Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

டாடா குரூப் நிறுவனமான 'ராலிஸ் இந்தியா’ பங்கை கடந்த வாரம் வாங்க சொல்லி இருந்தேன். ஆனால், நான் வாங்கச் சொன்ன விலைக்கு அந்த பங்கு வரவில்லை. இத்தனைக்கும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற மூன்று நாட்களும் சந்தை நெகட்டிவ்வாகவே முடிவடைந்தது. பட்ஜெட் காரணமாக ஏறும் என்பதால்தான் இந்த பங்கினை 5,000 ரூபாய்க்கு வாங்க சொல்லி இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே இந்த பங்கின் விலையும் ஏறியது.

தேபோல, இந்த வாரமும் பட்ஜெட் காரணமாக ஏறும் பங்கினையே பரிந்துரை செய்கிறேன். ஆதித்யா பிர்லா நுவா பங்கினை இந்த வாரம் வாங்கவும். எப்போதும்போல் 2,500 ரூபாய்க்கு வாங்காமல், 5,000 ரூபாய்க்கு இந்த பங்கினை வாங்கவும்.

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலைமை!

சந்தையில் பெரிய ஏற்றமோ அல்லது இறக்கமோ இல்லாமல் இருந்ததால், நமது போர்ட்ஃபோலியோவில் எந்த பங்கும் வெளியேறவில்லை. ஆனால், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு சராசரி விலையைத் தொட்டு சராசரி அடைந்தது. ஆனால், மற்ற பங்குகள் எதுவும் சராசரி விலைக்கு அருகில்கூட வரவில்லை. ராலிஸ் இந்தியா பங்கினை வாங்காததால் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் இல்லை.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


அடுத்து என்ன?

##~##
ஐ.ஐ.பி. டேட்டா, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை, ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் என அடுத்த வாரம் செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. இந்த தகவல்களை பொறுத்துதான் சந்தையின் அடுத்த கட்டம் இருக்கும். இந்த செய்திகள் வரும்போதே சந்தையில் மாற்றங்கள் நிகழும். ஆனாலும், வரும் செய்திகளை முழுமையாக புரிந்துகொண்ட பிறகே சந்தையின் எதிர்காலத்தை கணிக்க முடியும். அதனால் பொறுமையாக இருப்போம். செய்திகளை முழுமையாகப் புரிந்து கொண்டபிறகே நம் போர்ட்ஃபோலியோவிலும் மாற்றம் செய்வோம். இந்த வாரத்தில் செய்திகள் அதிகமாக இருப்பதால், சந்தையின் ஏற்ற இறக்கங்களும் அதிகமாக இருக்கும். சில பங்குகள் வெளியே செல்லலாம். சில பங்குகள் சராசரிகூட ஆகலாம். மொத்தத்தில் சந்தையை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நேரமிது.
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு