Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்

உ.பி. எலெக்ஷன் ரிசல்ட்கள், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள், பொருளாதாரம் குறித்த செய்திகள் என சந்தையை பாதிக்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் நிறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருந்தோம்.

##~##
தி
ங்கள் முதல் புதன் வரை இறங்கிய சந்தை வெள்ளியன்று ஒரே மூச்சில் 113 பாயின்ட்கள் ஏற்றத்தைச் சந்தித்து, வாராந்திர அளவில் கிட்டத்தட்ட 25 பாயின்ட் மட்டுமே இறங்கி குளோஸாகி அனைவருக்கும் திகைப்பைத் தந்தது. ஏன் இந்த ஏற்றம் என்று யோசிக்கும்போதே சி.ஆர்.ஆர். விகிதம் குறைப்பு என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளிவந்து, வெள்ளிக்கிழமை நடந்த ஏற்றத்திற்கான காரணத்தை உணர்த்திவிட்டது.

வரும் வாரம் பட்ஜெட் வாரம். ஆரவாரம் நிறைந்ததாக இருக்கப்போகும் வாரம். ஏற்றமும் இறக்கமும் மீண்டும் டெக்னிக்கல்களுக்குள் அடங்காமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரமிது.

டிரேடர்ஸ் பக்கங்கள்

ஏற்கெனவே சொல்லியபடி 5475-க்கு மேல் மல்டிபிள் குளோஸாகும் வரை ஏற்றம் என்பது சாத்தியமில்லை. இறக்கம் என்ற பார்வையில் 4925 வரை செல்லக்கூடிய வாய்ப்பு இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது. திங்களன்று நல்லதொரு பாசிட்டிவ் கேப்பில் ஓப்பனாகி மேலேயே டிரேடாகலாம். புதனன்று டிரெண்டில் நல்லதொரு மாறுதல் வரவாய்ப்பிருப்பதால், வியாபாரத்தைக் கொஞ்சம் குறைந்த அளவில் செய்வது நல்லது. பட்ஜெட் அன்று டிவி-யில் பட்ஜெட்டையும் மார்க்கெட்டையும் வெறுமனே பார்ப்பது மட்டுமே நல்லது என்ற அளவில்தான் நிலைமை இருக்கிறது. ஜாக்கிரதை!

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு