Published:Updated:

டீலிஸ்ட் பங்குகள்: வாங்கினால் சிக்கல்தான்!

எச்சரிக்கை

பிரீமியம் ஸ்டோரி
டீலிஸ்ட் பங்குகள்: வாங்கினால் சிக்கல்தான்!

பன்னாட்டு நிறுவனப் பங்குகளின் விலை அண்மைக் காலமாக கன்னாபின்னா என்று அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாத காலத்தில் சென்செக்ஸ் ஒரு சதவிகிதத்துக்கும் கீழே உயர்ந்துள்ள நிலையில், எம்.என்.சி. பங்குகளின் விலை 15-35% வரை அதிகரித்துள்ளது நம்ப முடியாத ஆச்சரியம்!

காரணம் என்ன?

டீலிஸ்ட் பங்குகள்: வாங்கினால் சிக்கல்தான்!

2013, ஜூன் மாதம் 3-ம் தேதிக்குள் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பொது மக்களின் பங்கு முதலீட்டை குறைந்தபட்சம் 25% ஆக அதிகரிக்க வேண்டும். அப்படி செய்யாத பங்குகளை பங்குச் சந்தையிலிருந்து டீலிஸ்ட் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசு.

அரசு சொல்கிற மாதிரி செய்தால், லாபத்தில் பெரும் பங்கு (டிவிடெண்ட்) முதலீட்டாளர்களுக்குத் தர வேண்டும். நிர்வாகத்தில் மாற்றம் செய்ய வேண்டும். இதைத் தவிர்க்க பல பன்னாட்டு நிறுவனங்கள் தாங்களாகவே பங்குச் சந்தையிலிருந்து விலகிவிடலாமா என்று யோசித்து வருகிறது. இப்போதைய நிலையில்,  அஸ்ட்ரஜெனிகா பார்மா, ஜில்லட் இந்தியா, ஹனிவெல் ஆட்டோ உள்ளிட்ட ஒரு டஜன் நிறுவனங்கள் பங்குகளை டீலிஸ்ட் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

##~##
இதுகுறித்து மும்பையின் முன்னணி அனலிஸ்ட் ஒருவருடன் பேசினோம். ''குறுகிய காலத்தில் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ள பல எம்.என்.சி. நிறுவனங்கள் அடிப்படையில் வலுவானதாகவோ அல்லது வளர்ச்சி வாய்ப்பு உள்ளதாகவோ இல்லை. இந்த பங்கை பலரும் விஷயம் தெரியாமலே வாங்குகிறார்கள். ஒருவேளை, அரசாங்கத்தின் முடிவை இன்னும்  கொஞ்ச காலம் தள்ளி வைத்தால், இந்த பங்கின் விலை ஏறிய வேகத்தில் இறங்கிவிடும்.

அல்லது இப்படியும் நடக்கலாம். பங்குகளை அதிக விலை தந்து டீலிஸ்ட் செய்வதைவிட,  தங்கள் பங்குகளை மக்களுக்கு விற்கவும் முன் வரலாம். அப்போது விலை குறைய வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாக்கிரதை'' என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் இன்டெர்நேஷனல் நிறுவனத்தில் புரமோட்டர் பங்கு மூலதனம் 81.24% உள்ளது. இந்நிறுவனம் அதன் பங்குகளை டீலிஸ்ட் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. இதன் தலைவர் டேவ் எம் கோதே, ''இந்திய அரசின் இம்முடிவால், இந்தியா, வெளிநாட்டு முதலீடுகளை இழக்கும் வாய்ப்பு ஏற்படும்'' என்று எச்சரித்துள்ளார்.  

பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனுடன் இதுபற்றி பேசினோம். ''விலை அதிகரித்துள்ள இந்த எம்.என்.சி. நிறுவனப் பங்குகளின் பி.இ. விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் இந்த பங்குகளின் மதிப்பீடு என்பது கவர்ச்சிகரமாக இல்லை.

டீலிஸ்ட் பங்குகள்: வாங்கினால் சிக்கல்தான்!

எந்த ஒரு பங்கும் அதன் செயல்பாட்டுக்கும் தொடர்பு இல்லாமல் ஏதாவது ஒரு செய்தி காரணமாக விலை ஏறினால் அந்த பங்குகளை விற்று 'பிராஃபிட் புக்’ செய்வதுதான் புத்திசாலித்தனமான காரியம்.

கடந்த இரு மாதங்களில் இந்த எம்.என்.சி. பங்குகளின் விலை சராசரியாக 20% அதிகரித்துள்ளது. அந்த வகையில் லாபத்தில் இருப்பவர்கள், பங்குகளை விற்று லாபம் பார்க்க இதுவே சரியான நேரம். இந்த பங்குகளை அந்நிறுவனங்கள் இன்னும் அதிக விலைக்கு வாங்கும் என காத்திருப்பதில் அர்த்தம் இல்லை.

உதாரணத்துக்கு, சான்ட்விட்ச் ஏசியா என்கிற நிறுவனம், 1998-ல் அதன் பங்குகளை 1,800 ரூபாய்க்கு பைபேக் செய்வதாக அறிவித்தது. இதைவிட அதிக விலை கிடைக்கும் என கொடுக்காமல் விட்டவர்கள் அதன்பிறகு, வெறும் 850 ரூபாய் அளவுக்கு விலை குறைந்தபோது தந்தார்கள். எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்..!'' என்றார்.

ஆழம் தெரியாமல் காலைவிடுவது ஆபத்து என முதலீட்டாளர்கள் புரிந்து கொண்டால் சரிதான்!

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு