Published:Updated:

ஓ.என்.ஜி.சி. ஏன் தோற்றது ஏலம்?

ஓ.என்.ஜி.சி. ஏன் தோற்றது ஏலம்?

பிரீமியம் ஸ்டோரி
ஓ.என்.ஜி.சி. ஏன் தோற்றது ஏலம்?

பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யின் பங்கு ஏல விற்பனை படுதோல்வி அடைந்திருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் 84 சதவிகிதப் பங்குகளை எல்.ஐ.சி. வாங்கியதால், இந்த ஏல விற்பனை தப்பித்தது. இந்த ஏலத்துக்கு வரவேற்பு கிடைக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் பேசினோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

ஓ.என்.ஜி.சி. ஏன் தோற்றது ஏலம்?

''ஒரே விலையில் பல லட்சம் பங்குகள் கிடைக்கும் போது எல்லோரும் வாங்கவே விரும்புவார்கள். ஆனால், ஓ.என்.ஜி.சி. விஷயத்தில் அந்த மாதிரி  எதுவும் நடக்கவில்லை. காரணம், அந்த பங்கிற்கு வைக்கப்பட்ட அதிக விலை.  

இதுகுறித்து பங்கு விலக்கு அமைச்சகம் 2010-ம் ஆண்டே ஒரு திட்டத்தை முன்வைத்தது. அதாவது, ஒரு பங்கை சிறு முதலீட்டாளர்களுக்கு தரும்பட்சத்தில், சந்தை விலையைவிட 5 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கொடுக்க வேண்டும் என்றது. ஆனால், அமைச்சர்கள் குழு சந்தை விலையையே அந்த பங்கிற்கான விலையாக நிர்ணயம் செய்தது.  

##~##
மார்ச் 1-ம் தேதி சந்தையில் ஓ.என்.ஜி.சி.யின் ஒரு பங்கு விலை 290 ரூபாய்க்கு அருகிலிருந்தது. ஏலம் விடப்பட்ட பங்கின் விலையும் 290 ரூபாய்தான். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை.

முதல் முதலாக விடப்பட்ட ஏலம் இதுபோல ஆகிவிட்டதே என்பதற்காக ஏலம் நடந்த முறையே தவறு என்று சொல்லிவிட முடியாது.

தற்போது இந்த பங்கின் விலை 279 ரூபாயாக இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. தரமான நிறுவனம். நவரத்னா நிறுவனங்களில் ஒன்று என பல பாசிட்டிவ் அம்சங்கள் இருந்தாலும், உற்பத்தி செய்யும் பொருளுக்கான விலையை தானே நிர்ணயம் செய்கிற பங்குகளில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்பார் வாரன் பஃபெட். ஆனால், பெட்ரோல், டீசல் விலைகளை அரசுதான் முடிவு செய்கிறது'' என்று முடித்துக் கொண்டார்.

இந்த பங்கை வாங்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்ய வேண்டியது இனி நீங்கள்தான்!

-வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு