Published:Updated:

கம்பெனி அலசல் - கே.எஸ்.பி. பம்ப்ஸ்!

கம்பெனி அலசல் - கே.எஸ்.பி. பம்ப்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி அலசல் - கே.எஸ்.பி. பம்ப்ஸ்!

இந்த வாரம் நாம் அலசப் போகும் கம்பெனியின் அடித்தளம் 1871-ல் ஜெர்மனியில் போடப்பட்டது. அதற்குப்பின் தொண்ணூறு வருடம் கழித்து இந்தியாவில் இந்நிறுவனம் நிறுவப்பட்டது.  இதன் ஜெர்மானிய புரமோட்டர் 40.54 சதவிகிதமும், இந்திய புரமோட்டர் 25.95 சதவிகிதமுமாக மொத்தம் 66.49 சதவிகிதப் பங்குகளை புரமோட்டர்களே வைத்திருக்கும் கம்பெனி இது.

##~##
கே.
எஸ்.பி. ஏஜி எனும் கே.எஸ்.பி.-ன் தாய் நிறுவனமாகிய ஜெர்மானிய நிறுவனம் உலகம் முழுவதுமாக 19 இடங்களில் தொழிற் சாலைகளையும், உலகளாவிய அளவில் 51 கம்பெனிகளையும், கிட்டத்தட்ட 100 நாடுகளில் வியாபாரத்தையும் கொண்டுள்ளது.

கே.எஸ்.பி. பம்ப்ஸ் தொழிற் சாலைகளுக்குத் தேவையான சர்வீஸ்களை தருவதற்கும், வாட்டர் இன்ஜினீயரிங், சுரங்கங்கள், எனர்ஜி டெக்னாலஜி மற்றும் மெகா பவர் பிளான்டுகளுக்கு மின்சாரத்தின் மூலம் இயங்கும் பம்ப்களையும், இண்டஸ்ட்ரியல் வால்வுகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கே.எஸ்.பி. குரூப்பின் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் மூலமாக பல்வேறுவிதமான பம்ப்களை இண்டஸ்ட்ரிகள், சர்வீஸ்களை நிர்வகிக்கும் கம்பெனிகள், ஓ.இ.எம். தயாரிப்பாளர்கள், எனர்ஜி நிறுவனங்கள், சுரங்க நிறுவனங் கள், அரசாங்க கம்பெனிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள், பிராஸஸ் இன்ஜினீயரிங் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு சப்ளை செய்து வருகிறது.

தொழில் எப்படி?

பம்ப் மேனுபேக்ஸரிங் தொழில் இந்தியாவில் கிட்டத்தட்ட எழுபது ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் பம்புகளை தயாரித்து கிட்டத்தட்ட 95 சதவிகித உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் பம்ப்களின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த தேவைகளை பெரிய மற்றும் மத்திய தர கம்பெனிகள் பூர்த்தி செய்து வருகிறது. இதில் ஆர்கனைஸ்டு செக்டாரில் தயாரிக்கப்படும் பம்புகள் தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அன்-ஆர்கனைஸ்டு செக்டாரில் தயாரிக்கப்படும் பம்புகள் விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைகளை ஓரளவுக்கு பூர்த்தி செய்கிறது.

கம்பெனி அலசல் - கே.எஸ்.பி. பம்ப்ஸ்!

ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் பம்புகள் செய்யப்படுவதாகவும், சந்தையின் அளவு 30 பில்லியன் ரூபாய் என்றும் ஆய்வுகள் சொல்கிறது. சப்மெர்ஸிபிள் பம்புகள் செக்மென்டில் விவசாயத் துறை கிட்டத்தட்ட 80 சதவிகித பங்களிப்பைத் தருகிறது. சப்மெர்ஸிபிள் பம்புகள் தயாரிப்பில் பெரிய கம்பெனிகள் பல போட்டி போட்டுக் கொண்டு இறங்கி உள்ளன.

இந்தத் தொழிலில் இண்டஸ்ட்ரியல் பம்புகள் தயாரிப்பவர்களுக்கு பொருளாதார ஏற்ற இறக்கங்கள் பாதிப்பைத் தருவதாக அமையும். விவசாய பம்புகள் தயாரிப்பவர்களுக்கு பருவ மழை மற்றும் அரசாங்கத்தின் விவசாய சம்பந்தப்பட்ட கொள்கைகள் பாதிப்பைத் தருவதாக அமையும்.

சமீப காலமாக பம்ப் உற்பத்தித் தொழிலில் எனர்ஜி சேமிப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பற்ற பம்புகள் என பல மேம்படுத்தப்பட்ட வசதி களை வாடிக்கையாளர்கள் எதிர் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் முறைபடுத்தப்பட்ட துறையில் உள்ள கம்பெனிகளுக்கு பலன் அளிப்பதாக அமையும்.

கம்பெனி எப்படி?

கே.எஸ்.பி. பம்ப்ஸ் புனேவுக்கு பக்கத்தில் இருக்கிற பிம்ப்ரியில் நீர் பாசனம் மற்றும் பிராஸஸ் பம்புகளை தயாரிக்கும் தொழிற் சாலையை நிறுவியுள்ளது. இங்கே மல்டி ஸ்டேஜ் பம்ப்ஸ், கெமிக்கல் பிராஸஸ் பம்புகள், சப்மெர்ஸிபிள் மோட்டார் பம்புகள் போன்றவற்றைத் தயாரிக்கிறது. புனேக்கு அருகே உள்ள சின்ச்வாடில் ஹைபிரஷர் மல்டி ஸ்டேஜ் பம்புகளை தயாரிக்கும் வசதிகளை நிறுவியுள்ளது.

கோயம்புத்தூரில் வால்வு களில் பல வகைகளான குளோப் வால்வுகள், கேட் வால்வுகள், செக் வால்வுகள், பட்டர்ஃபிளை வால்வுகள், பால் வால்வுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை வைத்துள்ளது கே.எஸ்.பி. பம்ப்ஸ்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் அஹமத் நகரில் உள்ள வம்வோரியில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் காஸ்டிங்குகள், காஸ்ட் அயர்ன் காஸ்டிங்ஸ், நான்-பெரஸ் காஸ்டிங்ஸ் தயாரிக்கும் வசதிகளை நிறுவி யுள்ளது.  

வளர்ச்சித் திட்டங்கள் உண்டா?

ஏற்கெனவே சொன்னது போல் எரிசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதிலும் சுற்றுச்சூழ லுக்கு தோழமையோடு இருக்கும் பம்புகளுக்கான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. எனவே, இதற்குத் தேவையான டெக்னாலஜி சம்பந்தப்பட்ட துறைகளிலும், எதிர்காலத்தில் அதிகரிக்க இருக்கும் விற்பனைக்குத் தேவையான பவுண்டரி வசதிகளையும் ஏற்கெனவே விரிவாக்கம் செய்துள்ளது கே.எஸ்.பி.

அடுத்த நான்கு வருடங்களில் கிட்டத்தட்ட 150 முதல் 200 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பெனி அலசல் - கே.எஸ்.பி. பம்ப்ஸ்!


ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பம்ப் தொழிலில்  அனுபவ மிக்க மிகப் பெரிய கம்பெனி. பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கேற்ப விரைவாக வளரக்கூடிய தொழில். அதிலும் மிக நுண்ணிய மற்றும் உயரிய வகை பம்புகளின் தேவை அதிகரிக்கும்போது நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்குத் தேவையான பம்ப்கள் மற்றும் வால்வுகளை சப்ளை செய்து வருகிறது.  

500 மெகாவாட் மற்றும் 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான பம்புகளை தயாரிக்கும் வசதியை மட்டுமே கொண்டிருந்தாலும், பிரமாண்டமான மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான பம்ப்களை தயாரிக்கும் தேவை ஏற்பட்டால் ஜெர்மானிய தொழில்நுட்பமும் அனுபவமும் உடனுக்குடன் கிடைப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும் கம்பெனி இது. அரசாங்கம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் விவசாயத் துறைக்கான முதலீடுகளை அதிகரிக்கும் போது நிச்சயமாக லாபமடையக் கூடிய தொழில் இது.

ரிஸ்க் ஏதும் உண்டா?

அன்-ஆர்கனைஸ்டு கம்பெனிகள் நிறைய இருக்கும் தொழில். எனவே, விவசாயம் மற்றும் வீட்டு உபயோக செக்மென்டில் கடுமையான போட்டியையும் லாபக் குறைவையும் சந்திக்க நேரலாம். பம்ப் தயாரிப்பில் காப்பர், அலுமினியம், இரும்பு என பல்வேறுவிதமான உலோகங்கள் உபயோகிக்கப் படுகிறது. இந்த மூலப் பொருட் களின் விலை மேலும் கீழுமாக உலகச் சந்தையின் நிலைமைக்கு ஏற்றாற்போல் மாறக்கூடியது. மூலப் பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றங்கள் கே.எஸ்.பி.யின் லாபத்தை பதம் பார்த்துவிடலாம். சில வகை  பம்புகளில், சீனாவின் தயாரிப்புகள் போட்டி போடவும் வாய்ப்புள்ளது.

அதேபோல் மிகவும் தொழில் நுட்பமுடைய வால்வ் பிஸினஸிலும் போட்டி கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்துள்ளது. மிகவும் பொருளாதார ஓட்டத்துடன் ஒன்றிய தொழில்களான மின்சாரம் மற்றும் எரிபொருள் கம்பெனிகளுக்கு பம்ப் மற்றும் வால்வுகளை சப்ளை செய்வதால், பொருளாதார நிலைமை சிறிதுகாலம் மோச மானால் இந்த கம்பெனிகள் தங்களுடைய விரிவாக்கத்தை தள்ளிப் போட நேரலாம். அப்படி தள்ளிப் போடும்பட்சத்தில் கே.எஸ்.பி.க்கு விற்பனை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.

ஜெர்மானிய தொழில் நுட்பமும், நூறாண்டு கால அனுபவமும், திறமையான நிர்வாகத்தினையும் கொண்ட இந்நிறுவனத்தின் பங்குகளை வாசகர்கள் சமயம் பார்த்து வாங்கி தங்கள்  போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு