Published:Updated:

தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்
தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

தங்கம்

பிரீமியம் ஸ்டோரி
தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

ங்கத்தில் ஏற்கெனவே முதலீடு செய்தவர்களுக்கு, தற்போதைய விலையேற்றம் மகிழ்ச்சியைத் தரும். ஆனால், விலை இறங்கும் என்று காத்திருந்தவர்களுக்குச் சற்று வருத்தம்தான்.

  நம் நாட்டில் 1 கிராம் தங்கம் (22 கேரட்) விலை தற்போது ரூ.3,237–ஆக அதிகரித்திருக்கிறது. சர்வதேச அளவில் மற்ற எல்லா முதலீடுகளையும்விட, தங்கம் பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுவது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

ஒரு ட்ராய் அவுன்ஸ் (31.10 கிராம்) தங்கம் விலை 1,266 டாலராகக் கடந்த மே மாதம் இருந்தது. பிறகு, படிப்படியாக அதிகரித்து, சென்ற வெள்ளியன்று 1,397 டாலராக உயர்ந்தது. இப்படி ஒரே மாதத்தில் சுமார் 100 டாலர்களுக்கு மேலாக ஏற்ற மடைவதற்கு, அடிப்படைக் காரணங்களில் மாற்றம் நடந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொண்டு முதலீடு செய்வது அவசியமாகிறது.

   அமெரிக்காவின் எஃப்.ஓ.எம்.சி கூட்டம்

சென்ற வார எஃப்.ஓ.எம்.சி (Federal Open Market Committee) கூட்டத்தில், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்தக் கூட்டம் முடிந்தபின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படவில்லை. ஆனாலும், வரும் மாதங்களிலோ அல்லது இந்த ஆண்டிற்குள்ளாகவோ வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான அவசியம் ஏற்பட்டால், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்ற தொனியில் அறிக்கை காணப்பட்டது. அதனையடுத்து ஒரே தினத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 34 டாலர்கள் உயர்ந்தது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக்  குறைப்பதற்கும் தங்கம் விலை அதிகரிப்பதற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்கலாம்.

தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

பொதுவாக, வட்டி விகிதங்கள் அதிகரித்தால், தங்கம் விலை சர்வதேச அளவில் குறையும்; வட்டி விகிதங்களில் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தாலோ அல்லது வரும் காலங்களில் குறைவதற்கு முகாந்திரம் இருப்பதாகச் சந்தை எதிர்பார்த்தாலோ, தங்கம் விலை உயரும். இது வாடிக்கையான ஒன்று. வட்டி விகிதமும் தங்கமும்  ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் பயணிப்பவை.

அதாவது, வட்டி விகிதங்களைக் குறைக்கும் முடிவினால், அமெரிக்கா அதிகம் வர்த்தகம் செய்யும் ஆறு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பு இறக்கமடைய வாய்ப்பிருக்கிறது. இதனால் டாலரில் செய்யப்படும் முதலீடுகள் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றன. அதாவது, அமெரிக்க ஃபெடரல்  வங்கி வருங்காலத்தில் எடுக்கக்கூடிய நடவடிக்கை களை சந்தை முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்றவாறு தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கச் செய்கிறது.

தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

   பணவீக்கம்

மேலும், வளர்ந்த நாடுகளில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமெனில், பணவீக்கம் அதிகரிக்க வேண்டும். ஆனால், நடப்பு 2019-ம் ஆண்டில் பணவீக்கமானது அமெரிக்க ஃபெடரலின் இலக்கான 2 சதவிகித்தை அடைய முடியாததும், எதிர்காலப் போக்கில் ஒரு விதமான நிச்சயமற்றதன்மை இருப்பதும் கவலை தரும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது (பார்க்க, பணவீக்க விகித அட்டவணை). ஆக, பணவீக்கமானது  தங்கம் விலை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

கடந்த 20-ம் தேதி எஃப்.ஓ.எம்.சி கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்ற அறிவிப்பு வந்தபிறகு, பங்குச் சந்தைகள் நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்தன. நிறுவனங்களின் செயல்பாடுகளில் இப்போதைக்குப் பாதிப்பில்லை என்ற அடிப்படையில் ஏற்றம் காணப்படுகிறது.

தவிர, நீண்ட கால அடிப்படையில், பொருளாதாரப் புள்ளிவிவரங்களில் குறிப்பாக, பணவீக்கம் 2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும்பட்சத்தில், அமெரிக்க ஃபெடரலின் நிலைப்பாடுகளில் மாற்றம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரிக்கவில்லை எனில்,  பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாகவே அர்த்தம்கொள்ள லாம். அந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் வட்டி விகிதங்களைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ளும். பொருளாதாரம் சுணக்கம் காணும் நிலையில், இதன் தாக்கம் பங்குச் சந்தையில் உணரப்படும்.

அந்தச் சமயத்தில், ‘ரிஸ்க் அஸெட்’ எனப்படும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் அனைத்தும், பாதுகாப்பான முதலீடாகப் பார்க்கப்படுகிற தங்கத்தின் பக்கம் உடனடியாகக் கவனத்தைத் திருப்பும். ஆனால், இதெல்லாம் நடக்குமா நடக்காதா என்பதை, இனி வரக்கூடிய பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவங்கள்தான் முடிவு செய்ய இருக்கின்றன.

முக்கியமாக, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்கப் பொருளாதாரத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது வரும் காலாண்டுகளில் தெரியவரும்.

தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்
தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

   மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு

பொதுவாகவே, உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. டாலர், தங்கம் மற்றும் கருவூலப் பத்திரங்கள் என்ற வகையில் பரவலான முதலீடுகளாக வைத்திருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற மாற்றங்களினால் தங்கள் கையிருப்பைப் பெரும்பாலான நாடுகள் மாற்றியமைத்துக்கொள்கின்றன.

2019-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பாக, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்குத் தங்கள் வசமிருக்கும் அமெரிக்க டாலர்களைக் குறைத்துக்கொண்டு (அதாவது, டாலர்களை விற்பனை செய்து) தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளன.

2013-ம் ஆண்டிற்குப்பிறகு 2019-ன் முதல் காலாண்டில் 145.50 டன்கள் என்ற அளவிற்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2017-ல் வங்கிகளின் மொத்த முதலீடு 375 டன்களாகக் காணப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டில் 651.50 டன்களாக அதிகரித்துள்ளன. இதில் ரஷ்யா மட்டுமே 274 டன்களுக்கு முதலீடு செய்துள்ளது.

தங்கம் விலை... இன்னும் உயருமா? - சந்தை நிலவரமும், கணிப்பும்

  விலையேற்றம் தொடருமா?

கடந்த ஆறு வருடங்களாக ஒவ்வொரு முறை தங்கம் விலை உயரும்போதும், சர்வதேச அளவில் ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1,350 அமெரிக்க டாலர்களைத் தொட்டுவிட்டு, மீண்டும் கீழிறங்கி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே இருந்துவந்தது. ஆனால், இந்த முறை 1,350 டாலர் என்கிற விலையைத் தாண்டி மேல்நோக்கிச் செல்வதால், இனிவரும் காலங்களில் 1,350 டாலர் என்பது குறைந்தபட்ச ஆதரவு விலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

  நம்மவர்கள் என்ன செய்யலாம்?

நம்மவர்களில் ஆபரணத் தேவைக்கு வாங்குபவர்களைத் தவிர மற்றவர்கள், அரசாங்கம் வெளியிடுகிற தங்கப்பத்திரங் களில்  (S.G.B) முதலீடு செய்யலாம். ஆபரணத் தங்கத்தைப் பாதுகாப்பது கடினம் என்பதால், அரசாங்கம் வெளியிடுகிற பத்திரங்களில் முதலீடு செய்து பயன் பெறலாம்!

- ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு