Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்

மொத்தத்தில் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கக்கூடிய வாரம் என்றும் சென்டிமென்ட் கொஞ்சம் நெகட்டிவ்வாகவே இருப்பதால் இறக்கம் என்பது சுலபமாக வந்துவிடலாம் என்பதை நீங்கள் மனதில் கொண்டே டிரேட் செய்ய வேண்டும் என்றும் சொல்லியிருந்தோம். மொத்தத்தில் வார இறுதியில் நிஃப்டி 83 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

##~##
ரும் வாரத்தில் கிட்டத்தட்ட 75 கம்பெனி ரிசல்ட்கள் வர இருக்கிறது. அமெரிக்க எஃப்.ஓ.எம்.சி. (வட்டி குறித்த முடிவுகள்/ஃபோர்காஸ்ட்கள்) மீட்டிங் அடுத்த வாரத்தில் நடைபெற உள்ளது. இதில் வரும் முடிவுகளும் இந்தியச் சந்தையின் போக்கை மாற்ற வாய்ப்பிருக்கிறது. எனவே, ரிசல்ட்கள் மற்றும் செய்திகள் மட்டுமே சந்தையை இழுத்துச் செல்வதாக அமையும். டெக்னிக்கலாக சந்தை 5350 லெவலைத் தாண்டி வால்யூமுடன் குளோஸானால் 5475 வரை செல்லலாம். எக்ஸ்பைரி வாரமாகையால் மிகப் பெரிய ஏற்றத்திற்கு வாய்ப்பில்லை என்றாலும் நல்லதொரு ஏற்ற, இறக்கம் இருக்கலாம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சந்தையில் வால்யூமும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடக்கவில்லை. இதையும் கவனிக்க வேண்டும். வால்யூம் அதிகமானால் செல்லும் திசை மாற அதிக வாய்ப்புள்ளது. கவனத்துடன் குறைந்த அளவில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப் லாஸுடன் வியாபாரம் செய்ய வேண்டிய தருணமிது.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு