Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் டெக்னிக்கின் பெயர் ஜிக்ஜாக் (ZigZag). இது ஒரு இண்டிகேட்டர் இல்லை என்று பொதுவாகச் சொல்லலாம். இருப்பினும் இதனுடைய பலன் என்னவென்றால், ஒரு ஷேரின் விலையை ஒரு குறிப்பிட்ட அளவு (சதவிகிதத்தில்) விலை மாறுதல்களை மறந்து/மறைத்துவிட்டு சார்ட்டைப் போட்டுப் பார்க்க உதவும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஜிக்ஜாக்கின் சதவிகிதம் 5 என நிர்ணயிக்கப்பட்டால், ஒரு ஷேரின் விலை மாறுதல்களில்    5 சதவிகிதத்துக்குள் இருப்ப வற்றைச் சுத்தமாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதற்கு மேற்பட்ட விலை மாறுதல்களை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளும் இந்த சார்ட். அதே போல் இந்த சதவிகிதம் 10 என நிர்ணயிக்கப்பட்டால், 10 சதவிகிதத்துக்கு மேற்பட்ட விலை மாறுதல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டு சார்ட் வரைந்து காண்பிக் கப்படும். உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள நிஃப்டியின் 5% மற்றும் 10% ஜிக்ஜாக் சார்ட்களை பாருங்கள்.

இதுபோல் 5 சதவிகிதம் அல்லது 10 சதவிகிதம் என்ற அளவில் உண்டான விலை மாறுதல்களை வெளியேற்றி விட்டு சார்ட் போட்டால் (கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டில் நீல நிற லைனில் காட்டப் பட்டுள்ளது ஜிக்ஜாக் லைன்) அவை சிறிய பல மூவ்மென்ட்களை மறைத்து பெரிய மூவ்மென்ட்களையே காட்டுவதாக அமையும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
##~##
உதாரணத்திற்கு, ஒரு ஷேரின் விலை 100-லிருந்து 109 என்று ஒரு நாள் மாறி குளோஸானால் 10 சதவிகித ஜிக்ஜாக் லைனில் அந்த விலை மாறுதல் கணக்கிலேயே வராது. ஏனென்றால் அன்று நடந்த மாறுதல் 9 சதவிகித அளவிலானது நிர்ணயிக்கப் பட்ட 10 சதவிகித ஃபில்டருக்கு கீழே இருந்தது.

அருகேயுள்ள நிஃப்டியின் ஜிக்ஜாக் 10% சார்ட்டை பாருங்கள். செப்டம்பர் 2011-க்கு பின் நடந்த ஒரு புல்பேக் (4747.80-லிருந்து 5100 வரை சென்றது) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனென் றால் அது 10 சதவிகிதத்திற்கு கீழான மூவ் ஆகும். நிஃப்டி செப்டம்பரில் 4747 என்ற லெவலைத் தொட்டு பின்னர் 5153 என்ற லெவலை இரண்டு முறை அடைந்துள்ளது. 4747 என்பதின் 10 சதவிகிதம் 474 பாயின்டுகள் ஆகும். ஆனால், 5153-4747=406 பாயின்டுகளாக இருப்பதால் இது ஒரு ஜிக்ஜாக் 10% லைனில் இருக்கக்கூடிய பாயின்டாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

மாறாக, நவம்பர் 2011-ல் நிஃப்டி அடைந்த 5360 என்ற லெவல் லைனில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஜிக்ஜாக் முறையில் 5360-4747=613 என்பது 10 சதவிகித அளவான 474 என்பதைவிட அதிகம். ஜிக்ஜாக் 10%ல், பத்து சதவிகிதத்திற்கு மேற்பட்ட மாறுதல்கள் லைனில் ஒரு பாயின்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அந்த கணக்கீட்டில் 5360 ஒரு பாயின்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு கோடு போடப்பட்டுள்ளது. இப்படி குறிப்பிட்ட அளவிலான ஏற்ற இறக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போடப்படும் இந்த ஜிக்ஜாக் லைன்களால் என்ன பலன் என்கிறீர்களா? அதை இப்போது பார்ப்போம்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

ஒரு குறிப்பிட்ட அளவிலான விலை மாற்றங்களை தவிர்த்து விட்டு, ஒரு பெரிய  அளவிலான விசாலமான (பிராட் டிரெண்ட்) சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இந்த ஜிக்ஜாக் டெக்னிக் உதவுகிறது. சரி! இப்படி ஒரு குறிப்பிட்ட அளவிலான மூவ்மென்ட்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு பார்ப்பதில் அடுத்து சந்தை எப்படிப் போகும் என்பதை தெரிந்துகொள்ள முடியுமா? என்பதுதான் உங்களுடைய உடனடியான கேள்வியாக இருக்கும். அதற்கு விடை சொல்லும்முன் ஜிக்ஜாக்கின் இன்னொரு டெக்னிக்கையும் நாம் பார்த்துவிட்டால் நல்லது.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் நிஃப்டியின் சார்ட்டைப் பாருங்கள்.

ஏற்கெனவே கொடுத்த நிஃப்டியின் ஜிக்ஜாக் சார்ட்டிற் கும் இப்போது தரப்பட்டிருக்கும் சார்ட்டிற்கும் என்ன வித்தியாசம்? ஜிக்ஜாக் 10% லைன் சிவப்பு நிறத்தில் நேர்கோடாக இருக்கிறது என்று காமெடி பண்ணாதீர்கள். அது சார்ட்டில் மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு விஷயமாகும் (பாராமீட்டர்). சிவப்பு நிற ஜிக்ஜாக் 10% லைனைத் தவிர ஒரு சில சிவப்பு நிற புள்ளிகளால் இடப்பட்ட கோடுகளும், அவற்றின் மேல் 1.302, 1.332, 0.289 போன்ற எண்களும் இருக்கிறது இல்லையா? சிவப்பு நிற புள்ளிகளால் இடப்பட்ட கோடுகள்தான் ஜிக்ஜாக் (ரீட்ரேஸ்) எனப்படுவதாகும்.

ரீட்ரேஸ் என்றால் மீண்டு வருதல். இந்த சிவப்பு நிற புள்ளிகளால் ஆன கோடுகள் இரண்டு ஜிக்ஜாக் லைனை இணைக்கின்றன. அந்தக் கோட்டின் மீது இருக்கும் எண் (1.302 போன்றவை) இந்த ஜிக்ஜாக் லைனுக்கும் அதற்கு முந்தைய ஜிக்ஜாக் லைனுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை காட்டுவதாக  அமைகிறது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

கோடு 'அ’, 4747-லிருந்து 5360-க்கு போய் பின்னர் கோடு 'ஆ’ 5360-விலிருந்து 4544-க்கு வந்துள்ளது நிஃப்டி (10 சதவிகித ஜிக்ஜாக்கில் இவைதான் டர்னிங் பாயின்டாக அமைந்துள்ளது). 5360-ஐ அடையும்முன் திருப்பம் வந்த இடமாகிய 4747-ஐ 5360-லிருந்து கழிக்க வேண்டும் (5360-4747=613). அதேபோல் 5360-லிருந்து திரும்பி 4544-ஐ சென்றடைந்தது.

5360-லிருந்து 4544-ஐ கழிக்க வேண்டும் (5360-4544=816). 'ஆ’ லைனின் வித்தியாசமாகிய 816 பாயின்டை, 'அ’ லைனின் வித்தியாசமாகிய 613 பாயின்டினால் வகுத்தால் 1.332 வரும். இதேபோன்ற ஒரு கணக்கீட்டை 'ஆ’ மற்றும் 'இ’ லைன்களுக்கு நாம் போட்டுப் பார்த்தால் 1.302 என்று வரும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

இப்போது இந்த சிவப்பு நிற புள்ளிகளாலான லைன்களின் நீளம் எவ்வளவு என்பதை கணக்கிட்டுச் சொல்வதுதான் இந்த எண்கள். 'அ’ லைனிற்கும் 'ஆ’ லைனிற்கும் இடையே 1.332 என்ற எண் உள்ளது. இது 'ஆ’ லைன் 'அ’ லைனைவிட 133 சதவிகிதம் அதிகமான நீளமுடையது என்று காட்டுகிறது.

சிம்பிளாகச் சொன்னால் சிவப்பு புள்ளிகளால் ஆன லைனின் மீதுள்ள எண் 1-க்கு மேற்பட்டதாக இருந்தால் அது முந்தைய லைனைவிட பெரியது என்றும், 1-க்கு கீழாக இருந்தால் முந்தைய லைனை விட சிறியது என்றும் அர்த்தம்.

உதாரணத்திற்கு, 0.289 என்ற எண்ணைப் பாருங்கள் ('இ’ லைனிற்கும் 'ஈ’ லைனிற்கும் இடையே உள்ள சிவப்பு புள்ளி லைன்). முந்தைய லைனில் 28.9 சதவிகிதமே அடுத்த லைன் உள்ளது. 'இ’ லைன் மிகப் பெரியதாகவும், அடுத்துள்ள லைன் மிகவும் சிறியதாகவும் உள்ளது இல்லையா?

ஜிக்ஜாக் மற்றும் ஜிக்ஜாக் (ரீட்ரேஸ்) என்பது விலை மாறுதல்களை தேவையான அளவிற்கு ஃபில்டர் செய்து பார்த்துக்கொள்ள உதவுவதா கும். இப்படி ஃபில்டர் செய்து பார்க்க முடிவதால் தேவையற்ற மூவ்களை (ஆங்கிலத்தில் 'நாய்ஸ்’ என்பார்கள்) அகற்றிவிட்டு சந்தையின் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க மட்டுமே முடியும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

விலை எப்படிப் போகும் என்று இதை வைத்துக்கொண்டு கணிப்பது இயலாது. இவற்றை உபயோகித்து ஒரு விரிவானதொரு டிரெண்ட் அனாலிசிஸை நீங்கள் செய்து கொள்ளலாம். டிரெண்ட் லைனை பார்க்கும்போது தற்சமயம் உள்ள லைன் (ஈ) முந்தைய லைனைவிட சிறியதாக இருந்தால் கடைசியாக உள்ள லைன் ஒரு தற்காலிகமான லைன் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள சார்ட்டில் 'இ’ லைனை விட 'ஈ’ லைன் மிகச் சிறியது. ஏதாவது ஒரு காரணத்தால் விலைகள் மீண்டும் ஏற ஆரம்பித்தால், மீண்டும் 'இ’ லைனே தொடர்ந்து வளரவும், 'ஈ’ லைன் மறைந்தே போகவும் வாய்ப்புள்ளது. என்றைக்கு 'ஈ’ லைன் 'இ’ லைனைவிட பெரியதாக ஆகிறதோ அப்போதுதான் 'ஈ’ லைன் ஒரு நிரந்தர லைனாகிறது. அதுவரை 'ஈ’ லைன் ஒரு தற்காலிக லைன்தான்.

இந்த ரூலை வைத்துக் கொண்டு சந்தை எந்த டிரெண்டில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கொஞ்சம் புரிவதற்கு நேரமானாலும் தற்போதைய டிரெண்டை புரிந்துகொள்ள இந்த ஜிக்ஜாக் ஒரு உதவிகரமான டெக்னிக் என்பதை மறுக்க முடியாது.

(வளரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு