாளே அவர்கள் வெளியேறும்படிதான் நிலைமை இருந்தது. எனவே, டிரேடிங் செய்வது கடந்த வாரம் முழுவதும் வர்த்தகர்களுக்குச் சற்றுக் கடினமானதாகவே இருந்தது. எனவே, இந்த வாரத்தில் ஒருவர் அதிக இழப்பு இல்லாமல் வெளியேறியிருந்தால், அது ஆச்சர்யமான விஷயமே.

நிஃப்டி எந்தத் திசையில் பயணிப்பது என்கிற குழப்பத்துடன் இருந்தது; தவிர, சந்தையை உயர்த்தும் சாதகமும் இல்லாமல் இருந்தது. எனவே, கடந்த சில நாள்களில் சந்தையின் போக்கைத் தீர்மானிப்பது சற்றுக் கடினமானவே இருந்தது. ரிசர்வ் வங்கியிடமிருந்து சாதகமான செய்தி வந்தபோதிலும் மேக்ரோ எகனாமிக் டேட்டா சாதகமாக இருக்குமா என்கிற கேள்வி எழுந்ததால், பங்குச் சந்தையில் மந்தமான போக்கே தொடர்ந்தது.

நிஃப்டியால் தொடர்ந்து மேல்நோக்கி நகரமுடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தபோதும் 12000 புள்ளிகளுக்கு மேல் செல்ல முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே தொடர்ந்து சந்தை நகர்வதால், வரும் நாள்களில் சந்தையின் செயல்பாடு எப்படியிருக்குமென அறிய மறுபரிசீலனை செய்யவேண்டும்.

சந்தையின் போக்கு மாறி, ஏற்றம் காணத் தொடர வரும்நாள்களில் சில சாதகமான முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். எனினும், நம் பங்குச் சந்தையின் செயல்பாடு, வெளிநாட்டுச் செய்திகளின் தூண்டு தல்களால் அளவிடப்படுவதால், தற்போதுள்ள நிலையில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குச் சற்று பொறுமை தேவை. வங்கிசாரா நிதி நிறுவனங்கள் குறித்து முதலீட் டாளர்கள் மத்தியில் தெளிவில்லாத நிலை நீடிப்பதால், முரண்பாடுகள் உருவாகி, சந்தையின் போக்கு குழப்பமான நிலையில் இருக்கிறது.

சந்தையின் இறக்கம் நீண்ட கால முதலீட்டுக்குச் சரியாக இருக்கும். சர்வதேசப் பிரச்னைகள் சந்தையில் குழப்பமான விளைவுகளை வெளிப்படுத்தும்போது சந்தை தொடர்ந்து விரிவான எல்லைக்குள் செயல்பட வேண்டும்.

தினசரி வர்த்தக சார்ட் அடிப்படையில் பார்த்தால், நிஃப்டி 11680-11700 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகக்கூடும். நிஃப்டி 11680 புள்ளியைத் தாண்டியும் சரிவு தொடர்ந்தால், அதிகபட்சம் 11450 என்ற புள்ளிகள் வரை இறங்கலாம்.

அப்படியான நேரங்களில் அதிலிருந்து விலகி, பெரிய அளவிலான போக்கைப் பின்தொடர் வதை மட்டும் நாம் செய்தால் போதும். அதற்கு நாம் பொறுமையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மேலும், நம் முதலீடு அல்லது டிரேடிங்மீது நம்பிக்கைகொள்ள வேண்டும்.

ஏற்ற இறக்கமான நாள்கள், நம் நம்பிக்கையையும் பொறுமையையும் கண்டிப்பாகச் சோதிக்கும். நல்ல டிரேடிங்கைச் செய்வதற்குச் சிறப்பான திறமை தேவை. குறியீடு களின் போக்கு தெளிவின்றி இருப்ப தால், தேர்வு செய்யப்பட்ட பங்கு களில் டிரேடிங்கைத் தொடரலாம்.

ஆர்.இ.சி (RECLTD)
தற்போதைய விலை: ரூ.156.65
வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் நல்ல செயல்பாட்டால் கடந்த மார்ச் மாத காலாண்டு முடிவில், இந்த நிறுவனம் நல்ல லாபத்தைச் சம்பாதித்திருக்கிறது. இந்தத் துறையிலுள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இனிவரும் காலத்தில் அவற்றைவிடச் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்கின் விலை சார்ட், பங்கு விலையின் போக்கு தொடர்ந்து மேல்நோக்கிச் செல்லும் என்பதை உறுதிப்படுத்தி யிருக்கிறது . டிரெண்டுலைன் ரெசிஸ்டன்ஸ் 150 ரூபாய்க்குமேல் உருவாகியிருக்கிறது. தற்போதைய விலையிலும் இந்தப் பங்கை வாங்கலாம் அல்லது 150 ரூபாய்க்கு இறங்கும்வரைக்கும் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.145. இலக்கு விலை ரூ.189.

இன்டெல்லெக்ட் டிசைன் அரினா (INTELLECT)
தற்போதைய விலை: ரூ.274.75
வாங்கலாம்

பங்கின் விலை சார்டில், கடந்த மே மாதத்தில் உருவான நீண்ட கேண்டில் உருவத்திற்குப்பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து உயர ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய விலை என்பது, இதன் அதிகபட்ச விலைக்கு நெருக்கத்தில் இருக்கிறது. இதற்குமுன் உச்ச விலையைத் தாண்டி ஏறுவதற்கு முயற்சி செய்து, பின்னர் இறங்கியது.

எனினும், இந்தமுறை அப்படியிருக்காது என எதிர்பார்க்கப் படுகிறது. பங்கின் விலை 250 ரூபாய்க்குக்கீழ் இறங்கினால், நீண்ட கால முதலீட்டாளர்கள் இதை வாங்கலாம். வலுவான பாலிங்கர் பாண்ட்ஸ் உருவாகியிருப்பதால், பங்கு விலை தொடர்ந்து ஏறும்.

தவிர, மொமன்டம் இண்டி கேட்டர் பங்கு விலை மேலும் உயரும் என்பதையே காட்டுகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்தப் பங்கின் விலை 325 ரூபாய்க்கு அதிகரிக்கும். ஸ்டாப்லாஸ் ரூ.240-க்குக்கீழே வைத்துக் கொள்ளவும்.

சுவென் லைஃப் சயின்ஸ் (SUVEN)
தற்போதைய விலை: ரூ.266
வாங்கலாம்

சிறப்பு வகை மருந்துத் தயாரிப்பு நிறுவனமான இதன் பங்கு விலை, கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இறக்கத்தைச் சந்தித்துக் கொண்டி ருந்தது, தற்போது ஏற ஆரம்பித்தி ருக்கிறது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் இல்லை என்றாலும், ஓரளவுக்கு நல்ல முறையில் காலாண்டு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

இது மிட்கேப் நிறுவனம் என்பதால், பங்கு விலை இனி வரும் காலங்களில் உயர வாய்ப்பிருப்பதால் பரிசீலிக்கப்படுகிறது.

இந்தப் பங்கின் மொமன்டமும் நன்றாக இருக்கிறது. இலக்கு விலை ரூ.317.

தொகுப்பு: தெ.சு.கவுதமன், செ.கார்த்திகேயன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.