Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்

டெக்னிக்கல் அனாலிசிஸ்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அனலிஸ்ட்தான்
நீங்களும் அனலிஸ்ட்தான்

இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஃபோர்ஸ் இண்டெக்ஸ் எனும் ஆஸிலேட்டரைப் பற்றித்தான். 'என்ன இது! கடந்த வாரம் வரை இண்டிகேட்டர்களைப் பற்றித்தானே சொல்லி வந்தார். இப்போது திடீரென ஆஸிலேட்டர் என்கிறாரே!’ என்று குழம்ப வேண்டாம். இந்த ஆஸிலேட்டருக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பதால்தான் அதைப் பற்றி இந்தச் சூழ்நிலையில் சொல்ல விரும்புகிறேன்.

துவரை நாம் விலையை வைத்து கணக்குப் போட்டு சார்ட் போட்டிருக்கிறோம்; வால்யூமை வைத்து சார்ட் போட்டிருக்கிறோம்; விலை, வால்யூம் என்ற இரண்டையும் கூட்டிக் கழித்தும் சார்ட் போட்டிருக்கிறோம். இந்த ஆஸிலேட்டர், விலை எந்த திசையில், எந்த அளவில், என்ன வால்யூமில் போகிறது என அத்தனையையும் சேர்த்து கணக்கீடு செய்து போடப்படும் சார்ட்டாகும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்

ந்த ஆஸிலேட்டர் பற்றித் தெரிந்து கொள்ளும் முன், விலை பற்றி அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

நேற்றைவிட இன்று சந்தை விலை அதிகரித்து குளோஸானால் காளைகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று அர்த்தம். நேற்றை விட இன்று விலை குறைந்து குளோஸானால் கரடிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று அர்த்தம். இரண்டு சூழ்நிலையிலும் நேற்றைய குளோஸிங்கிற்கும் இன்றைய குளோஸிங்கிற்கும் உள்ள இடைவெளி வெற்றி பெற்ற மார்ஜின் அளவைக் காண்பிக்கிறது. மார்ஜின் அதிகமாக அதிகமாக வெற்றியின் முக்கியத்துவம் கூடுகிறது. இந்தக் கருத்தைப் பயன்படுத்தித்தான் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் என்ற டூலே உருவாக்கப்பட்டுள்ளது.

##~##
ஃபோர்ஸ் இண்டெக்ஸை சிம்பிளாக கணக்கீடு செய்தும் சார்ட் போடலாம். ஃபோர்ஸ் இண்டெக்ஸை கணக்கீடு செய்தபின் அதற்கு மூவிங் ஆவரேஜ் கண்டுபிடித்து அதற்கும் சார்ட் போட்டுப் பார்க்கலாம். மூவிங் ஆவரேஜ் சார்ட் போடுவதுதான் சற்று சிறந்தது என்று சொல்ல வேண்டும்.

ஃபோர்ஸ் இண்டெக்ஸ் ஒவ்வொரு விலை மாற்றத்தின் திசையையும், அளவையும் அந்த விலை மாற்றத்தில் நடந்த வால்யூமையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படுகிறது. நேற்றைய குளோஸிங்கைவிட அதிகமாக இன்றைய குளோஸிங் இருந்தால் ஃபோர்ஸ் பாசிட்டிவ்வாக உள்ளது என்று கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

நேற்றைய குளோஸிங்கை விட குறைவானதாக இன்றைய குளோஸிங் இருந்தால் ஃபோர்ஸ் நெகட்டிவ்வாக உள்ளது என்று கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். விலை மாற்றத்தின் அளவு (அதிகரிப்பதோ/குறைவதோ) அதிகமாக அதிகமாக ஃபோர்ஸ் அதிகமாகிறது என்றும், குறையக் குறைய ஃபோர்ஸ் குறைகிறது என்றும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நீங்களும் அனலிஸ்ட்தான்

அதேபோல் வால்யூம் அதிகமாக அதிகமாக ஃபோர்ஸும் அதிகமாகிறது என்றும், வால்யூம் குறையக் குறைய ஃபோர்ஸ் குறைகிறது என்றும் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம்.

ஃபோர்ஸ் இண்டெக்ஸ் = இன்றைய வால்யூம்  X ( இன்றைய குளோஸிங் விலை - நேற்றைய குளோஸிங் விலை)

இப்படி அன்றாடம் கணக்கிடப்படும் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் எண்ணிக்கை ரீதியாக பெரிய எண்ணாக இருக்கும்.

அடுத்தப் பக்கத்தில்  தரப்பட்டிருக்கும் நிஃப்டியின் தினசரி கேண்டில் ஸ்டிக் சார்ட்டையும், ஃபோர்ஸ் இண்டெக்ஸ் சார்ட்டையும் பாருங்கள். ஃபோர்ஸ் இண்டெக்ஸ் சார்ட்டில் நடுவில் '0’ என்ற லெவல் உள்ளது. அதற்கு மேலே 10, 20, 30 என பில்லியன் எண்ணிக்கையில் பாசிட்டிவ் எண்களும், கீழே -10, -20, -30 என பில்லியன் எண்ணிக்கையில் நெகட்டிவ் எண்களும் கொடுக்கப் பட்டுள்ளது. மார்க்கெட் நேற்றைவிட இன்று அதிகரித்து குளோஸானால் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் பாசிட்டிவ் எண்ணிக்கையில் இருக்கும். அந்த எண்ணிக்கை சார்ட்டில் '0’ லெவலுக்கு மேலே ஒரு புள்ளியாக அமையும்.

மார்க்கெட் நேற்றைவிட இன்று குறைந்து குளோஸானால் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் நெகட்டிவ் எண்ணிக்கையில் இருக்கும். அந்த எண்ணிக்கை சார்ட்டில் '0’ லெவலுக்கு கீழே ஒரு புள்ளியாக அமையும். நேற்றைய குளோஸிங்கிற்கும், இன்றைய குளோஸிங்கிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்றாகிவிட்டால் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் '0’ லைனிலேயே இருக்கும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்

சரி, ஃபோர்ஸ் இண்டெக்ஸை கணக்கீடு செய்து அப்படியே போட்டால் மேலேயுள்ள நிஃப்டியின் சார்ட்டில் சாம்பல் நிறத்தில் புள்ளிகளாகத் தெரியும் சார்ட் கிடைக்கும். அன்றாடம் கணக்கிடப்படும் ஃபோர்ஸ் இண்டெக்ஸை வைத்து நாம் சந்தை எந்த மாதிரி வேகத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

எல்லாம் சரி, டிரேடிங் செய்வதற்கான முடிவுகளை எடுக்க இது எப்படி உதவும் என்கிறீர்களா? அதற்கு ஃபோர்ஸ் இண்டெக்ஸ் கணக்கீடு செய்த பின்னர் 2 நாள் மற்றும் 13 நாள் ஆவரேஜாக மாற்றி இரண்டு நாள் ஆவரேஜையும், 13 நாள் ஆவரேஜையும் தனித்தனியாக சார்ட்டில் போட்டு பார்க்க வேண்டும். அருகேயுள்ள நிஃப்டியின் சார்ட்டில் நீல நிறத்தில் 2 நாள் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் ஆவரேஜும், சிகப்பு நிறத்தில் 13 நாள் ஃபோர்ஸ் இண்டெக்ஸ் ஆவரேஜும் சார்ட்டில் கோடுகளாக போடப்பட்டுள்ளது.

கோடெல்லாம் போட்டாச்சு. எப்படி அதை அர்த்தம் செய்து கொள்வது? ஃபோர்ஸ் இண்டெக்ஸ் விலை போகும் திசை, அளவு மற்றும் வேகத்தைக் காண்பிப்பது என்று ஏற்கெனவே பார்த்தோம். இந்த ஃபோர்ஸ் இண்டெக்ஸின் 2 நாள் ஆவரேஜ் மற்றும்         13 நாள் ஆவரேஜ் சார்ட்களை வைத்துக்கொண்டு டிரேடிங் செய்வது கொஞ்சம் குசும்பான வேலை.

ஃபோர்ஸ் இண்டெக்ஸின் 2 நாள் ஆவரேஜ் என்பது சிறிதளவு சமன்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதாவது, தினசரி ஃபோர்ஸ் இண்டெக்ஸை வைத்துப் பார்த்தால் மாற்றங்கள் கலவரம் தருவதாக இருக்கும். நேற்றைக்கு மேலே போச்சு! இன்றைக்கு கீழே போச்சு! என்று காண்பித்தால் அதிலிருந்து எதையும் உருப்படியாகப் புரிந்துகொள்வது கடினம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்

அதே சமயம் இரண்டு நாட்களின் ஃபோர்ஸ் இண்டெக்ஸின் ஆவரேஜை (எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் (இ.எம்.ஏ.) முறையில் கணக்கிடப்பட்டது) பார்த்தால் இரண்டு நாட்களாகச் சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்பது தெரியும்.

இதிலென்ன பெரிய வித்தியாசம் கண்டுவிட முடியும்? இரண்டு நாள் இ.எம்.ஏ.வை வைத்துக் கொண்டு மட்டும் சந்தை நாளைக்கு என்னவாகப் போகிறது என்று சொல்ல முடியுமா என்கிறீர்களா?

நீங்களும் அனலிஸ்ட்தான்

கொஞ்சம் பொறுங்கள். இரண்டு நாள் இ.எம்.ஏ.-வை (புளூலைன்) கோடு போட்ட மாதிரி 13 நாள் இ.எம்.ஏ.-வையும் (சிகப்பு லைன்) அதே சார்ட்டில் கோடாக போட வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் 13 நாள் இ.எம்.ஏ.வை வைத்து டிரேட் செய்ய நினைக்கிறீர்கள். 13 நாள் அளவீட்டில் சந்தையின் ஃபோர்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதுதானே உங்கள் டிரேங்கிற்கு உகந்ததாக இருக்கும்?

அப்படி 13 நாள் இ.எம்.ஏ.-வைப் பார்க்கும்போது அது சந்தையில் ஃபோர்ஸ் ஏறுமுகமாக இருக்கிறது என்று காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். எது ஏறுமுகம் என்கிறீர்களா? '0’ லைனிற்கு மேலே ஃபோர்ஸ் இண்டெக்ஸ் இருந்தால் சந்தையின் ஃபோர்ஸ் ஏற்றத்தை உண்டு பண்ணும் விதத்தில் உள்ளது என்றும், '0’ லைனிற்கு கீழே இருந்தால் சந்தையின் ஃபோர்ஸ் இறக்கத்தை உண்டும் பண்ணும் விதத்தில் உள்ளது என்றும் அர்த்தம்.

நமது உதாரணத்தில் ஃபோர்ஸ் இண்டெக்ஸின் 13-நாள் இ.எம்.ஏ. '0’ லைனிற்கு மேலேயிருந்து மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, மீடியம் டேர்மில் சந்தையை ஏற்றிக் கொண்டு வருகிறார்கள் என்று அது காண்பிக்கிறது. அந்த சமயத்தில் இரண்டு நாள் இ.எம்.ஏ. சந்தை '0’ லைனுக்கு கீழேயோ அல்லது '0’ லைனுக்கு கீழே போவதைப் போன்றோ திரும்பினால் அந்த சமயத்தில்  ஷேர்களை வாங்கிப் போட வேண்டும்.

அதேபோல 13 நாள் இ.எம்.ஏ. '0’ லைனுக்கு கீழே இருந்து மேலும் கீழ்நோக்கிப் போகும் போது இரண்டு நாள் இ.எம்.ஏ. '0’ லைனுக்கும் மேலேயோ அல்லது மேல்நோக்கிப் போவதைப் போல் காண்பித்தால் ஷார்ட் போக வேண்டும்.

பொதுவாகவே, ஃபோர்ஸ் இண்டெக்ஸின் 13 நாள் இ.எம்.ஏ. '0’ லைனுக்கு மேலே போக ஆரம்பித்தால் காளைகள் பலம் பெருகிறார்கள் என்றும், '0’ லைனுக்கு கீழே போக ஆரம்பித்தால் கரடிகள் பலம் பெறுகிறார்கள் என்றும் அர்த்தம்.

விலையின் போக்கும் ஃபோர்ஸ் இண்டெக்ஸின்      13 நாள் இ.எம்.ஏ.வின் போக்கும் எதிர்மறையாக இருக்கும் வேளையில் திருப்புமுனை வரப் போகிறது என்று அர்த்தம்.

ஃபோர்ஸ் இண்டெக்ஸை உபயோகித்து டிரேடிங் செய்வது எப்படி என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

(வளரும்)

நீங்களும் அனலிஸ்ட்தான்


வெற்றி ரகசியம்!  

காஸ்ட்கோ ஹோல்சேல் கார்ப்பரேஷன், அமெரிக்கா வின் பிரமாண்ட சூப்பர் மார்க்கெட் கடை. 66 நாடு களில் 598 உள்ள கிளைகளில் 1,61,000 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

சமீப காலம் வரை இதன் சி.இ.ஓ.வாகப் பணியாற்றிய ஜிம்ஸெனகல், இந்த வருடம் ஓய்வு பெற்றிருக்கிறார்.

காஸ்ட்கோவில் மட்டுமல்ல, வெளி கம்பெனிகளிலும் நிர்வாகத் திறமைக்கு இவரை உதாரணம் காட்டுகிறார்கள்.

தொழில் முனைவர்கள் எல்லோருமே இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய வெற்றி ரகசியங்கள் இரண்டு.  

வருடம் ஒரு முறையா வது 598 கிளைகளுக்கும் விசிட் அடிக்கத் தவற மாட்டார்.

1,61,000 ஊழியர்களில் பெரும்பாலானோரின் பெயர்கள் அவருக்குத் தெரியும்.

நீங்கள் இந்த ரகசியங்களை பின்பற்றுகிறீர்களா?

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு