Published:Updated:

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

Published:Updated:
ஃபண்ட் ரிசர்ச்!


ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டைனமிக் பிளான்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பலருக்கும் ஒரு ஆசை இருக்கும். சந்தை ஏறும்போது நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து ஒரு பகுதியை விற்று பணமாக வைத்துக் கொள்ள வேண்டும்; பிறகு சந்தை சரிவை சந்திக்கும்போது, மீண்டும் பங்குகளை வாங்க வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபண்ட் ரிசர்ச்!

னால், சிறு முதலீட்டாளர் களாகிய நமக்கு இந்த ஆசை சரியாக நிறைவேறுவதே இல்லை. ஒவ்வொரு முறை நாம் விற்கும்போதும் சந்தை மேன்மேலும் ஏறிக் கொண்டே செல்லும். அதே போல் நாம் வாங்க, வாங்க சந்தை சரிந்து கொண்டே செல்லும். கடைசியில் களைப்படைந்து, நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவோம்.

ஆனால், மார்க்கெட்டின் உச்சம் அறிந்து விற்பதும், மீண்டும் தரை தட்டிவிட்டதும் மீண்டும் வாங்க ஆரம்பிப்பதும்தான் டைனமிக் பிளான். இந்த வகை திட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஃபண்ட் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டைனமிக் பிளான்.

ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தின் தயாரிப்பு இந்த ஃபண்ட். கடந்த டிசம்பர் 2011 நிலவரப்படி, ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் இந்தியாவில் உள்ள ஃபண்ட் நிறுவனங்களில் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனம் சுமார் ரூ.69,500 கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஸ்பான்ஸர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகும்.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்நிறுவனத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 51%-ஐயும், பிரிட்டனைச் சார்ந்த புரூடென்ஷியல் நிறுவனம் 49% பங்குகளையும் வைத்துள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தற்போதைய முதன்மை முதலீட்டு அலுவலர் சங்கரன் நரேன் ஆவார்.

##~##
சந்தை அதிகமான மதிப்பீட்டில் இருக்கும்போது இந்த ஃபண்ட் தனது கேஷ் லெவலை அதிகப்படுத்திக் கொள்வதுடன், வேல்யூ பங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டிருக்கும்.

சந்தை குறைந்த மதிப்பீட்டில் இருக்கும்போது முழுவதுமாக (100%) பங்குகளில் முதலீடு செய்திருக்கும். சந்தை மேலெழுந்து வரும்போது, சந்தையைவிட அதிகமாக மேலெழும்பி வரும். சந்தை மேலும் கீழும் ஏறி இறங்கும்போது, லார்ஜ்கேப் பங்குகளுக்கு அதிக இடத்தைக் கொடுக்கும்.

மேலும், குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதுடன், கேஷ் லெவலையும் ஓரளவு அதிகரிக்கும். இந்த செயல்பாட்டை ஒரு ஒழுக்கத்துடன் இதுவரை செய்து வந்துள்ளது இத்திட்டம். ஆகையால்தான் 9 வருடங்களுக்கு முன்பு இத்திட்டம் ஆரம்பிக்கும்போது ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ.10,80,000 ஆகும்.

இது ஒரு மல்டிகேப் ஃபண்டாகும். அதாவது, லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் தனது முதலீட்டை மேற்கொள்கிறது. தற்சமயம்   74 சதவிகிதத்துக்கும் அதிகமாக லார்ஜ்கேப் பங்குகளில் தனது முதலீட்டை வைத்துள்ளது.

ஃபண்ட் ரிசர்ச்!

சந்தை முழுவதுமாக காளை யின் பிடியில் இருக்கும்போது, இந்த ஃபண்டின் செயல்பாடு பிற அக்ரெஸிவ்வான திட்டங்களுடன் ஒப்பிடுகையில், சற்று குறைவாகத்தான் இருக்கும். அதே சமயம் சந்தை சரியும்போது, இத்திட்டம் நன்றாகச் செயல்படும்.

உதாரணத்திற்கு, 2011-ம் ஆண்டு சந்தை 24.62% சரிந்தது. ஆனால், இத்திட்டமோ      20.3 சதவிகிதம்தான் சரிந்தது. ஆகவே, இத்திட்டம் கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

இவ்வாறு டைனமிக்காகச் செயல்படும் திட்டங்கள், சில குறுகிய காலகட்டங்களில் செயல்பாடு நன்றாக இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், ஒழுக்கத்துடன் செயல்படும் பட்சத்தில் (இந்த ஃபண்டைப் போல) நீண்ட காலகட்டங்களில் ரிஸ்க் அட்ஜஸ்டட் முறையில் நல்ல வருவாய் தர வல்லது. மேலும், இந்தியா போன்ற அதிக ஏற்ற  இறக்கம் உள்ள சந்தைகளில் இத்திட்டத்தின் யுக்தி நல்ல பலனைத் தர வல்லது.

இத்திட்டத்தின் பலவீனம்: ஒவ்வொரு முறையும் ஃபண்ட் மேனேஜர் எடுக்கும் கேஷ் முடிவுகள் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதுபோன்ற சமயங்களில் இத்திட்டம் சற்று குறைந்த செயல்பாட்டைத் தரலாம்.

ஃபண்ட் ரிசர்ச்!

மேலும், கடந்த ஒரு வருடத்தில் ஃபண்ட் மேனேஜ்மென்ட் குழுவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதன் ஸ்பான்ஸர் பலமானவர் என்பதால், இதுபோன்ற மாற்றங்களை எளிதாகச் சமாளித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

கேஷ் லெவலை ஏற்றி இறக்குவதுடன், தேவைப்படும்போது டெரிவேட்டிவ்ஸையும் தனது போர்ட்ஃபோலியோவில் உபயோகித்துக் கொள்ளும். தற்போது (ஜனவரி 31, 2012) சந்தை ஏறியதினால், தனது பங்கு சார்ந்த முதலீட்டை போர்ட்ஃபோலியோவில் 85 சதவிகிதமாக குறைத்துள்ளது.

தற்போது பார்மா மற்றும் எஃகு அல்லாத உலோகத் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், நிதித்துறை, ஆட்டோ, கன்ஸ்யூமர் துறைகளில் அன்டர்வெயிட்டாகவும் உள்ளது.

சென்ற ஆண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் மற்றும் ஃபியூஷன் ஃபண்டுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள், நீண்ட நாட்கள் காத்திருக்க முடிந்தவர்கள், தங்களது ஓய்வுகாலத்துக்காக மற்றும் குழந்தைகள் நலனுக்காக முதலீடு செய்பவர்கள் போன்ற அனைவரும் எஸ்.ஐ.பி. முறையில் தாராளமாக முதலீடு செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் எஸ்.டி.பி. முறையில் முதலீடு செய்யலாம்.

நல்ல யுக்தி மற்றும் செயல்பாடு, ஸ்திரமான தாய் நிறுவனம், சந்தை கீழே செல்லும்போது கிடைக்கக்கூடிய பாதுகாப்பு போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண்கள் 85/100.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism