இந்த வாரம் நாம் அலசப்போகும் கம்பெனி கிளென்மார்க் பார்மச்சூட்டிகல். இது மருந்து தயாரிக்கும் நடுத்தரமான கம்பெனி. இந்த கம்பெனி செய்யும் மொத்த வியாபாரத்தில் 30 சதவிகித அளவு இந்தியாவில் செய்யப்படுகிறது. இந்தியாவின் டாப் 300 பிராண்ட்களில் ஒன்றாக இந்த கம்பெனி தயாரிக்கும் சளி மருந்து இருந்து வருகிறது.

தொழில் எப்படி?

மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைத் துறையில் செயல்படும் நாடுகளுக்கேற்றாற் போல் தொழில் செய்ய வேண்டியிருக்கும். இத்தொழிலில் இருக்கும் கம்பெனிகள் இதற் கேற்ற திறமைகள் மற்றும் திட்டங்களை எப்போதுமே தயாராக வைத்திருக்க வேண்டும்.

இந்திய சில்லறை மருந்து விற்பனை கிட்டத்தட்ட 17 சதவிகித அளவில் வருடாந்திரம் வளர்ந்து வருகிறது. இதில், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மருந்துகளின் விற்பனை கிட்டத்தட்ட 9 சதவிகித வளர்ச்சியையும், புதிய மருந்துகள் 7 சதவிகித வளர்ச்சி யையும், விலை ஏற்றங்கள் கிட்டத்தட்ட 1 சதவிகித அளவும் வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக அமைகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மருந்துச் சந்தை உலகத்தின் பத்து பெரிய சந்தைகளில் ஒன்றாக மாறிவிடும் என்பது எதிர்பார்ப்பு. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை சிறுநகரம், கிராமம், குக்கிராமம் போன்றவைதான் வியாபாரத்தை வேகமாக வளரச் செய்வதாக அமையப் போகிறது.

கம்பெனி எப்படி?

1977-ல் ஆரம்பிக்கப்பட்டு 1999 டிசம்பரில் பத்து ரூபாய் ஷேர் ஒன்றுக்கு 190 ரூபாய் பிரீமியம் என்று பப்ளிக் இஷ்யூவிற்கு வந்தது இந்த கம்பெனி. லிஸ்ட் ஆன தினத்தன்று ரூபாய் 563-க்கு குளோஸானது இதன் ஷேர். படிப்படியாகத் திட்டமிட்டு, வேகமான வளர்ச்சி கண்டு தன் பயணத்தைச் செய்து வருகிறது கிளென்மார்க். மருந்து கம்பெனிக்கு ஆராய்ச்சி (ஆர் அண்ட் டி) முக்கியம் என்பதை நன்குணர்ந்த இந்த கம்பெனி, ஆராய்ச்சிக்கு மிகவும் செலவாகும் என்பதால் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் கம்பெனிகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்காக ஆராய்ச்சியில் இறங்கி புதிய மாலிக்யூல்களை கண்டு பிடித்துக் கொடுக்கிறது. கண்டுபிடித்துக் கொடுத்த மாலிக்யூல்களை உற்பத்தி செய்துதரவும், அவற்றை உபயோகித்து மருந்து தயாரித்து விற்பனை செய்யவும் வசதி செய்யும் ஒப்பந்தங்களையும் கிளென்மார்க் உடனுக்குடன் போட்டுவிடுகிறது. 2004-லிருந்து 2012-வரை கிளென்மார்க் ஆறு பெரிய நிறுவனங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு செயலாக்கி வருகிறது.

உலகளாவிய அளவில் 20 துணை நிறுவனங்களையும், எட்டாயிரம் தொழிலாளர் களையும், நான்கு நாடுகளில் 13 தொழிற்சாலைகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது கிளென்மார்க்.

கிளென்மார்க்கின் தயாரிப்புகள் அதனுடைய பிராண்டிலேயே விற்கப்படுவது தான். ஒரு மருந்து கம்பெனிக்கு இது மிகுந்த பயனளிக்கக்கூடியது. தவிர, முக்கிய மருந்தில் சேர்க்கப்படும் உட்பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும், தயாரித்த மருந்துகளை மாத்திரை, சிரப் என பேக் செய்து தருவதற்கான வசதிகளை பத்து இடங்களிலும், ஆராய்ச்சி மற்றும் சோதனை செய்யும் மையங்களை ஆறு இடங் களிலும் வைத்திருக்கிறது கிளென்மார்க்.

வளர்ச்சித் திட்டங்கள்!

வயிற்றுப் போக்கு, ஆஸ்துமா, ரூமெட்டாய்ட் ஆர்த்ரைடிஸ், ஆர்த்ரெட்டிக் பெயின், நியூரோபதிக் பெயின், லூகேமியா மற்றும் பொதுவான வலி போன்ற தொடர் தேவை களுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நிலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது கிளென்மார்க்.

தோல் சம்பந்தப்பட்ட வியாதி கள், மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் கேன்சர் மற்றும் ட்யூமர் நோய்கள் இவற்றிற்கான மருந்துகளைத் தயாரிப்பதிலேயே மிகுந்த கவனமும், அனுபவமும், முதலீடு களையும் கொண்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது கிளென்மார்க். இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவான (ஜெனிரிக்ஸ்) மருந்துகளை தயாரித்து விற்பதில் மும்முரம் காட்டி வருகிறது. அதிலும், அமெரிக்காவில் கடந்த நாலு வருடங்களில் கிட்டத்தட்ட 40 சதவிகித (சி.ஏ.ஜி.ஆர்.) வியாபார அளவு உயர்வு நடந்துள்ளது.

2017 வரையிலும் அரசாங்கம் ஆர் அண்ட் டி-க்கான சலுகைகள் பலவற்றை தந்துள்ளது. இவையனைத்துமே கிளென்மார்க்கிற்குச் சாதகமாக அமையும். கிலிங்கர் லேபாரட்டரியை வாங்கியதன் மூலம்,

லத்தீன் அமெரிக்காவில் தன் வியாபாரத்தை விரிவு செய்ய முடிந்தது இந்நிறுவனத்தால்.

அதேபோல், ஐஸ்லாந்து கம்பெனியான ஆக்டாவிஸிட்-வுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தன் வியாபாரத்தை விரிவு செய்து கொண்டு வருகிறது. இந்திய மருந்துச் சந்தையில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்து விற்பனையில் இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. இதில் முதல் கம்பெனி கிளாஸ்கோ ஆகும்.

ரிஸ்க் ஏதுமில்லையா?

ஏற்கெனவே சொன்னபடி மருந்து கம்பெனிகள் பல்வேறு விதமான சட்டதிட்டங்கள் அமலில் இருக்கும் நாடுகளில் செயல்பட வேண்டியிருக்கும். சட்ட மாறுதல்கள் மற்றும் காப்புரிமை குறித்த பிரச்னைகள் கம்பெனியின் தன்மையையே மாற்றிவிடலாம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருப்பதால் ஏகப்பட்ட முதலீடுகள் தேவைப்படும்.

முதலீடுகளைக் குறைக்க லைசென்ஸ் முறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் கிளென்மார்க்கிற்கு வேறு விதமான ரிஸ்க் இருக்கிறது. ஆராய்ச்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலோ அல்லது அந்த மாலிக்யூல்களை உபயோகித்து தயாரிக்கப்படும் மருந்துகளை ஏதாவது ஒரு காரணத்தால் உபயோகிக்கும் கம்பெனி நிறுத்திவிட்டாலோ கிளென்மார்க்கிற்கு வருமானம் குறையும். ஏற்கெனவே இரண்டுமுறை இதுபோல நடந்துள்ளது இந்நிறுவனத்திற்கு. அதிகரித்து வரும் போட்டிகள், சட்டதிட்டங்கள் கடுமையாதல், பொருளாதாரச் சுணக்கம் என எல்லாமே இந்த கம்பெனியையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

எனினும், கடந்தகால வளர்ச்சி யையும் செயல்பாட்டையும் வைத்துப் பார்த்தால், வாசகர்கள் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் கிளென்மார்க் பங்கையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எங்கள் டீமின் பரிந்துரை.

-நாணயம் டீம்.