Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

Published:Updated:
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதற்கு முந்தைய வாரத்தில் நாம் மணி ஃப்ளோ இண்டெக்ஸ் பற்றி பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கப்போவது அக்யூமுலேஷன் - டிஸ்ட்ரிப்யூஷன் லைன் என்றழைக்கப்படும் இண்டிகேட்டரைத்தான். இந்த இண்டிகேட்டரும் வால்யூமையும் விலையையும் கருத்தில் கொண்டு கணிக்கப்படுவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ரு ஷேரின் விலை ஏன் ஏறுகிறது? நிறையப் பேர் அதை துரத்தி துரத்தி வாங்குவதால்தான். ஒரு ஷேரின் விலை ஏறும்போது அதனை அதிக எண்ணிக்கையில் பலரும் வாங்குவதால், அந்த ஷேரில் முதலீடு செய்யப்படும் பணத்தின் அளவும் அதிகமாகும்.

அதேபோல் ஒரு ஷேரின் விலை இறங்கும்போது அதை பலரும் துரத்தித் துரத்தி விற்பதால்தான் பணம் வேகமாக அந்த ஷேரை விட்டு வெளியே போகிறது.  

சுலபமாகப் புரிந்துகொள்ள இதை இன்னொரு கோணத்தில் குத்துமதிப்பாக அலசுவோம். ஒரு ஷேரின் இன்றைய குளோஸிங் விலை நேற்றைய குளோஸிங் விலையைவிட அதிகமாகியுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஷேரில் இன்றைக்கு நடந்த வால்யூம் அந்த ஷேரை பலர் முனைந்து வாங்கியதால் நடந்த வால்யூம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது பலர் முனைந்து விற்றதால் வந்த வால்யூம் என்று எடுத்துக் கொள்ளலாமா? பலர் முனைந்து வாங்கியதால் வந்த வால்யூம் என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்.

##~##
அதேபோல் நேற்றைய குளோஸிங்கைவிட இன்றைய குளோஸிங் குறைவாக இருந்தால், பலர் முனைந்து விற்றதால் வந்த வால்யூம் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  

குளோஸிங் விலை நேற்றைய தினத்தைவிட விலை ஏறிய நாட்களை அக்யூமுலேஷன் நாள் (வாங்கிச் சேர்த்த நாள்) என்றும், நேற்றைய தினத்தைவிட விலை இறங்கிய நாட்களை டிஸ்ட்ரிப்யூஷன் நாள் (விற்றுத் தீர்த்த நாள்) என்றும் அழைக்கலாம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இதில் நேற்றைய குளோஸிங்கைவிட இன்றைய குளோஸிங் ஏறியிருந்ததால் அல்லது இறங்கியிருந்ததால் என்று சிம்பிளாக கணக்கிட்டு அக்யூமுலேஷன் அல்லது டிஸ்ட்ரிப்யூஷன் என்று குத்துமதிப்பாக கணக்கிடு வதைவிட, இன்னும் கொஞ்சம் அறிவியல்பூர்வமாக கணக்கிட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

நேற்றைய விலையை மறந்துவிடுங்கள். இன்றைய விலையில் ஹை, லோ, குளோஸ் என்ற மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, ஒரு ஷேரின் இன்றைய ஹை (21), லோ (10), குளோஸ் (20) என்று வைத்துக் கொள்வோம். அத்துடன் அன்றைய தினத்தின் வால்யூமையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1. இன்றைய குளோஸிங்கில் இருந்து லோவை கழியுங்கள் (20-10=10)= அ

2. இன்றைய ஹையில் இருந்து குளோஸிங்கை கழியுங்கள் (21-20=1) = ஆ

3. இன்றைய ஹையில் இருந்து லோவை கழியுங்கள் (21-10 = 11) = இ

அடுத்த பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஃபார்முலாவின் மூலம் கிடைப்பது மணி ஃப்ளோ மல்ட்டிப்ளையர். இந்த மணி ஃப்ளோ மல்ட்டிப்ளையருடன் அன்றைய தினத்தின் வால்யூமை பெருக்க வேண்டும். இப்படி வால்யூமை பெருக்குவதால் கிடைப்பது மணி ஃப்ளோ வால்யூம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

மணி ஃப்ளோ மல்ட்டிப்ளையர் 1 மற்றும் -1-க்குள்ளேதான் வரும். மணி ஃப்ளோ மல்ட்டிப்ளையர் என்று வந்தால் அன்றைய வால்யூமில் ஒரு பகுதியை (மணி ஃப்ளோ மல்டிப்ளையர் ஜ் வால்யூம்) அக்யூமுலேஷனால் நடந்தது என்று எடுத்துக் கொண்டு முந்தைய தினம் வரை சார்ட்டில் போட்டுக் கொண்டிருந்த வால்யூமுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். -1 என்று வந்தால் டிஸ்ட்ரிப்யூஷனால் வந்த வால்யூம் என்று  எடுத்துக் கொண்டு முந்தைய தினம் வரை சார்ட்டில் போட்டுக் கொண்டிருந்த வால்யூமிலிருந்து கழித்து கொள்ள வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்திற்கு மணி ஃப்ளோ மல்டிப்ளையர் 0.8181 என்று வரும். மற்றொரு நாள் ஹை (20), லோ (10), குளோஸ் (10) என்று இருந்தால் - 1 என்று வரும்.

மணி ஃப்ளோ மல்ட்டிப்ளை யரை ஒரு நாள் வால்யூமுடன் பெருக்கும்போது அந்த நாள் வால்யூமில் எந்த அளவு அக்யூமுலேஷனோ அல்லது டிஸ்ட்ரிப்யூஷனோ நடந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

நாம் முதலில் குத்துமதிப்பாகப் பார்த்தபோது அன்றைய வால்யூம் முழுவதையுமே விலை ஏறியிருந்தால் அக்யூமுலேஷன் வால்யூமாகவும், விலை இறங்கி யிருந்தால் டிஸ்ட்ரிப்யூஷன் வால்யூமாகவோ எடுத்துக் கொள்ளலாம் என நினைத் தோம். மேலேயுள்ள ஃபார்முலா வின்படி, கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை இன்னும் கொஞ்சம் அறிவியல்பூர்வமாக கிடைக்கும் என்பதுதான் இந்த ஃபார்முலாவின் சிறப்பு.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

அது என்ன சிறப்பு என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். ஒரு நாளில் விலை ஏற்றத்தில் ஆரம்பித்து ஏற்றத்திலேயே சென்று குளோஸிங் விலைதான் அன்றைய ஹையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணத்திற்கு, 50 குளோஸிங், 40 லோ, 50 ஹை என்று வைத்துக் கொள்வோம். [(50-40)- (50-50)]/(50-40) என்று ஃபார்முலாவில் வரும். [(10-0)/10] = 1 என்று மணி ஃப்ளோ மல்டிப்ளையர் வரும். மணி ஃப்ளோ மல்டிப்ளையர் 1 என்றால், அன்றைய வால்யூமை மொத்தமுமாக அக்யூமுலேஷன் வால்யூம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நாள் முழுவதும் ஏற்றம், குளோஸிங்தான் அன்றைய ஹை என்றால், மொத்த வால்யூமே அக்யூமுலேஷன் (வாங்கிக் குவித்ததால்) நடந்ததால் வந்த வால்யூம் என்று சொல்லலாம் இல்லையா?

அதேபோல் 40 குளோஸிங், 40 லோ, 50 ஹை என்று வைத்துக் கொண்டால் என்னவாகும். [(40-40)-(50-40)]/(50-40) என்று வரும். [(0)-(10)]/(10) என்று வரும். (-10/10) = -1 என்று வரும். -1 என்றால் அன்றைய வால்யூம் முழுவதுமே டிஸ்ட்ரிப்யூஷனால் நடந்த வால்யூம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏன் என்று கேட்கிறீர்களா? வாங்கும் கூட்டம் அதிகமாக இருந்தால் என்னவாகும்? அன்றைய குளோஸிங் விலை அன்றைய ஹையிலோ அல்லது ஹைக்கு அருகிலேயோ குளோஸாகும். விற்கும் கூட்டம் அதிகம் இருந்தால் அன்றைய குளோஸிங் விலை லோவிலேயோ அல்லது லோவிற்கு அருகிலேயோ குளோஸாகும். அன்றைய தினத்தில் நடந்த விலைகளுக்கு நடுவே எந்த இடத்தில் குளோஸாகியுள்ளது என்ற விகிதத்தினை அளவீடாகக் கொண்டே அந்த அளவிற்கான வால்யூமை அக்யூமுலேஷன் அல்லது டிஸ்ட்ரிப்யூஷன் என்று நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஒரு நாளின் மல்டிப்ளையர் பாசிட்டிவ்வாகவும் ஒன்று அல்லது ஒன்றுக்கு அருகேயும் இருந்து (உதாரணம் 0.90/0.81 முதலியன) வால்யூம் அதிகமாக நடந்திருந்தால் மிகவும் ஸ்ட்ராங்காக அந்த ஷேரை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு நாளின் மல்டிப்ளையர் நெகட்டிவ் வாகவும் ஒன்று அல்லது ஒன்றுக்கு அருகேயும் இருந்து (உதாரணம் - 0.95/0.86 முதலியன) வால்யூம் அதிகமாக நடந்திருந்தால் மிகவும் ஸ்ட்ராங்காக அந்த ஷேரை விற்றுத் தள்ளுகிறார்கள் என்று அர்த்தம்.

மேலே தரப்பட்டுள்ள ஐ.எப்.சி.ஐ.யின் தினசரி விலை கேண்டில்ஸ்டிக் மற்றும் அக்யூமுலேஷன்/ டிஸ்ட்ரிப்யூஷன் லைனைக் கொண்ட சார்ட்டை பார்த்தால் உங்களுக்கு எப்படி இந்த லைனை வைத்துக் கொண்டு சந்தையைக் கணிப்பது என்பது சுலபமாகப் புரியும்.

அக்யூமுலேஷன்/ டிஸ்ட்ரிப்யூஷன் (ஏடி) லைனை வைத்து பலன் சொல்வது எளிது. விலையின் டிரெண்ட் ஏற்றமாகவும், ஏடிலைனும் ஏற்றமாகவும் இருந்தால் ஷேர் ஏறும் டிரெண்டில் இருக்கிறது.  விலை இறங்குமுகமாகவும் ஏடி லைன் இறங்குமுகமாகவும் இருந்தால் ஷேர் இறங்கும் டிரெண்டில் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஒரு பங்கின் விலையின்  டிரெண்டும் ஏற்றமாகவும், அக்யூமுலேஷன்/ டிஸ்ட்ரிப்யூஷன் லைன் கீழேயுமாக இருந்தால் விலை ஏறயேற அனைவரும் அந்த ஷேரை விற்றுவிட்டு வெளியே போகிறார்கள் என்று அர்த்தம். விலை எப்போது வேண்டுமென்றாலும் இறங்கலாம், உஷார் என்று டிரேடர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விலையின் டிரெண்ட் இறக்கமாகவும் அக்யூமுலேஷன்/ டிஸ்ட்ரிப்யூஷன் லைன் மேலேயுமாக இருந்தால் விலை இறங்க இறங்க அனைவரும் அந்த ஷேரை வாங்கிக் குவிக்கிறார்கள் என்று அர்த்தம். விலை எந்த நிமிடமும் ஏறலாம் என டிரேடர்கள்  புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றுமொரு உபயோகமான டெக்னிக்குடன் அடுத்தவாரம் சந்திப்போம்.

(வளரும்)

நீங்களும் அனலிஸ்ட்தான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism