பிரீமியம் ஸ்டோரி
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ந்திய பங்குச் சந்தையின் போக்கு, தொடர்ந்து ஏற்ற இறக்க நிலையிலேயே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் பி.எஸ்.இ சந்தையில், இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை இறங்கும்போது, வேறு மூன்று நிறுவனங்களின் பங்கு விலை ஏற்றமடைந்தது. இது பங்கு சந்தையின் செயல்பாடு காளைகளுக்குச் சாதகமாக இருந்ததை உறுதி செய்தது.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ்கள் தலா 1.5%அதிகரித்தன. மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தொடங்கிய பேங்க் நிஃப்டி மீண்டெழுந்தது ஊக்கமளிப்பதாக இருந்தது. இதனால் நிஃப்டியும் உடனே மீண்டது.

நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்த நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட பெரிய அளவிலான மீட்பு, பங்கு வர்த்தகத்தில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கை எங்கெங்கும் பரவியதால் பெரும்பான்மையான துறைகளைச் சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலைகள் மீண்டெழுந்தன. இதனால் நீண்டகாலமாக எதிர்பார்த்த நல்லதொரு நகர்வு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ளது. இது முதலீட்டாளர்களை மகிழ்ச்சிக்கொள்ள வைத்தது.    

நிஃப்டி சார்ட்டில் 50 நாள்களின் விலை சராசரி நகர்வு அச்சுறுத்துவதாக உள்ளது. நிஃப்டி புள்ளிகளின் 11680-11650 வரம்பு முக்கிய ஆதரவு மண்டலமாக உள்ளது. இதனால், பெரியதொரு நகர்வு நிஃப்டியில் நடக்கிறது. மிகச் சிறப்பாக மீண்ட பிறகு பங்குச் சந்தைகள் எப்படித் தாக்குப் பிடிக்கின்றன என்பதை நாம் இன்னும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

நிஃப்டி 11750-11700-க்கு இறக்கியதை, பங்குகளை வாங்கும் வாய்ப்பாகத்தான் கருத்தில்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு நிலவரங்களின் தூண்டுதல்கள் ஊக்குவிக்கும்படியாக இல்லாததால் பங்குச் சந்தைகளிலும் துரிதமான ஏற்றப்போக்கைக் காணமுடியாது.

பங்குச் சந்தையின் பொதுவான செயல்பாடான, இறங்கும்போது வாங்கு, ஏற்றத்தில் விற்பனை செய் என்பதே தொடரும். இதனைத் தனிப்பட்ட பங்குகளில் பின்பற்றி லாபம் ஈட்டலாம்.

பேங்க் நிஃப்டி, தற்போது அசாதாரணமான சூழலில் இருக்கிறது. அது 30000 புள்ளிகள் வரம்பு மண்டலத்திலேயே தொடரக்கூடும். மற்றும் எந்தவொரு வாய்ப்பு வந்தாலும் மீண்டெழக்கூடிய அறிகுறி உள்ளது.

அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்திய பங்குச் சந்தை  மேலே ஏற முயற்சி செய்வது  முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும். 

அதற்காக எடுத்துக்கொள்ளும் காலம் அதிகமாக இருப்பதுதான் முதலீட்டாளர்களைச் சங்கடப் படுத்துவதாக உள்ளது. எனினும், வரும் வாரங்களில் பேங்க் நிஃப்டி 30900 புள்ளிகளுக்கு மேல் நகரக்கூடும். சிறு முதலீட்டாளர்கள் வரும் வாரத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சந்தை இறங்கினால் அவர்கள், நீண்ட கால முதலீட்டு நோக்கில் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம்.

 ஜஸ்ட் டயல்  (JUSTDIAL)
தற்போதைய விலை: ரூ.763.20
வாங்கலாம்


 இந்த நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வலுவாக  இருக்கிறது. இதே நிலை வரும் காலாண்டுகளில் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. பங்கின் விலை சார்ட், பங்கு விலை தொடர்ந்து மேல்நோக்கி ஏறும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.   மொமன்டம் இண்டிகேட்டரும் பங்கு விலை மேலும் உயரும் என்பதையே காட்டுகிறது.

சில பெரிய பிராஃபிட் புக்கிங் இருந்தாலும், பங்கின் விலை தொடர்ந்து  ஏறி வருகிறது. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.900 வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்குள்ளாக இந்த அளவுக்குப் பங்கின் விலை உயரலாம். தற்போதைய விலையில் வாங்கலாம் அல்லது 700 ரூபாய்க்கு இறங்கும் வரைக்கும் காத்திருந்து வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.630 வைத்துக்கொள்ளவும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிரென்ட் (TRENT)
தற்போதைய விலை: ரூ.408.85
வாங்கலாம்


டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான இதன் பங்கு, சாதகமான செய்திகளால் கடந்த சில வாரங்களாகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்த நிறுவனத்தின்  விரிவாக்கம் குறித்த சமீபத்திய செய்திளும் பங்கின் விலையை அதிகரிக்க உதவியிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் பங்கு, தொடர்ந்து  ஹையர் லோ-க்களை உருவாக்கியிருக்கிறது. இது, பங்கு விலை ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது  என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர்      60-க்கு மேலாக இருப்பதால், பங்கின் விலை இறக்கத்திலிருந்து ஏற்றத்துக்கு மாறக்கூடும். குறுகிய கால இலக்கு விலை ரூ.510 என வைத்துக் கொள்ளவும். அடுத்த சில வாரங் களில் இந்த உயர்வை எதிர்பார்க்கலாம். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

  பிரிகேட் என்டர்பிரைசஸ் (BRIGADE)
தற்போதைய விலை: ரூ.250.95
வாங்கலாம்


கடந்த 2018-19-ம் நிதியாண்டில், மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வீடு விற்பனை மந்த நிலையில் காணப்பட்டன. ஆனால், பிரிகேட் என்டர்பிரைசஸ் நிறுவனம் வலுவான விற்பனையைக் கொண்டிருந்தது.

பங்கு விலை 2017 டிசம்பர் வீழ்ச்சிக்குப் பிறகு, தற்போது  ஏற்றத்தின் போக்கில்  காணப்படுகிறது. பங்கின் விலையானது 260 ரூபாயை நெருங்குகிறது. அதைத் தாண்டியும் வருகிற நாள்களில் உயர வாய்ப்பி ருக்கிறது. இலக்கு விலை ரூ.325 என வைத்துக்கொள்ளவும். அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ்  (GROWTH AVENUES),
மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

 தொகுப்பு: தெ.சு.கவுதமன், செ.கார்த்திகேயன்

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு