கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 20) நிஃப்டியும், இன்ஃபோசிஸ் பங்கும் ஒரு சில நொடிகளில் கடுமையான சரிவை சந்தித்தன. அல்கோ டிரேடிங்தான் இந்த சரிவுக்குக் காரணம் என்றார்கள் சிலர்.

அது என்ன அல்கோ டிரேடிங், அதை எப்படி செய்வது, இதனால் சந்தை திடீரென சரியுமா என்று பங்குச் சந்தை ஆலோசகர் ரெஜிதாமஸிடம் கேட்டோம். தெளிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

''அல்காரிதம் அடிப்படை யில் ஒரு விதிமுறையை வகுத்துக் கொண்டு, அதன்படி செய்வதே அல்கோ டிரேடிங். சாதாரண மாக நாம் செய்யும் டிரேடிங்கிற்கு கூட ஒரு அல்காரிதம் இருக்கிறது. உதாரணமாக, ஒரு பங்கு 102 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. அந்த பங்கினை 100 ரூபாய்க்கு வரும் போது வாங்கி, 105 ரூபாய்க்கு போகும் போது விற்க வேண்டும் என்று நினைப்போம்.

102 ரூபாயில் வர்த்தகமாகும் பங்கு, விலை குறைந்து 100 ரூபாய்க்கு வரும் போது நாம் வாங்கிவிடுவோம். ஆனால், 105 ரூபாய்க்கு செல்லும் போது அதை விற்க நமக்கு மனம் வராது. 105 ரூபாயில் பாதி அளவு பங்குகளை மட்டும் விற்றுவிட்டு, மீதமுள்ளதை அதிக விலைக்கு விற்கலாம் என்று வைத்துவிடுவோம். ஆசைதான் இதற்கு காரணம்.

இந்த முடிவு சில சமயம் சரியாக இருக்கலாம்; சில சமயம் தவறாகக்கூட போகலாம். ஆனால், அல்காரிதம் டிரேடிங்கில் எந்தவிதமான ஆசைக்கும் உணர்ச்சிக்கும் இடமில்லை. நாம் வாங்கச் சொன்ன விலையில் வாங்கி, விற்கச் சொன்ன விலையில் விற்று வர்த்தகத்தை முடிந்திருக்கும். காரணம், பங்கை வாங்கி, விற்கப் போவது கம்ப்யூட்டர்தான்.

. ஆரம்ப காலத்தில் இரண்டு மனிதர்கள் நேரடியாகச் சந்தித்து பங்குகளை வாங்கி, விற்றார்கள். டெக்னாலஜி மாறியபோது மனிதன் செய்த வேலையை கம்யூட்டர்கள் செய்தன. நாம் வாங்கச் சொன்ன பங்கை கம்ப்யூட்டர் மூலம் வாங்கினோம். விற்கச் சொன்ன பங்கை கம்ப்யூட்டர் மூலம் விற்றோம்..
இப்போது இதன் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தொட்டு இருக்கிறோம். எந்த விலையில் ஒரு பங்கை வாங்க வேண்டும், அதை எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை கம்யூட்டரிடம் சொல்லிவிட்டால் போதும், நாம் சொன்ன விலைக்கு வரும் பட்சத்தில் கம்ப்யூட்டர் தானாகவே அந்த பங்குகளை வாங்கி, விற்றுவிடும் என்பதுதான் அல்கோ டிரேடிங்.

இந்த அல்கோ டிரேடிங்கி னால் நமக்கு பல சௌகரியங்கள் கிடைக்கிறது. முதலில், நாம் உட்கார்ந்து டிரேடிங் செய்ய வேண்டியதில்லை. கம்ப்யூட்டரே நமக்காகச் செய்து கொடுத்துவிடும். தவிர, பல சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நுட்பமாக கண்டுபிடித்து, அதன்படி நடக்க கம்ப்யூட்டருக்கு நாம் உத்தரவு பிறப்பிக்கலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு பங்கு அன்றைய வர்த்தகத்தில் அல்லது குறிப்பிட்ட வாரத்தில் அதிக எண்ணிக்கையில் விற்ற விலைக்கு விற்கும்படி கம்ப்யூட்டரிடம் சொல்லிவிட்டால், அந்த விலை வரும்பட்சத்தில் கச்சிதமாக விற்றுவிடும். இப்படி பல நன்மைகள் அல்கோ டிரேடிங் மூலம் நமக்குக் கிடைக்கும்.

நம்முடைய அல்காரிதம் டெக்னிக்கல், ஆர்பிட்ரேஜ் (ஒரு எக்ஸ்சேஞ்சில் குறைந்த விலைக்கு ஒரு பங்கை வாங்கி, அதைவிட கொஞ்சம் அதிகமான விலைக்கு மற்றொரு எக்ஸ்சேஞ்சில் விற்பது!) அடிப்படை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், உங்கள் அல்காரிதத்தை என்.எஸ்.இ. ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன்.

இந்த அல்காரிதத்தை எழுதித் தர தனியாக நிறுவனங்கள் இருக்கின்றன. இப்போதைக்குப் பெரு முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே இதை பயன்படுத்துகின்றன. இன்னும் சில வருடங்களில் அனைவரும் அல்காரிதம் அடிப்படையில் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவாகும்'' என்றவரிடம், ''கடந்த ஏப்ரல் 20 அன்று சந்தை சரிய அல்கோ டிரேடிங் காரணமா? என்று கேட்டோம்.

''அல்கோ டிரேடிங்கினால் மட்டுமே சந்தை திடீரென சரிய வாய்ப்பில்லை. நீங்கள் சொல்லும் வெள்ளிக்கிழமை அன்று எந்தத் தவறும் நடக்க வில்லை. ஒரு பங்கு 20% வரை சரியலாம்/உயரலாம் என்ற விதி இருக்கிறது. அதன் அடிப்படையில் ஒருவர் அல்காரிதம் செய்திருக்கலாம். வேறு யாராவது ஒருவர் தவறான விலையில் ஆர்டர் போட்டிருக்கலாம். அப்போது அது எக்ஸிகியூட் ஆகி வர்த்தகம் நடந்திருக்கலாமே தவிர, அல்காரிதத்தினால் வந்த பிரச்னை அல்ல'' என்று சொன்னார்.

புதிய தொழில்நுட்பங்கள் பயங்களையும் சந்தேகங்களை யும் உருவாக்குவது இயற்கை. அந்த பயமும் சந்தேகமும் தீர இன்னும் சில காலம் பிடிக்கலாம். அதுவரை பொறுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

-வா.கார்த்திகேயன்.