நான் சொன்னது போலவே கடந்த வாரம் உங்களுக்கு பல வேலைகள் இருந்திருக்கும். அதாவது, நமது போர்ட்ஃபோலியோ கடந்த வாரம் பல மாறுதல்களைச் சந்தித்தது. டாடா ஸ்பான்ச் பங்கு நாம் எதிர்பார்த்தபடியே லாபத்துடன் வெளியே சென்றிருந்தாலும், ஆதித்யா பிர்லா நுவா பங்கு நம் இலக்கு விலையை அடையவில்லை. கடந்த திங்களன்று இலக்கு விலையை அந்த பங்கு நெருங்கியது. ஆனாலும், சந்தையின் சூழ்நிலை சரி இல்லாததால் அதை நாம் விற்றிருக்க முடியாது.

மேலும், நான் வாங்க சொன்ன பங்குகள் மூன்றையுமே முதலீட்டாளர்கள் வாங்கி இருக்க முடியும். (டாடா ஸ்பான்ச் பங்கு திங்கட்கிழமை லாபத்துடன் வெளியேறி விட்டதால் என்.எம்.டி.சி. பங்கினை செவ்வாய்க்கிழமை வாங்கி இருக்க முடியும்.) அதேபோல எல்கான் இன்ஜினீயரிங் பங்கு லாபத்துடன் வெளியேறாமலும், சரிவடைந்து சராசரியும் ஆகாததால் 57.50 ரூபாய்க்கு ஒரு சராசரி செய்ய சொல்லி இருந்தேன். அதையும் முதலீட்டாளர்கள் செய்திருக்க முடியும்.

இப்போதைக்கு நம் போர்ட்ஃபோலியோவில் 18 பங்குகள் இருந்தாலும், நாம் முதலீடு செய்த தொகை சுமார் 79,000 ரூபாய்தான். அதனால் இந்த வாரம் புதிதாக எந்த பங்கிலும் முதலீடு செய்யாமல் சராசரி செய்யும் வேலையை நாம் செய்யலாம்.

எல்கான் இன்ஜினீயரிங் பங்கு போல கிராம்ப்டன் கிரீவ்ஸ் பங்கில் கடந்த மூன்று மாதமாக எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதனால், அந்த பங்கினை நாம் 130 ரூபாய்க்கு சராசரி செய்யலாம். கடந்த வாரம்தான் ராலிஸ் இந்தியா பங்கினை வாங்கினோம். ஆனால், நாம் வாங்கியதில் இருந்து சரிய ஆரம்பித்திருக்கிறது. சராசரி செய்ய வேண்டிய விலை (110) வந்தவுடன் இன்னுமொரு 2,500 ரூபாய்க்கு வாங்கி, சராசரி செய்யலாம்.

ஒரே பங்கினை அடுத்தடுத்த வாரத்தில் வாங்கி சராசரி செய்கிறோமே என்று நினைக்கத் தேவை இல்லை. ராலிஸ் இந்தியா பங்கு டாடா குரூப் பங்கு. மேலும், சரிவது ஒரு பிரச்னையே இல்லை. சரிகிற வேகத்தில் மீண்டும் எழுந்துவிடும். அப்போது உடனடியாக நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து வெளியேறிவிடும்.

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலை!

கடந்த மூன்று மாதங்களாக சந்தை எந்த ஒரு திசையிலும் செல்லவில்லை. சந்தை அதிகமாக உயர்ந்திருந்தால் நாம் அதிகளவு லாபம் சம்பாதித் திருக்கலாம். ஒருவேளை அதிகமாகச் சரிந்திருந்தால் நாம் நம்முடைய மொத்த முதலீட்டுத் தொகையான 2 லட்சத்தையும் முதலீடு செய்திருக்கலாம். இரண்டும் நடக்காமல் ஒரு ரேஞ்ச் பவுண்டிலே சந்தை இருப்பதால் நாம் சிறிதளவு நஷ்டத்தில் இருக்கிறோம். இருந்தாலும் இதுவரை நாம் அடைந்த லாபத்தைச் சேர்த்துப் பார்த்தால் 8,600 ரூபாய் நிகர லாபத்தில்தான் இருக்கிறோம்.

மே மாதத்தில் பங்குச் சந்தை சில வருடங்கள் சரிந்திருக்கிறது. முக்கியமான நிறுவனங்களின் முடிவுகளை பொறுத்தே சந்தை இருக்கிறது. நடக்க இருப்பதைப் பொறுமையுடன் பார்ப்போம்!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்