Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த சில நாட்களாகவே எதிர்பார்த்து வந்த சரிவு இந்த வாரத்தில் வந்துவிட்டது. ஆனால், சந்தையின் ஏற்றத்தில் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்த சில பங்குகள் லாபத்துடன் வெளியேறி விட்டன. சந்தை குறையும்போது முதலீடு செய்ய வேண்டும், ஏறும்போது விற்க வேண்டும் என்பதுதான் பொதுவான விதி. ஆனால், இதற்கு மாறாகவே பல முதலீட்டாளர்கள் செய்து வருகிறார்கள். இது மாதிரியான குழப்பம் எதுவும் வரக்கூடாது என்பதால்தான் மிக எளிய விதிமுறைகளுடன் நாம் போர்ட்ஃபோலியோவை ஆரம்பித்தோம்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிப்படையில் பலமாக இருக்கும் பங்குகளை வாங்குகிறோம். 15 சதவிகிதம் உயர்ந்தால் விற்றுவிடுகிறோம், 15 சதவிகிதம் சரிந்தால் மீண்டும் சராசரி செய்கிறோம். இப்படி செய்யும்போது தவறு ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவே.

பல முதலீட்டாளர்களுக்கு 15 சதவிகிதம் என்பது குறைவான லாபமாக கருதலாம். ஆனால், சந்தை கடந்த ஐந்து வருடங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக ஒரே புள்ளியில் மையம் கொண்டிருக்கிறது. இந்த ஏற்ற, இறக்கங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் 15 சதவிகித லாபம் என்பதை நம்முடைய இலக்காக வைத்துக் கொண்டோம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலைமை!

நான்கு பங்குகள் லாபத்துடன் வெளியேறி இருந்தாலும், சந்தையின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டு பங்குகளை மட்டுமே பரிந்துரை செய்திருந்தேன். அந்த இரண்டு பங்குகளையும் வாங்கி இருக்க முடியும். அதே போல கடந்த வாரத்தில் எந்த ஒரு பங்கும் லாபத்தில் வெளியே செல்லவில்லை. அதேபோல விலை குறைந்து சராசரியும் ஆகவில்லை.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

முதலீட்டாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பின் காரணமாக ஒரு வங்கிப் பங்கினை நம் போர்ட்ஃபோலியோவில் சேர்த்தோம். அந்த பங்கின் விலை கடந்த வாரம் சரிந்து விட்டது. இருந்தாலும், அடிப்படையில் அந்த பங்கு பலமாக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருவேளை அடுத்த வாரம் இன்னும்கூட சரியலாம். அப்படி சராசரி செய்ய வேண்டியிருந்தால், சராசரி செய்துவிடவும்.

இப்போதைக்கு நம் போர்ட்ஃபோலியோவில் 14 பங்குகள் இருந்தாலும், இந்த வாரம் ஒரு பங்கில் மட்டும் முதலீடு செய்யலாம். வரும் வார நிலவரங்களைப் பொறுத்து அடுத்து செய்ய வேண்டியதைச் சொல்கிறேன்.

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism