பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

சில வாரங்களுக்கு முன்பு நாம் யூ.டி.ஐ. டிவிடெண்ட் யீல்ட் ஃபண்ட் பற்றி பார்த்தோம். அதைத் தொடர்ந்து இவ்வாரம் யூ.டி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெற்றிகரமாக நிர்வகித்து வரும் மற்றொரு திட்டமான யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி பார்ப்போம்.

ஃபண்ட் ரிசர்ச்!

த்திட்டம் கடந்த ஐந்து வருட காலத்தில் லார்ஜ்கேப் திட்டங்கள் அனைத்திலும் அதிக வருவாயைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களில் கூட்டு வருமானமாக ஆண்டிற்கு 16.6% கொடுத்துள்ளது.

இத்திட்டம் ஜூலை 2005-ல் தொடங்கப்பட்டது. இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர் அனூப் பாஸ்கர். இவரே இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பங்குகள் சார்ந்த திட்டங்களின் முதன்மை முதலீட்டு அலுவலரும் ஆவார். இவர் கடந்த ஜூலை 2011-லிருந்து இத்திட்டத்தின் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். இதற்கு முன் இவர் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் சுந்தரம் செலக்ட் மிட்கேப் என்ற திட்டத்தை வெற்றிகரமாக நிர்வகித்து வந்தார்.

ஃபண்ட் ரிசர்ச்!
##~##
இந்த ஃபண்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் வகையைச் சார்ந்த போதிலும், இதன் 80 சதவிகித முதலீடு லார்ஜ்கேப் பங்குகளிலேயே உள்ளது. நாற்பதுக்கும் குறைவான பங்குகளையே தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துள்ளது. ஒரு பங்கைத் தவிர (ஐ.டி.சி.), போர்ட்ஃபோலியோவில் பிற பங்குகளின் வெயிட், தனிப்பட்ட முறையில் 5 சதவிகிதத்தைத் தாண்டுவதில்லை.

எஃப்.எம்.சி.ஜி., கன்ஸ்ட்ரக்ஷன், இன்ஜினீயரிங் போன்ற துறைகளில் நிஃப்டியுடன் ஒப்பிடும்போது ஓவர்வெயிட்டாக உள்ளது. ஃபைனான்ஷியல், எனர்ஜி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் அன்டர் வெயிட்டாக உள்ளது. ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், கெயின் இந்தியா, இன்போஃசிஸ் போன்ற பங்குகள் முறையே இதன் போர்ட்ஃபோலியோவில் முதலிடம் வகிக்கின்றன. கிரிஸில், பெட்ரோநெட் எல்.என்.ஜி., டைட்டான், எக்ஸைட் இண்டஸ்ட்ரிஸ் போன்ற மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் நல்ல வெயிட்டுடன் போர்ட்ஃபோலியோவில் காணப்படுகின்றன.

ஃபண்ட் ரிசர்ச்!

2006-ம் ஆண்டைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி ரிட்டர்ன்ஸையும் தாண்டி வருமானம் தந்து வருகிறது. கடந்த 2011-ம் வருடம் நிஃப்டி 50-ஐ விட 12.5% அதிக வருமானத்தைத் தந்துள்ளது.

பொதுவாக நாம் பல ஆண்டுகளாக இருந்துவரும் ஃபண்டுகளையே முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்கிறோம். அப்போதுதான், அத்திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அவ்வப்போது யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் போன்ற குறைந்த காலமாக (சுமார் 6 ஆண்டுகளாக) செயல்பட்டுவரும் இந்த ஃபண்டை பரிந்துரை செய்யக் காரணம், அதன் சிறந்த ரிட்டர்ன்ஸ்தான். ஆகவே, ஓய்வுகாலத்திற்குச் சேமிக்க விரும்புபவர்களும், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்களும் இத்திட்டத்தில் எஸ்.ஐ.பி. மூலம் தாராளமாக முதலீடு செய்யலாம்.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்த ஃபண்டின் நெகட்டிவ் என பார்த்தால், குறுகிய காலத்தில் ஃபண்ட் மேனேஜர் மாறியுள்ளது மற்றும் குறைவான செயல்பாட்டுக் காலம் என கூறலாம். ஃபண்ட் மேனேஜர் நன்றாக பரிச்சயமான நபர் என்பதாலும், நல்ல வருமானத்தை இந்த ஃபண்ட் இதுவரை தந்துள்ளதாலும் நாம் குறிப்பிட்ட நெகட்டிவ்கள் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது.

ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ஆரம்பித்ததிலிருந்து எஸ்.ஐ.பி. முறையில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 14.26% வருமானத்தைக் கொடுத்துள்ளது. ஆரம்பித்தபோது (ஜூலை 2005) மொத்தமாக முதலீடு செய்த ரூ.10,000-ன் இன்றைய மதிப்பு ரூ.28,160 ஆகும். இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகை ரூ. 2,385 கோடியாகும்.

2008-2009-ம் ஆண்டு சந்தையில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின்போது கேஷ் லெவல் அதிகம் வைத்திருந்த ஃபண்ட் நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதையட்டி, யூ.டி.ஐ நிறுவனமும் கேஷ் லெவல் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என வரையறை வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. லார்ஜ்கேப் ஃபோக்கஸ், நல்ல ஃபண்ட் மேனேஜர், இதுவரை அக்ரெஸிவ்வான வருமானம் போன்ற பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண்கள் 80/100.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு