Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்

ஓவர் நைட் பொசிஷன்களையும், ஷார்ட் சைடில் பெரிய பொசிஷன்களையும் தவிர்ப்பது நல்லது என்றும், டெக்னிக்கல்களை மிஞ்சிய விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்கும் வாரம், முழுவதுமாக டெக்னிக்கல்களை நம்பி டிரேடிங்கில் இறங்கக்கூடாத நேரமிது என்றும் சொல்லியிருந்தோம்.

##~##
-93
, 58, -48, -15, 116 என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் போய் டிரேடர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணியது நிஃப்டி. வார இறுதியில் கூட்டிக் கழித்து கணக்குப்பார்த்தால் நிகரமாக 17.35 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரம் மூன்றே நாள்தான் டிரேடிங் இருக்கிறது. வியாழன் மற்றும் வெள்ளி விடுமுறை. முழுவாரம் இருக்கும்போதே குழப்பம் என்றால் நாட்கள் குறைவாக இருக்கும்போதும், நீண்ட வாரக் கடைசி வரும்போதும் சந்தையில் எல்லா டிரேடர்களிடமும் அவ்வளவு ஆர்வம் இருக்காது. எனவே, ரொம்பவுமே பேலன்ஸ் செய்து குறைந்த அளவில் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

200 நாள் ஆவரேஜான 5120-க்கு கீழே சந்தை போனால், சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கும். அந்தச் சூழ்நிலையில் 5065/5029/4985 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 5263/5366/5472/5542 போன்ற வற்றை ரெசிஸ்டன்ஸாகவும் கொண்டு செயல்படலாம்.

இந்த வாரம் இவையெல்லாம் நடந்துவிட வாய்ப்பில்லை என்றாலும், இதனை மனதில் வைத்து செயல்படுவது மிகமிக நல்லது. செவ்வாயன்று குளோஸிங்கை வைத்தே நிஃப்டியின் அடுத்த மூவ் முடிவு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. ஓவர்நைட் பொசிஷன் மற்றும் அதிக அளவிலான ஷார்ட் சைட் பொசிஷன்களைத் தவிர்க்கவும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு