Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இந்த வாரம் முழுக்க சந்தையின் சூழ்நிலைகள் சரி இல்லாததால் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் இருந்து எந்த பங்கும் வெளியே செல்லவில்லை. கிராம்ப்டன் கிரீவ்ஸ் பங்கு மேலேயும் செல்லாமல், கீழேயும் செல்லாமல் இருந்ததால் சராசரி செய்ய வேண்டிய விலையை மாற்றி சராசரி செய்ய சொல்லி இருந்தேன். நான் சராசரி செய்ய சொன்ன விலைக்கு அந்த பங்கு வந்தது. அதனை முதலீட்டாளர்கள் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அதே போல, கடந்த வாரத்தில் ராலிஸ் இந்தியா பங்கு சராசரி விலையை அடைய வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தோம். ஆனால், விலை இறங்காததால் அந்த பங்கினை சராசரி செய்திருக்க முடியாது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


இனி செய்ய வேண்டியது.

##~##
ஏற்கெனவே நமது போர்ட்ஃபோலியோவில் 18 பங்குகள் இருக்கிறது. எந்த பங்கும் லாபத்துடன் வெளியே செல்லும் சூழ்நிலை இல்லாததால், இந்த வாரம் புதிதாக எந்த பங்கினையும் வாங்க வேண்டாம்.

அதே சமயம், சில பங்குகள் சராசரி செய்ய வேண்டிய விலைக்கு அருகில் இருக்கிறது. அந்த விலை வந்தவுடன் பங்குகளை கவனமாக சராசரி செய்யவும். சந்தை சரிந்து நிறைய பங்குகள் சராசரி அடைந்தாலும் பிரச்னை இல்லை. இதற்காகவே நாம் காத்திருந்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள். சந்தை மீண்டும் உயரும்பட்சத்தில் நம்முடைய பங்குகள் மிக எளிதாக இலக்கு விலையை அடைந்துவிடும் என்பதால் எந்த பதற்றமும் வேண்டாம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


சந்தை என்ன ஆகும்?

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொடர்ந்து சரிந்து கொண்டே வந்த சந்தை 200 நாள் மூவிவ் ஆவரேஜ் புள்ளியான 5120 என்ற புள்ளியை உடைத்து கீழே சென்றிருக்கிறது. எனவே, சந்தை மேலும் சரியவே வாய்ப்பு இருக்கிறது. 5050 என்பது ஒரு முக்கியமான சப்போர்ட் நிலை. இதையும் உடைத்து கொண்டு கீழே செல்லும் பட்சத்தில் 4800 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. கடந்த வாரம் நான் சொன்னது போலவே மே மாதம் சந்தை இறங்கி வருகிறது. இது இன்னும் சரியவே செய்யலாம்.  

தற்போதைய நிலை!

தற்போதைய நிலையில் நமது போர்ட்ஃபோலியோ 11,000 ரூபாய் நஷ்டத்தில் இருக்கிறது. ஏற்கெனவே 13,350 ரூபாய் லாபம் சம்பாதித்திருப்பதால் மொத்தமாக 2,100 ரூபாய் லாபத்தில்தான் இருக்கிறோம். லாபம் குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படத் தேவை இல்லை. சந்தை உயரும்போது நமது லாபம் அதிகமாகும்.

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு