இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் டெக்னிக்கின் பெயர் ட்ரிக்ஸ். ட்ரிக்ஸ் என்பது ஒரு மொமென்டம் ஆஸிலேட்டர். ஒரு ஷேரின் விலை தினசரி மாறிக்கொண்டே இருக்கும். அப்படி மாறும்போது நிறைய ஏற்ற இறக்கங்கள் வந்துபோகும். சம்பந்தமில்லாத நபர்கள், கையில் காசில்லாத நபர்கள் என பல்வேறு விதமான டிரேடர்களும் சந்தைக்குள் வந்து ஒரு ஷேரில் வியாபாரம் செய்துவிட்டுப் போவார்கள்.

ஒரு ஷேருடைய ஃபண்டமென்டல் நன்றாக இருக்கிறது. ரிசல்ட்களும் நன்றாகவே வரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனாலும், பெரும் பணக் கஷ்டத்தில் இருக்கும் ஒருவர் அந்த ஷேரை பெரிய எண்ணிக்கையில் சந்தையில் கொண்டுவந்து விற்கிறார். என்னவாகும்? அன்றைய தினத்தில் விலை நிச்சயமாக இறங்கும்.

அதேபோல் ஏற்றமும். ஒரு ஹை நெட்வொர்த் இன்வெஸ்ட்டரோ அல்லது மியூச்சுவல் பண்ட் அல்லது எப்.ஐ.ஐ.கள் நிறுவனம் திடீரென ஒருநாள் அதிக அளவிலான பங்கை சந்தையிலிருந்து வாங்கி அள்ளுகிறார்கள் எனில் என்ன வாகும்? அன்றைக்கு விலை சரியாக ஏறி அந்த ஷேரின் போக்கு சற்று மாறியதுபோல் காட்டும். இது ஒரு நாளைக்கு மட்டும் பொருந்தும் விஷயம் இல்லை. ஐந்தாறு நாட்கள் தொடர்ந்துகூட இதுபோன்ற தவறான தோற்றங்களை உண்டாக்கும் நிகழ்வுகள் நடக்கலாம். இதுபோல ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென ஏற்றமோ, இறக்கமோ நடந்து விலையின் போக்கு மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

. இப்படி மாறிய விலைகளை சார்ட்டில் போட்டுப் பார்த்தால் கொஞ்சம் ஏடாகூட மாகவே தெரியும். இந்த ஏடாகூடங்களை விலக்கி. எப்படி விலை மாற்றங்கள் நடக்கிறது என்பதைப் பார்க்க உதவுவதுதான் ட்ரிக்ஸ்..
சாதாரணமாக விலையை வைத்து எதிர்காலப் போக்கைச் சொல்வதைவிட, பலநாள் விலையின் ஆவரேஜ்களை வைத்து எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வது கொஞ்சம் சரியாக இருக்கும் என்று இந்தத் தொடரின் ஆரம்பத்தி லேயே பார்த்தோம். மேலே கூறியது போன்ற ஸ்பெஷல் காரணங்களால் வரும் விலை மாற்றங்களைத் தவிர்க்க மூவிங் ஆவரேஜ்கள் நிச்சயமாக உதவும்.

அதிலும் ட்ரிக்ஸில் மூன்று முறை மீண்டும் மீண்டும் மூவிங் ஆவரேஜ் கணக்கிடப்படுவ தால் மூன்றுமுறை விலை டேட்டா சமன்படுத்தப்பட்டு விடுகிறபடியால் கணிப்புகள் கொஞ்சம் நன்றாகவே வர வாய்ப்புள்ளது. ட்ரிக்ஸின் மூலம் கிடைக்கும் சிக்னல்கள் மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜன்ஸ் - டைவர்ஜன்ஸ் போன்றதாகவே இருக்கும்.

ட்ரிக்ஸ் எப்படி கணக்கிடப் படுகிறது?

ட்ரிக்ஸ் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு மூன்று முறை மூவிங் ஆவரேஜ்கள் கணக்கிடப்பட வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். அதை இப்போது விரிவாகப் பார்ப்போம். ஒரு ஷேரின் தினசரி விலைகளை வைத்துக்கொண்டு 15 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இ.எம்.ஏ. எண் வரும். ஒவ்வொரு நாளுக்கும் வரும் எண்களுக்கும் 15 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் கண்டுபிடிக்க வேண்டும். இதிலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இ.எம்.ஏ. எண் வரும். இந்த எண்ணிற்கு மீண்டும் 15 நாள் எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் கண்டுபிடிக்க வேண்டும். இதுவும் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு எண் வரும். இப்படி மூன்றாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்ட இ.எம்.ஏ.வின் ஒரு நாளுக்கும் இன்னொரு நாளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம்தான் (சதவிகிதத்தில்) ட்ரிக்ஸ். (இதனை வரிசைப்படுத்தி எழுதினால் எப்படி வரும் என்பதை கீழே தந்திருக்கிறேன்.)

கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி சார்ட்டை பாருங்கள். நீல நிறத்தில் உள்ள தினசரி குளோஸிங் விலை லைனுக்கும், சிவப்பு நிறத்தில் உள்ள 15 நாள் இ.எம்.ஏ. லைனிற்கும், வெளிர் பச்சை நிறத்தில் உள்ள 2-ம் நிலை இ.எம்.ஏ. லைனிற்கும், 3-ம் நிலை இ.எம்.ஏ. லைனிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். தினசரி குளோஸிங் விலை மிகவும் வாலட்டைலாக வயலண்ட்டாகவும் உள்ளது.

15 நாள் இ.எம்.ஏ. லைன் குளோஸிங் விலையை சற்று ஃபாலோ பண்ணியே செல்கிறது. 2-ம் நிலை மற்றும் மூன்றாம் நிலை இ.எம்.ஏ.க்களின் லைன் சற்றே தட்டையாக மாறி விடுகின்றன. அதனால் இந்த தட்டையான லைன்களின் டிரெண்ட் திரும்பும் போது அர்த்தங்கள் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது இல்லையா?

இதனால்தான் மூன்று முறை இ.எம்.ஏ.கள் கண்டு பிடிக்கப்பட்டு பின்னர் அந்த வேல்யூக்களில் வரும் தினசரி விலை வித்தியாச சதவிகிதத்தை ப்ளாட் செய்து பார்த்தால் கொஞ்சம் தெளிவான மூவ்கள் தெரிய வரும். உதாரணத்திற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள மாருதி சுசூகியின் சார்ட்டைப் பாருங்கள்.

ஜனவரி 13-ம் தேதியன்று ட்ரிக்ஸ் லைன் 0-வைத் தாண்டி யுள்ளது. அதாவது, குளோஸிங் விலையின் மூன்று முறை இ.எம்.ஏ.விற்கு இடையே உள்ள வித்தியாசம் பாசிட்டிவ்வாக மாறியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் இருந்து அதிவேகத்தில் இறங்கிய மாருதி ஜனவரி 13-ம் தேதியன்று இறங்கிய அளவில் சற்றே ரெக்கவரி ஆகியிருந்தாலும் ட்ரிக்ஸ் அளவீட்டில் பாசிட்டிவ்-ஆக மாறிய பின் எவ்வளவு வேகமாக மேலே போயுள்ளது என்று பாருங்கள்.

மேலே தரப்பட்டுள்ள சார்ட்டில் ட்ரிக்ஸிம் எம்.ஏ.சி.டி. மாதிரிதானே இருக்கிறது என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். மூன்று முறை ஆவரேஜ் செய்யப்படுவதால் ட்ரிக்ஸ் லைன் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும். ஆனால், எம்.ஏ.சி.டி. லைன் சற்று கரடுமுரடாக அடிக்கடி திருப்பங்களைக் கொண்டதாக இருக்கும்.

மேலே உள்ள நிஃப்டியின் சார்ட்டையும், டிரிக்ஸ் சார்ட்டையும் பாருங்கள். கறுப்பு நிறத்தில் இருப்பது ட்ரிக்ஸ் லைன். சிவப்பு நிறத்தில் இருப்பது நிஃப்டியின் 9 நாள் இ.எம்.ஏ லைன். இந்த ஒன்பது நாள் இ.எம்.ஏ. லைனை சிக்னல் லைன் என்று சொல்வார்கள். அது என்ன சிக்னல் லைன் என்கிறீர்களா? எம்.ஏ.சி.டி.யிலும் இதுபோன்றே இருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 9 நாள் அளவீட்டில் சந்தையில் விலை வித்தியாசங்கள் என்ன அளவில் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவது இந்த லைன். மூன்று முறை சமன் செய்யப்பட்ட அளவில் சந்தை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுவது ட்ரிக்ஸ் லைன். இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் கிராஸிங்குகள் முக்கியத்துவம் பெறுகிறது ட்ரிக்ஸில்.

ட்ரிக்ஸை வரிசைப்படுத்தி எழுதினால்:

1. முதல் நிலை இ.எம்.ஏ. = குளோஸிங் விலையின் 15 நாள் இ.எம்.ஏ.

2. இரண்டாம் நிலை இ.எம்.ஏ. = ஒன்றாவது இ.எம்.ஏ.வின் 15 நாள் இ.எம்.ஏ.

3. மூன்றாம் நிலை இ.எம்.ஏ. = இரண்டாவது இ.எம்.ஏ.வின் 15 நாள் இ.எம்.ஏ.

4. ட்ரிக்ஸ் = மூன்றாவது இ.எம்.ஏ.வில் ஒரு நாளைக்கும் மற்றொரு நாளைக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் சதவிகிதத்தில்.

இ.எம்.ஏ. கணக்கிடுவது எப்படி என்று ஏற்கெனவே இந்தத் தொடரில் சொல்லியிருப்பதால் அது குறித்து மீண்டும் விளக்கத் தேவையில்லை.

இப்படி இ.எம்.ஏ.களை கணக்கிடுவதன் மூலம் சார்ட்டில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதை மாதிரி சார்ட்டில் பார்க்கலாம்.

எம்.ஏ.சி.டி.யைப் போலவே ட்ரிக்ஸிலும் முக்கியமாகப் பார்க்க வேண்டிய மூன்று சிக்னல்கள் உண்டு. முதல் சிக்னல் என்பது சிக்னல் லைனை ட்ரிக்ஸ் லைன் கிராஸ் ஆவதை. இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது, ட்ரிக்ஸ் லைன் சென்டர் லைனை கிராஸ் செய்வதை. மூன்றாவதாகப் பார்க்க வேண்டியது, சிக்னல் லைனிற்கும் ட்ரிக்ஸ் லைனிற்கும் இடையேயுள்ள பியரிஷ் மற்றும் புல்லிஷ் டைவர்ஜன்ஸை. இவற்றை எப்படிப் பார்ப்பது? எப்படி பலன்களை அறிவது என்பது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

(வளரும்)