Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த வாரம் நம் போர்ட்ஃபோலியோவில் இரண்டு மாற்றங்கள் நடந்தது. முதலாவது, பி.டி.சி. இந்தியா பங்கினை 66 ரூபாய்க்கு விற்றதன் காரணமாக நம் போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியேறியது. அதேபோல கிளென்மார்க் பார்மா பங்கு நான் வாங்கச் சொன்ன விலைக்கு வந்ததால் வாங்கவும் முடிந்தது. இந்த வாரம் டாடா ஸ்பான்ச் மற்றும் ஆதித்யா பிர்லா நுவா பங்குகள் நம் போர்ட்ஃபோலியோவை விட்டுச் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ரும் திங்களன்று டாடா ஸ்பான்ச் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியாகிறது. அன்றே இந்த பங்கு நம் போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியே செல்ல  வாய்ப்பு அதிகம்.

அதேபோல ஆதித்யா பிர்லா நுவா பங்கும் இலக்கு விலையை கிட்டத்தட்ட நெருங்கிவந்து, சந்தை சரியில்லாததால் வெளியே செல்லாமல் இருக்கிறது.

இந்த வாரம் அதுவும் வெளியே செல்லலாம்.

புதிதாக வாங்க வேண்டிய பங்குகள்!

இந்த வாரம் கொஞ்சம் அக்ரெஸிவ்வாகவே முதலீடு செய்வோம். ராலிஸ் இந்தியா மற்றும் டிஷ் டிவி ஆகிய இரண்டு பங்குளை நான் பரிந்துரை செய்த விலைக்கு வாங்கவும். (ஒவ்வொரு பங்கும் 2,500 ரூபாய்க்கு மட்டும்).

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
இந்தமுறை இன்னொரு பங்கையும் வாங்க வேண்டி யிருக்கும். அதற்குமுன் ஒரு நிபந்தனை. நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள டாடா ஸ்பான்ச், ஸ்டீல் துறை சார்ந்தது. அந்த பங்கு நமது போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியேறினால்  மட்டுமே என்.எம்.டி.சி. என்ற இன்னொரு ஸ்டீல் துறை பங்கினை வாங்கவும். (டாடா ஸ்பான்ச் வெளியே செல்லாத நிலையில், என்.எம்.டி.சி. பங்கு பரிந்துரை செய்த விலையில் கிடைத்தாலும் வாங்கக்கூடாது.)  

எல்கான் இன்ஜினீயரிங் நாம் வாங்கிய விலையில் இருந்து 10% வரை சரிந்தாலும், நம் சராசரி விலையை அடையவில்லை. எனவே, அப்பங்கின் சராசரி விலையைக் கொஞ்சம் மாற்றி, 57.50 ரூபாய்க்கு வரும்போது  இன்னொரு 2,500 ரூபாய்க்கு வாங்கவும்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலை!

நமது போர்ட்ஃபோலியோ இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை. ஆனாலும், பங்குகளை விற்றதன் மூலம் 11,516 ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறது.  

சந்தை  இன்னும்கூட மேலே செல்லவே அதிகம்  வாய்ப்பிருக்கிறது.

இன்னும் நிறைய மாற்றங்கள் நடக்க இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கவும்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு