இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனி கமர்ஷியல் வெஹிக்கிள் ஃபைனான்ஸிங்கில் கொடி கட்டிப் பறக்கும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் லிமிடெட்டைத்தான். 1979-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இன்று இந்தியா முழுவதுமாக 450-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்படும் கம்பெனி இது. ட்ரக் ஃபைனான்ஸிங்கில் கிட்டத்தட்ட 25 சதவிகித மார்க்கெட் ஷேரை தன்வசம் வைத்துள்ள இந்த கம்பெனி 5 முதல் 12 வயதான ட்ரக்குகளுக்கு கடன் தருவதில் முன்னணியில் இருக்கிறது.

தொழில் எப்படி?

. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கத்தை உடனுக்குடன் சந்திக்கக்கூடிய தொழில் இது. வட்டி விகிதத்திற்கும் லாபத்திற்கும் நேரடியான சம்பந்தம் உள்ள தொழில் இது. பணவீக்கத்தைக் காரணமாக வைத்து ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைப் பலமுறை ஏற்றிவிட்டதால், இத்தொழிலில் கொஞ்சம் மந்தநிலையே நிலவி வந்தது. இனி வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதால் திணறிக் கொண்டிருந்த இத்துறை இப்போது தெளிவடைய ஆரம்பித்துள்ளது எனலாம்..
இரண்டாவதாக, என்.பி.எஃப்.சி. தொழில் எனபது ரிசர்வ் வங்கியால் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் தொழில். எனவே, மாறுகிற சட்டத்தின் ஷரத்துக்கள் லாபத்தைப் பதம் பார்த்துவிட வாய்ப்பு எப்போதும் இருக்கவே செய்கிறது.

வங்கிகளுக்கும் என்.பி.எஃப்.சி.களுக்கும் இடையே நடக்கும் கடன் மாற்று வர்த்தகங்கள் குறித்த கவலை எப்போதுமே ரிசர்வ் வங்கிக்கு அதிகமாக உள்ளது. வங்கிகள் என்.பி.எஃப்.சி. தந்த கடன்களை கைமாற்றி வாங்கிக் கொள்வதும், அப்படி மாற்றிவிடப்பட்ட கடன்களை என்.பி.எஃப்.சி. கணக்கில் காட்டும் முறை பற்றியும் வகுக்கப்படும் சட்டங்கள் மற்றும் அவற்றில் ஏற்படும் மாறுதல்கள் லாபத்தை நிச்சயமாக பாதிக்கவே செய்யும்.

கேப்பிட்டல் அடிக்குவசியை 12 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக மாற்றியது, என்.பி.எஃப்.சி.யிடமிருந்து வாங்கிய வாகன லோன்கள் போர்ட்ஃபோலியோவை வங்கிகளின் பிரையாரிட்டி செக்டார் லெண்டிங் திட்டத்தில் அனுமதிக்க மறுத்தது என, ஏற்கெனவே பல சட்ட ரீதியான இடையூறுகளை இத்தொழில் சந்தித்து வருகிறது.

கம்பெனி எப்படி?

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் பெரும்பான்மை யாகச் செய்வது கமர்ஷியல் வெஹிக்கிள் ஃபைனான்ஸிங். மற்ற ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லாம் புதிதாக வாகனம் வாங்குபவர்களை துரத்திப் பிடித்து கடன் தரத் தயாராக இருக்க, இந்நிறுவனம் கொஞ்சம் மாத்தி யோசித்து வருகிறது. லாரி, பஸ் என போக்குவரத்து வாகனம் வாங்குபவர்களில் புதிதாக தொழிலுக்கு வருபவர்கள் எப்போதுமே குறைவு. கமர்ஷியல் வெஹிக்கிள் ஃபைனான்ஸிங்கில் ஆண்டாண்டு காலமாகத் தொழில் செய்து வருவதால், ஏற்கெனவே நல்லதொரு எண்ணிக்கையில் கடன் வாங்கிய வர்களின் டேட்டாபேஸ் இந்நிறுவனத்திடம் இருக்கிறது.

ஏற்கெனவே கடன் வாங்கியவர்களில் நல்லவர் மற்றும் நாணயமானவர்களுக்கு இரண்டு சதவிகிதம் வரை புதிய கடனுக்கான வட்டியில் தள்ளுபடி தருகிறது இந்நிறுவனம். இதுபோன்ற தள்ளுபடியால் நன்கு தெரிந்த வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடிகிறது இந்நிறுவனத்தால்.

சிறிய ட்ரக் முதலாளிகளையே மனதில் வைத்து செயல்படும் இந்நிறுவனம், பெரும்பான்மையான வர்த்தகத்தை செகண்ட் ஹேண்ட் ட்ரக் பிஸினஸிலேயே செய்து வருகிறது. விலை ஏற்றம், வட்டி ஏற்றம், டீசல் விலை ஏற்றம் என ஏற்கெனவே பல ஏற்றங்களால் துவண்டுபோன புதிய ட்ரக் பிஸினஸை பெரிய அளவில் கவனிக்காமல், செகண்ட் ஹேண்ட் ட்ரக்குகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளதை நிச்சயமாக நல்லதொரு ஸ்ட்ராட்டஜி எனலாம். இந்நிறுவனம் தந்துள்ள கடன்களில் 70 சதவிகிதத்திற்கு மேற்பட்ட கடன்கள் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு கொடுத்ததாகும்.

என்னது செகண்ட் ஹேண்ட் வாகனமா? அப்போ கடன் வாங்குபவர்கள் விலையை ஏற்றி, தில்லுமுல்லு செய்து, வாராக்கடன் உருவாக வாய்ப்பிருக்கிறதே என்று பதறாதீர்கள். கொடுத்த கடன் தொகைக்கும், கடன் கொடுக்கப் பட்ட வண்டியின் மதிப்பிற்கும் இடையே உள்ள ரேஷியோ இந்தக் கம்பெனிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

ஏனென்றால் கடன் வாங்கியவர் பணத்தைத் திரும்பக் கட்டாமல் போனால் வண்டியை விற்று கடனை அடைக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில் வண்டியின் சந்தை மதிப்பிற்கும் நிலுவையில் இருக்கும் கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அதிகமாக இருந்தால் கம்பெனிக்கு பிரச்னை ஏதும் இருக்காது. வாராக்கடனும் அதிகமாகாது. இந்த ரேஷியோவை மிக ஆரோக்கியமாக வைத்திருக் கிறது இந்நிறுவனம்.

ஐந்து டிரக்குகளுக்கு கீழே வைத்திருப்பவர்களை சிறிய டிரக் ஓனர்கள் என்று அழைக்கிறோம். இந்நிறுவனத்தின் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் இந்த வகையானவர்களே. இது போன்ற ட்ரக் ஓனர்களுக்கு வங்கிகளிடம் ஒரு ட்ராக் ரிக்கார்ட் இருக்காது. இது போன்ற வாடிக்கையாளர் களிடம் தகுதியான ஈட்டுப் பொருட்களை பெற்று கடனளிப்பதன் மூலமும், மாதாந்திரமாக ஃபீல்டு ஆபீஸர்களை அனுப்பி தவணைப் பணத்தை ரொக்கமாக வசூலிக்கிறது இந்நிறுவனம்.

இதுவும் தவிர, மல்டி-யுட்டிலிட்டி வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், ட்ராக்டர்கள், கட்டுமானத் திற்கான இயந்திரங்கள் போன்றவற்றிற்கும் கடனை அளிக்கிறது. மேலும், பில் டிஸ்கவுன்டிங், டயர் வாங்குவதற்கான லோன், இன்ஜின் மாற்றுவதற்கான லோன் என பல்வேறு கடன் களையும் கொடுக்கிறது.

செகண்ட் ஹேண்ட் வண்டி களுக்கு ஃபைனான்ஸ் செய்து நல்ல அனுபவம் பெற்றதால் அந்த அனுபவத்தை உபயோகித்து செகண்ட் ஹேண்ட் ட்ரக்குகளை வாங்கி புதுப்பித்து விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.

ஃபைனான்ஸ் தொழிலில் முக்கியமான அளவீடாக எல்லோரும் கருதுவது என்.பி.ஏ.

மிகக் குறைவான என்.பி.ஏ.-வையே கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக கொண்டுள்ளது இந்நிறுவனம். இறுதியாக என்.பி.எஃப்.சி தொழிலில் முக்கியமானதொரு விஷயம், கேப்பிட்டல் அடிக்குவசி. இதிலும் இந்நிறுவனம் திருப்திகரமாக இருக்கிறது.

ரிஸ்க் ஏதுமில்லையா?

வட்டி விகிதம் ஏறினால் லாபம் குறைகிற தொழிலில் இருக்கிற கம்பெனி இது. கடந்த வருடங்களில் வட்டி விகிதம் ஏறிக்கொண்டே வந்ததால் லாபம் குறைந்து கொண்டுதான் போனது. மற்ற தொழில்களில் இருப்பதைப் போல் போட்டியும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.

தனியார் வங்கிகள், சுந்தரம் ஃபைனான்ஸ், டாடா ஃபைனான்ஸ் போன்ற என்.பி.எஃப்.சி.கள் கடுமையான போட்டியை கொடுத்தபடி இருக்கின்றன. தன்னுடைய கொள்கைகளில் தீவிரமாக இருக்கும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் இந்தப் போட்டிகளை சமாளித்து விடுமா என்பதுதான் கேள்வியே.

இப்படி பல இடைஞ்சல்கள் இருந்தாலும், ஃபைனான்ஸ் தொழிலுக்கு மிகவும் தேவையான கன்சர்வேட்டிவ் அப்ரோச்சைக் கொண்டு, வாடிக்கையாளர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து நீண்ட நெடுநாட்களாக செயல்பட்டுவரும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிச்சயமாக வட்டி விகிதம் குறைந்து பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் போக ஆரம்பிக்கும்போது நல்ல லாபம் பார்க்க ஆரம்பிக்கும்.

அந்த அடிப்படையில் வாசகர்கள் இந்த கம்பெனியின் பங்குகளை வாங்கி தங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்.