Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஜைடஸ் வெல்னெஸ் பங்கினை கடந்த வாரம் நான் பரிந்துரை செய்திருந்தேன். அந்த பங்கினை திங்கட்கிழமை அன்றே வாங்கி இருக்க முடியும். இதனுடன் சேர்த்து நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்திருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

டந்த வாரம் ஜாக்ரன் பிரகாஷன் பங்கு பற்றி சொல்லி இருந்தேன். அந்த பங்கு மேலேயும் செல்லாமல், கீழேயும் போகாமல் ஒரு 'ரேஞ்ச் பவுண்டிலே’யே கடந்த சில மாதங்களாக வர்த்தகமாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட இந்தூரில் இருக்கும் ஒரு பத்திரிகையை இந்நிறுவனம் வாங்கி இருக்கிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பங்காக இது இருந்தாலும், நம்முடைய விதிமுறைகளுக்கு இது சரிப்படவில்லை. அதனால், இந்த பங்கினை 102 முதல் 103 (அதாவது, வாங்கிய விலைக்கு சற்று மேலே) என்ற நிலையில் இருக்கும்போது விற்றுவிடலாம். வரும் வாரத்தில் இதைச் செய்யலாம். இந்த பங்கிலிருந்து வெளியேறிய பிறகு வேறு பங்கில் முதலீடு செய்வது பற்றி யோசிப்போம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


சந்தை எப்படி?

##~##
கடந்த வாரத்தில் புதிய வரி விதிப்பு முறை (ஜி.ஏ.ஏ.ஆர்.) காரணமாக சந்தை இறங்கியது. அதன்பிறகு நிதி அமைச்சர் கொடுத்த வாய்மொழி உத்தரவாதம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது என்.ஏ.வி.-யை உயர்த்திக் கொள்வதற்காக முதலீடு செய்தது போன்ற காரணங்களால் வெள்ளிக்கிழமை சந்தை உயர்ந்தது.

அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே சந்தையில் வர்த்தகம் நடக்கிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களிடம் ஆர்வம் குறைந்து, வால்யூம் குறைய வாய்ப்பிருக்கிறது. தவிர, வெள்ளியன்று முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உடனே பங்குகளை விற்கவும் வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த சில நாட்களில் 200 நாள் மூவிங் ஆவரேஜினை சிலமுறை சந்தை தொட்டு விட்டுச் சென்றது. இருந்தாலும், 4900 என்ற புள்ளியை நிஃப்டி உடைக்காத வரை சந்தை சரிவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இருந்து முழு ஆண்டு நிதி முடிவுகள் வரவிருக்கிறது. ஏப்ரல் 12-ம் தேதி ஐ.ஐ.பி. டேட்டாவும், ஏப்ரல் 17-ம்தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையும் வர இருக்கிறது. இந்த செய்திகளைப் பொறுத்தே சந்தையின் போக்கு இருக்கும்.

ஐ.ஐ.பி. டேட்டா பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்களை பெரிதாகக் குறைக்காவிட்டாலும் 0.25 முதல் 0.50 சதவிகிதம் வரை குறைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. இதைத் தாண்டி நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்து அந்த பங்குகளின் விலை உயரும். ஏற்கெனவே சொன்னது போல ஜாக்ரன் பிரகாஷன் பங்கு விற்ற பிறகு புதிய பங்கினை வாங்குவது பற்றி முடிவெடுப்போம்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு