Published:Updated:

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

Published:Updated:
கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

சாதாரணமாக கம்பெனி அலசலில் நாம் அலசும் கம்பெனிகள் ஆக்கும் தொழிலில் இருக்கும். ஆனால், இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனி அழிவில் இருந்து காக்கும் பொருட்களை தயார் செய்யும் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர், நிதின் ஃபயர் புரொட்டக்ஷன் இண்டஸ்ட்ரிஸ் லிட்.

பொருளாதாரம் வளர வளர அழிவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் வேகமாக வளர்ந்து கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. இதையும்விட பெரிய கட்டடங்களும் வளாகங்களும் புதிதாகக் கட்டப்படும் போது அரசாங்கமும் தீவிரமாக தீயணைப்பிற்கான சட்ட திட்டங்களை அமல்படுத்தவே செய்ய ஆரம்பிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமீபத்தில் நடந்த பெரிய தீ விபத்துகளுக்குப் பின்னால் அரசாங்கத்தின் போக்கில் கடுமை அதிகரித்துக் கொண்டே போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பேயில்லை. ஆனால், எல்லோருமே சர்வ ஜாக்கிரதையாக இருந்து தீ விபத்தைக் குறைக்கலாம் என்பது ஒரு கான்செப்ட்தானே தவிர 100 சதவிகிதம் சாத்தியமுள்ள ஒரு விஷயம் இல்லை. தவிர்க்க முடிந்த விஷயங்கள் பலவற்றை நம்மால் வரவிடாமலே காத்துக் கொள்ள முடியும். ஆனால், தீ விபத்து என்பதைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்பதால் அதற்கு தயாராக இருப்பதுதான் உத்தமம்.

தயாராக இருத்தல் என்பதில் இரண்டு வகை. கேடுகளை உணர்ந்து சுயமாகவே தயாராக இருப்பது ஒரு வகை. சட்ட ரீதியான கட்டுப்பாட்டின் கீழ் தயாராக இருப்பது இன்னொரு வகை. வசதி வாய்ப்பு மக்களுக்கு அதிகரிப்பதால் சுயமாக தயாரானாலும், விபத்துக்களால் சட்ட திட்டங்கள் கடுமை யாவதால்  பயனடையப் போகிற தொழிலில்தான் நிதின் ஃபயர் இருக்கிறது. எனவே, தொழில் ரீதியாக வாய்ப்புகளுக்கு நிதின் ஃபயருக்கு பஞ்சமேயில்லை.  

வீடுகள், தொழிற்சாலைகள் என இரண்டு வகைகள் மட்டுமல்லாமல் எண்ணெய் எடுக்கும் இடங்கள், சுத்திகரிக்கும் நிறுவனங்கள், மால்கள், தொலைத்தொடர்புத் துறையில் டவர்கள், சுவிட்சிங் சென்டர்கள், கம்ப்யூட்டர் துறை நிறுவனங்கள் மற்றும் டேட்டா சென்டர்கள், ரீடெயில் ஸ்டோர்கள், தியேட்டர்கள் என வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது இந்நிறுவனத்திற்கு.

இந்திய தீயணைப்பான் சந்தையின் வியாபார அளவு கிட்டத்தட்ட ரூ.3,000 கோடியாக இருக்கிறது என்றும் வருடத்திற்கு சராசரியாக 25-30 சதவிகித அளவிற்கு வளர்ச்சி இருக்கிறது என்றும் சொல்கிறது இத்துறை குறித்த ஆய்வுகள்.

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

கம்பெனி எப்படி?

தீ அணைப்பது என்பது ஒரு ஸ்பெஷல் திறமை வேண்டிய தொழில். அனுபவம் மிகப் பெரிய அளவில் உதவும் தொழில்களில் இதுவும் ஒன்று என்றால் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள். அனுபவம் நிறையவே உதவும் இத்தொழிலில் 20 வருடத்துக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருப்பதுதான் நிதின் ஃபயர். தீயணைப்பான்களின் டிசைன், சப்ளை மற்றும் நிறுவுதலில் மிகுந்த அனுபவம் கொண்ட நிதின் ஃபயர் இந்தியா, ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்கிழக்காசிய நாடுகள், கிழக்கு ஆப்பிரிக்கா என பெரியதொரு வட்டத்தில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

தீயணைப்பான்கள், தீ பரவுவதைத் தடுக்கப் பயன்படும் உபகரணங்கள், தீப்பிடித்தால் ஒலிக்கும் அலாரம்கள், புகை கண்டுபிடிப்பான்கள், ஸ்ப்ரிங்க்லர்கள், சிலிண்டர்கள் என பல்வேறு விதமான தீயணைப்புத் துறை சம்பந்தமான கருவிகளையும் கெமிக்கல் களையும் தயாரித்து விற்பனை செய்கிறது நிதின் ஃபயர்.

சீமென்ஸ், ஹனிவெல், யுனைடெட் டெக், டைகோ என உலக அளவில் பிரசித்தி பெற்ற போட்டியாளர்களைக் கொண்டிருந்தாலும் இந்தியன் ஆயில், டாடா, ரிலையன்ஸ், விப்ரோ, ஐடியா, ஏர்செல் போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு தீயணைப்பான்களை சப்ளை செய்வது என்னவோ நிதின் ஃபயர்தான்.

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

இதுபோன்ற பெரிய கம்பெனிகள் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்களை தன்னுடைய கஸ்டமராக வைத்திருப்பதில் இருந்தே நிதின் ஃபயரின் தரம் மற்றும் திறன் உங்களுக்கு தெளிவாகப் புரியும். 2007-ல் சந்தையில் லிஸ்டானதிலிருந்து கம்பெனியின் வளர்ச்சி அபரிமிதமாகவே இருக்கிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கடன் என்பது நிதின் ஃபயருக்கு பெரிய அளவில் இல்லை.

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

ஏன் இந்த ஷேரை வாங்க வேண்டும்?

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

ஏற்கெனவே சொன்னபடி பொருளாதார வளர்ச்சியும், அலுவலகம், தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் துறையில் இருக்கும் வேகமான வளர்ச்சியும் தீயணைப்பானுக்கு டிமாண்டை அதிகரிக்கவே செய்யும். அடுக்குமாடிக் கட்டடங்கள், மால்கள், பி.பி.ஓ. கம்பெனிகள், டெலிபோன் டவர்கள் மற்றும் அலுவலகங்கள் என பல்வேறுவிதமான மனிதர்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மற்றும் மனிதனுக்கு இன்றியமையாதச் சேவைகள் அதிரிக்கும்போது தீயணைப்பு என்பது கட்டாயம் செலவின் ஒரு அங்கமாக ஆகிவிடுகிறது.

தீயணைப்புத்துறை என்பது அனுபவசாலிகளின் பட்டறை. அனுபவமிக்க நிதின் ஃபயருக்கும், அனுபவமில்லாத ஒரு புதிய கம்பெனிக்கும் இடையே நடக்கும் போட்டிகளில் நிச்சயம் கருவிகள் வாங்குபவருடைய தீர்ப்பு நிதின் ஃபயருக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

தீயணைப்பான் தவிர, அது சம்பந்தப்பட்ட அத்தனை கருவிகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது நிதின் ஃபயர். எண்ணெய் இருக்கிற இடத்திற்கு நெருப்பு மிகவும் நண்பனாகவே இருக்கும். எண்ணெய் இருக்கும் யு.ஏ.இ. மற்றும் மலேசியாவில் இந்தக் கம்பெனி கால் பதித்துள்ளது.

யு.ஏ.இ. மற்றும் மலேசியாவில் இருந்து நிறையவே ஆர்டர்கள் நிதின் ஃபயர் நிறுவனத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சின்ன வேலையோ, பெரிய வேலையோ நெருப்பு என்றால் வித்தியாசம் பார்ப்பதில்லை நிதின் ஃபயர். தீயணைப்பின் அனைத்து செக்மென்டிலும் வியாபாரத்தைச் செவ்வனே செய்து வருகிறது இந்த கம்பெனி. அதனால் எப்போதும் ஆர்டர் நிலவரம் சமமாகவே இருந்து வருகிறது.

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

கம்பெனி அலசல் - நிதின் ஃபயர்!

நெருப்பாச்சே! ரிஸ்க் ஏதும் உண்டா என்கிறீர்களா? பொருளாதாரத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தொழில். பொருளாதாரம் வளர வளர தொழிலும் வேகமாக வளரும். வெளிநாடு களில் சென்று தொழில் செய்ய முயன்றுள்ளது நிதின் ஃபயர். ஒவ்வொரு நாட்டிலும் தீயணைப்புத் துறை சட்ட திட்டங்கள் மாறுபட வாய்ப்புள்ளது. அந்தந்த நாட்டுக்கு ஏற்றாற்போல் மாறுதல்களைக் கடைப்பிடிக்கும் போது அடக்க விலை அதிகமாகி லாபம் குறைய வாய்ப்புள்ளது.

சி.என்.ஜி. சிலிண்டர் தயாரிக்கும் தொழிலில் கால் பதித்த இந்நிறுவனம், கடுமையான போட்டியால் பெரிய லாபம் பார்க்க முடியவில்லை. வெளிநாடுகளில் தொழில் செய்வதால் அந்நிய செலாவணியின் மதிப்பு மாறுதலால் வரும் ரிஸ்க்குகளும் நிதின் ஃபயருக்கு உண்டு. இதையெல்லாம் தாண்டி இது ஒரு ஸ்மால்கேப் பங்கு. பொருளாதார ஓட்டம் சிறிதளவு தடைப்பட்டாலும்கூட லாபத்தில் நல்லதொரு பாதிப்பு வந்துவிடும் வாய்ப்பு எப்போதுமே நிலவிவரும்.

என்னதான் பல ரிஸ்க்குகள் இருந்தாலும் நெருப்பென்றால் அனைவரும் பயப்படுவார்கள். அதற்குண்டான தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவே செய்வார்கள். அதனால், நிதின் ஃபயர் பங்கை 32 ரூபாய் அளவிற்கு வரும்போது வாங்கிப் போட்டு, தங்கள் போர்ட்ஃபோலியோவை ஃபயர் ப்ரூப் செய்து கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism