பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் - ரிவார்ட் ஆகிய இரண்டுமே அதிகம் கொண்டது. கொஞ்ச வயதுக்காரர் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்க நினைக்கிறவர்களுக்கு 'சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டு' மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

ஃபண்ட் ரிசர்ச்!

சில மாதங்களுக்கு முன்பு, முழுவதுமாக மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்களில் ஒன்றான ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி திட்டத்தைப் பற்றி பார்த்தோம். இவ்வாரம் அதே வகையைச் சார்ந்த சுந்தரம் செலக்ட் மிட்கேப் திட்டத்தைப் பற்றி காண்போம்.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்டின் புரமோட்டர் சுந்தரம் ஃபைனான்ஸ் ஆகும். சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் ரூ.14,099 கோடி தொகையை நிர்வகித்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பன்னிரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் இருக்கிறது.

சுந்தரம் செலக்ட் மிட்கேப் திட்டம், இந்நிறுவனம் நிர்வகித்து வரும் திட்டங்களில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் திட்டமாகும். இத் திட்டத்தின் ஃபண்ட் மேனேஜர் மற்றும் இந்த ஃபண்ட் ஹவுஸின் தலைமை முதலீட்டு அலுவலர் சதீஷ் ராமநாதன் ஆவார்.

செப்டம்பர் 2007-ல் இருந்து இத்திட்டத்தின் ஃபண்ட் மேனேஜராக உள்ளார். இத்திட்டம் ரூ.2,025 கோடியை நிர்வாகம் செய்து வருகிறது.

ஃபண்ட் ரிசர்ச்!

இதுவரை நாம் இந்தப் பகுதியில் அலசிய பல திட்டங்களும், ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளிலேயே முதலீடு செய்வதாகும். காரணம், லார்ஜ்கேப்பில் முதலீடு செய்யும் திட்டங்கள் சந்தை சரியும் காலத்தில் திடமாக நிற்கும் என்பதால்தான்.

##~##
மேலும், அத்திட்டங்கள் தொடர்ந்து நீண்ட கால அடிப் படையில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன. சுந்தரம் செலக்ட் மிட்கேப், மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்தாலும், லார்ஜ்கேப் திட்டங்களுக்கு நிகரான திடத்தன்மையையும் அத்திட்டங்களை விடவும் அதிகமான வருமானத்தையும் தந்துள்ளது.

ரிஸ்க் எடுக்க விரும்புபவர்களுக்கும், மிட்கேப் பங்குகளுக்கு நிகரான முதலீட்டை நாடுபவர்களுக்கும் இது ஒரு நல்ல திட்டமாகும்.

இத்திட்டம் தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகிவரும் டாப் 50 சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதில்லை. சந்தை மதிப்பு கொண்ட 51-வது நிறுவனத்திலிருந்து தனது முதலீட்டை மேற்கொள்கிறது.

ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

ஆகவே, முழுக்க முழுக்க மிட்கேப் பங்குகளிலேயே முதலீடு செய்கிறது. இதன் போர்ட்ஃபோலியோவில் 59 பங்குகள் இடம் பெற்றுள்ளன.

இப்கா லேபாரட்டரிஸ், எஃப்.ஏ.ஜி. பியரிங்க்ஸ், இந்திரபிரஸ்தா கேஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், பாஷ் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் டாப் ஹோல்டிங்ஸ் ஆக உள்ளன.

இதன் போர்ட்ஃபோலியோவில்        6 சதவிகித வெயிட்டிற்கு மேல் எந்த பங்கும் செல்வதில்லை. அதேபோல்               20 சதவிகிதத்திற்கு மேல் ஒரு துறையில் முதலீடு செய்வதில்லை. சதீஷ் ராமநாதன் நீண்டகால நோக்குடன் பங்குகளைப் பொறுக்குவதில் வல்லவர். அதே சமயத்தில் குறுகிய கால வாய்ப்புகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்.

ஃபண்ட் ரிசர்ச்!

இத்திட்டம் தொடங்கியதிலிருந்து ஒருவர் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் (117 மாதங்கள் - 117,000 ரூபாய்), அதன் இன்றைய மதிப்பு ரூ.3,79,667 ஆகும் (ஆண்டிற்கு 25.27%   வருமான வரியில்லாத லாபம்). ஃபண்ட் தொடங்கியபோது மொத்தமாக             ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால்            (9 வருடங்களுக்கு மேல்) அதன் இன்றைய மதிப்பு ரூ.14.4 லட்சமாகும்.

ஃபண்ட் ரிசர்ச்!

இத்திட்டத்தின் நெகட்டிவ் எனப் பார்த்தால், சராசரிக்கும் அதிகமான ரிஸ்க் லெவல் ஆகும். தவிர, இந்த ஃபண்ட் நிறுவனம், சில காலம் முன்பு வரை பல புதிய திட்டங்களை (என்.எஃப்.ஓ.) சந்தைக்கு கொண்டு வந்தது அவ்வளவு வரவேற்கத்தக்கதல்ல.  

உதாரணமாக, ரூ.90,000 கோடிக்கு மேல் நிர்வகிக்கும் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த திட்டங்கள்: 112. ரூ.14,099 கோடியை நிர்வகிக்கும் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜ் செய்யும் மொத்த திட்டங்கள்: 105. பங்கு சார்ந்த திட்டங்களில் ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் 14 திட்டங்களையும், சுந்தரம் 22 திட்டங்களையும் நிர்வகிக்கின்றன.

மொத்தத்தில் அதிக ரிஸ்க் எடுத்து செல்வத்தை வளர்க்க விரும்பும் ஹெச்.என்.ஐ. முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் மிட்கேப் பங்குகளுக்கு மாற்று தேடுபவர்களுக்கு இது ஒரு அருமையான முதலீடாக அமையும்.

ரெகுலராக எஸ்.ஐ.பி. முறையிலும், சந்தைகளின் வீழ்ச்சியின்போது மொத்தமாகவும் தாராளமாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.  இத்திட்டத்திற்கு நமது மதிப்பெண் 80/100 ஆகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு