பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எடுப்பதைவிட  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்தது. இந்த நோக்கத்தை அடைய கச்சிதமான வழியாக கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் இருக்கும்.  

ஃபண்ட் ரிசர்ச்!

னரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியும், நெதர்லாந்தைச் சார்ந்த ராபிகோ நிறுவனமும் கைகோத்து நடத்தி வருகின்றன. கனரா வங்கி 51% பங்குகளையும், ராபிகோ குரூப் மீதி பங்குகளையும் கொண்டுள்ளது.

ராபிகோ நிறுவனம் உலகெங்கிலும் 180 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்தியா வில் உள்ள பழைமையான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களில் இந்நிறுவனமும் ஒன்று.

1987-ல் கேன்பேங்க் மியூச்சுவல் ஃபண்ட் என்று துவங்கப்பட்டது. பிறகு 2007-ல் ராபிகோ நிறுவனத்துடன் கைகோத்து கனரா ராபிகோ மியூச்சுவல் ஃபண்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த ஆண்டி லிருந்து இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் திட்டங்களும் நன்றாகச் செயல்பட்டு வருகிறது.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்நிறுவனம் ரூ.7,663 கோடி மதிப்புள்ள சொத்துக் களை நிர்வகித்து வருகிறது. பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது இந்நிறுவனம் நிர்வகிக்கும் சொத்துக்களின் மதிப்பு குறைவு என்றாலும், எம்.ஐ.பி., டாக்ஸ்சேவர், பேலன்ஸ்டு, டைவர்சிஃபைட் ஈக்விட்டி, கடன் சார்ந்த ஃபண்டுகள் என பல வகையான திட்டங்களிலும் இதன் செயல்பாடு நன்றாக உள்ளது.

கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் 2003-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  திட்டமாகும். இதன் தற்போதைய ஃபண்ட் மேனேஜர் சௌமேந்திரநாத் லாஹிரி ஆவார். இவரே பங்கு சார்ந்த திட்டங்களின் தலைமை முதலீட்டு அலுவலரும் ஆவார். இவர் கடந்த ஒரு வருடமாக இந்த ஃபண்டின் மேனேஜராக உள்ளார். இந்த ஒரு வருடத் திலும் இந்த ஃபண்ட் நன்றாகவே செயல்பட்டுள்ளது. இத்தனைக்கும் நிஃப்டி 50 7.9 சதவிகிதம் நெகட்டிவ் ரிட்டர்ன் தந்துள்ள போதிலும், இந்த ஃபண்ட் 0.3% நெகட்டிவ் ரிட்டர்னையே தந்துள்ளது.

ஃபைனான்ஸ், எனர்ஜி மற்றும் எஃப்.எம்.சி.ஜி. துறைகள் இந்த ஃபண்டின் டாப் துறை முதலீடுகளாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஃபங்குகளை தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் போன்றவை இதன் டாப் ஹோல்டிங்ஸாக உள்ளன. ஐம்பதுக்கும் அதிகமான பங்குகள் போர்ட்ஃபோலியோவில் இடம் பெற்றுள்ளதால், எந்த ஒரு பங்கும் 6 சதவிகிதத்திற்கும் மேல் வெயிட் இல்லை. இதன் போர்ட்ஃபோலியோவில் 75% லார்ஜ்கேப் பங்குகளும், மீதி 25% ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகளும் இடம் பெற்றுள்ளன. ஆரம்பித்தபோது மல்ட்டிகேப் ஃபண்டாக இருந்தது; பிறகு மிட்கேப் ஃபண்டாக மாறி மீண்டும் மல்ட்டிகேப்பாக ஆகியது. 2008-லிருந்து லார்ஜ்கேப் ஃபோக்கஸ் ஆரம்பித்து இன்றுவரை அவ்வாறே இருந்து வருகிறது.

ஃபண்ட் ரிசர்ச்!

2006-ம் ஆண்டைத் தவிர, ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 'நிஃப்டி 50’-ஐவிட அதிகமான வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்த ஃபண்ட் நிர்வகிக்கும் தொகையும் படிப்படியாக உயர்ந்து கொண்டுதான் வருகிறது. 2003-ல் இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது ரூ.17 கோடியாக இருந்த தொகை இப்போது ரூ.543 கோடியாக உள்ளது. இது இந்த ஃபண்டின் நல்ல செயல்பாட்டை காட்டுகிறது.

இதன் செலவு விகிதம் 2.28%. ஆரம்பித்தபோது ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்று ரூ.5.54 லட்சமாக உள்ளது. அதேபோல் ஆரம்பத்திலிருந்து எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் ஒருவர் செய்த முதலீடான ரூ.1,000 (103 மாதங்கள்) இன்றைய தேதியில் ரூ.1,96,489 ஆக உள்ளது.

ஃபண்ட் ரிசர்ச்!

ராபிகோ நிறுவனம் 2007-ல் இணைந்ததிலிருந்து இந்த ஃபண்டும் இந்த ஃபண்ட் ஹவுஸின் பிற ஃபண்டுகளும் நன்றாகச் செயல்பட ஆரம்பித்துள்ளன. இந்த ஃபண்டின் நெகட்டிவ் என்று பார்த்தால், சிறிய ஃபண்ட் ஹவுஸ், சற்று அதிகமான செலவு விகிதம், புதிய ஃபண்ட் மேனேஜர் போன்றவையாகும். இந்த ஃபண்டின் மற்றும் இந்த ஃபண்ட் ஹவுஸின் நல்ல செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது இந்த நெகட்டிவ்கள் ஒரு பெரிய பொருட்டல்ல.

நீண்ட காலத் தேவைகளான ரிட்டையர்மென்ட், குழந்தைகள் கல்வி மற்றும் திருமணத்துக்காக சேமிப்பவர்கள் இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறையில் தாராளமாக முதலீடு செய்யலாம். சந்தை குறையும்போது மொத்த முதலீட்டையும் நாடிச் செல்லலாம். நல்ல செயல்பாட்டை கொண்ட இந்த ஃபண்டிற்கு நமது மதிப்பெண்கள் 80/100.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு