Published:Updated:

எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா?

எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா?
எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா?

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் நிறுவனமான எம்.எஸ்.டி.சி லிமிடெட், இந்திய எஃகு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. இது, இ-காமர்ஸ் தொடர்பான சேவைகளை வழங்குவதில் முன்னணியிலுள்ள பொதுத்துறை நிறுவனமாகும். இ-காமர்ஸ் துறையில், ஆன்லைன் வழியிலான ஏலம், விற்பனை, கணினி மென்பொருள்களின் வளர்ச்சி மற்றும் கொள்முதல் சேவைகளை அளித்துவருகிறது. நிறுவனத்தின் வருமானம், கடந்த நான்கு ஆண்டுகளில், ரூ.3,307 கோடியிலிருந்து ரூ.2,793 கோடியாக அதிகரித்துள்ளது. 

எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா?

தற்போது இந்த நிறுவனம் ஐ.பி.ஓ விற்பனை மூலம் ரூ.226 கோடி திரட்ட முடிவெடுத்துள்ளது. இந்த ஐ.பி.ஓ விற்பனை, மார்ச் 13, 2019 தொடங்கி, மார்ச் 15-ல் முடிவடைகிறது. இதன் பங்குகளின் ஆஃபர் விலை ரூ.121-128 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.பி.ஓ மூலம் மொத்தம் 1.76 கோடி பங்குகளை விற்பனை செய்யவுள்ளார்கள். இந்த விற்பனைக்குப்பின், நிறுவனத்தில் அரசின் பங்கு 89.85 சதவிகிதத்திலிருந்து 64.85 சதவிகிதமாகக் குறையுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. 

எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமா?

இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது சாதகமாக இருக்குமா என, பங்குச்சந்தை நிபுணர் ரெஜிதாமஸிடம் கேட்டபோது, ``இந்த நிறுவனத்தின் இ-காமர்ஸ் வருமானம், ஆண்டுக்கு 10-15% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருமானத்தில், டிரேடிங் மூலம் கிடைக்கின்ற வருமானம் 81% அளவுக்கு இருக்கிறது. நிறுவனத்தின் 90% பிசினஸ், அரசின் மூலம் கிடைக்கிறது. எனவே, நிறுவனத்துக்கு கிடைக்கும் பிசினஸ் ஆர்டர் உறுதியாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை ஒவ்வோர் ஆண்டும் 30% அதிகரித்துவருகிறது. பங்குகளின் ஆஃபர் விலை ரூ.121-128 என்ற அளவிலிருந்து தற்போது இதன் முக மதிப்பு 204 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் இருப்புநிலை குறைந்தாலும்கூட பங்குதாரர்களுக்கு தொடர்ச்சியாக டிவிடென்டுகளைக் கொடுத்து வருகிறது. இவையனைத்தும் இந்த நிறுவனத்துக்குச் சாதகமாக உள்ளன. 

இந்த நிறுவனம், கடந்த மார்ச் 2018-ல் ரூ.6.5 கோடியும், கடந்த செப்டம்பர் 2018-ல் ரூ.154 கோடியும் இழப்பைச் சந்தித்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டிய பாதகமான விஷயமாகும். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் பங்குகளில் நீண்டகால முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும்." எனக் கூறினார். எனவே, முதலீட்டாளர்கள், நீண்டகால முதலீடாக இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாமெனத் தெரிகிறது.