பங்குச் சந்தை முதலீடு ரிஸ்க் நிறைந்தது என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. தவிர, இந்திய பங்குச் சந்தை நீண்ட காலமாக ஏற்ற, இறக்கத்திலேயே இருக்கிறது. இந்நிலையில் ரிஸ்க்கை குறைத்து லாபத்தைப் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வியுடன் பங்குச் சந்தை நிபுணர் எஸ்.லெட்சுமணராமனை சந்தித்தோம். பங்குச் சந்தையில் ரிஸ்குகளின் தாக்கத்தைக் குறைக்க அவர் பக்கா வழிகளையும் டிப்ஸ்களையும் தந்தார்.

. ''ப.ங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பெரும்பாலானோர், தங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி நினைக்க தொடங்கும்போதே ரிஸ்க் உருவாகிவிடுகிறது. ரிஸ்க் என்றால் என்ன?.
எதிர்பாராமல் ஏற்படக் கூடிய இடர்பாடுதான் ரிஸ்க் எனப்படுகிறது. உதாரணமாக, கடற்கரைக்குச் செல்கிறோம். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அலை சீராக, மெதுவாக வருவதுபோல் தெரியும். காலை நனைப்போம் என்று இறங்கினால், அலைகள் நம்மருகே வேகமாக வருவது போல் இருக்கும். ஆனால், வராது.

நாம் சில அடிகள் எடுத்து வைத்தால், அப்போது திடீரென ஓர் அலை வந்து நம்மை நனைத்துவிடும். இதுதான் ரிஸ்க். பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் இந்த ரிஸ்க் பற்றி தெரியாமல்தான் பணத்தை இழக்கிறார்கள் அல்லது லாபம் சம்பாதிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

பொதுவாக, பங்கு முதலீடு தொடர்பான ரிஸ்குகளை நான்கு வகைக்குள் அடக்கலாம். சிஸ்டமிக் ரிஸ்க், மார்க்கெட் ரிஸ்க் அல்லது சிஸ்டமேட்டிக் ரிஸ்க், அன்சிஸ்டமேட்டிக் ரிஸ்க், மனித தவறுகள் மூலம் ஏற்படும் ஆபரேஷனல் ரிஸ்க்.

இவற்றைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சிஸ்டமிக் ரிஸ்க்..!

ஒரு சிஸ்டம் முழுமையும் செயல் இழப்பதால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் ரிஸ்க். உதாரணத்துக்கு, 1992-ல் ஹர்ஷத் மேத்தா மோசடியால் இந்திய பங்குச் சந்தை ஒட்டுமொத்தமாகச் சிக்கலுக்குள்ளானது.

கடந்த 2008-ல் அமெரிக்காவில் சப்பிரைம் பிரச்னை காரணமாக சர்வதேசச் சந்தைகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளானதும் இந்த வகையே..!

இந்தியாவில் தற்போதைய நிலையில் இந்த ரிஸ்க் 90% இல்லை என்றே சொல்லலாம். காரணம், பங்குச் சந்தைக்கு செபி, காப்பீட்டுக்கு ஐ.ஆர்.டி.ஏ., தொலைதொடர்புக்கு டிராய், வங்கித் துறைக்கு ஆர்.பி.ஐ. போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகள் பலமாக இருக்கின்றன. 1995-ல் ஒரு பங்குத் தரகர் ஃபெயிலியர் ஆனாலே சந்தை பாதிக்கும். இப்போது பங்குத் தரகர் பாதிக்கப்பட்டாலும் செபியின் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி மூலம் அந்த ரிஸ்க் சரி செய்யப்படும். தவிர, இதனால் அன்றாட நிகழ்வு எதுவும் பாதிப்பு அடையாது.

மார்க்கெட் ரிஸ்க்!

பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் மார்க்கெட் ரிஸ்க் எனப்படுகிறது. சிஸ்டமேட்டிக் ரிஸ்க் ஏற்பட பின்வரும் விஷயங்கள் காரணங்களாக அமையலாம். அரசின் பொருளாதார கொள்கை முடிவுகள், ஆர்.பி.ஐ. நிதி மற்றும் கடன் கொள்கை, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி, பணவீக்க விகிதம், வட்டி விகிதம், கச்சா எண்ணெய் விலை, இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர், யூரோ உள்ளிட்ட இதர கரன்சிகளின் மதிப்பு போன்றவை பாசிட்டிவ்-ஆக, அதாவது ஜி.டி.பி. வளர்ச்சி கண்டு, பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் குறைவாக இருந்தால் பங்குச் சந்தை ஏற்றம் காணும். இதற்கு மாறாக இருந்தால் சந்தை இறங்கும்.

ஏற்ற, இறக்கச் சந்தையில் ரிஸ்க்கினால் ஏற்படும் பாதிப்பை எப்படி குறைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

நீண்ட கால முதலீடு - பங்குச் சந்தை நீண்ட காலத்தில் எப்போதும் நல்ல லாபத்தைதான் தந்திருக்கிறது.

குறிப்பிட்ட இடைவெளியில் ஓர் ஒழுங்கோடு எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது..!

ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் எனில் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (எஃப்அண்ட்ஓ) சந்தையில் ஹெட்ஜ் செய்வது மூலம் இழப்பை சரி செய்வது.

முதலீட்டை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்து, தொடர்வதா? இல்லையா என்பதை முடிவு செய்வது.

அன்சிஸ்டமேட்டிக் ரிஸ்க்..!

ஒரு குறிப்பிட்ட துறை அல்லது நிறுவனங்கள் பாதிக்கப் படுவது அன்சிஸ்டமேட்டிக் ரிஸ்க் ஆகும். உதாரணத்துக்கு, ரூபாய் மதிப்பு உயரும்போது ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு. இந்த ரிஸ்க்கினால் உருவாகும் தாக்கத்தைக் குறைக்க வழிகள்..!

டைவர்சிஃபைட் இன்வெஸ்ட்மென்ட் - பங்குச் சந்தையில் லாபம் பார்க்கவும், ரிஸ்க்கை குறைக்கவும் சிறந்த வழியாக இருக்கிறது.

பொருளாதார ஆய்வு செய்தல், துறை மற்றும் கம்பெனி சார்ந்த ஆய்வு, நிறுவன மதிப்பீடு அல்லது டெக்னிக்கல் அனாலிசிஸ் போன்றவை மூலம் ரிஸ்க்கை குறைத்துக் கொள்ள முடியும்.

மனிதத் தவறுகள்!

பங்கு விலை உயர்வது, குறைவது தெரியாமல் வாங்குவதும், விற்பதும் எல்லா முதலீட்டாளர்களுக்கும் ஏற்படும் அனுபவம்தான். துறை மற்றும் நிறுவனங்கள் பற்றி ஆய்வு செய்யாதது, எந்த விலையில் பங்கை வாங்குவது, விற்பது என்கிற தெளிவான முடிவு எடுக்காதது ஆகியவையே இந்த ரிஸ்கிற்குக் காரணம்.

ரிஸ்க்கை குறைக்கும் வழி..!

ஆராய்ச்சிக்கு நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும்; பங்கு வாங்கியபிறகு வேகமாகச் செயல்பட வேண்டும். இங்கேதான் பலர் கோட்டைவிடுகிறார்கள்.

பி.இ., இ.பி.எஸ். நிறுவனத்தின் உண்மையான மதிப்பு போன்றவற்றை அலசி ஆராய்ந்து பங்கின் விலை நியாயமானதா? வாங்க ஏற்ற விலையா? அல்லது விற்கத் தகுந்த விலையா? என்பதை முடிவு செய்ய வேண்டும். இதேபோல் டெக்னிக்கல் அனாலிசிஸ் மூலமும் முதலீட்டு அல்லது விற்கும் முடிவை எடுக்க வேண்டும்..!

டெக்னிக்கல் அனாலிசிஸ் இருக்கும்போது, ஜி.டி.பி., பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம், நிறுவனங்களின் மேலாண்மை போன்ற விஷயங்களை எல்லாம் பார்க்கத்தான் வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். மேலாண்மை குழு என்பது திறமையான வாகன ஓட்டி. சாலை என்பதை நம் பொருளாதார ஆய்வு என்று வைத்துக் கொள்வோம்.

சாலை சரியாக இல்லை என்றால் நம் வாகனம் மிகவும் தரமானதாக, டிரைவர் திறமையானவராக இருந்தாலும் வண்டி இலக்கைச் சென்றடைவது கடினம்..!

பங்குச் சந்தை ரிஸ்க் நம் முன்னால் தெரிகிறது. அந்த ரிஸ்க் தவிர்க்க முடியாதது. அதன் தாக்கத்தைக் குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் குறைத்து நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தை அதிகரிப்பதே நாம் செய்ய வேண்டியது. அதற்கான வழிகளை சொல்லி இருக்கிறேன். பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்..!'' என்றார் லெட்சுமணராமன்.

தொகுப்பு: சி.சரவணன்