Published:Updated:

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

Published:Updated:
இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

ஜனவரி மாதம் 29-ம் தேதியிட்ட நாணயம் விகடன் இதழில் 'பங்குச் சந்தை மீண்டும் காளையின் பிடியில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், பங்குச் சந்தை ஆலோசகர் ஸ்ரீராம், 'கடந்த டிசம்பர் (2011) மாதம் 20-ம் தேதி நிஃப்டி சந்தித்த 4531 என்ற புள்ளிகள்தான் அடுத்த பத்தாண்டுகளுக்கு குறைந்தபட்ச புள்ளிகளாக இருக்கும்’ என்று சொல்லி இருந்தார்.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வர் சொன்னது போலவே அடுத்து வந்த மாதங்களில் சந்தை உயர்ந்துகொண்டே வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக சந்தையின் போக்கை பார்த்த வாசகர்கள் பலரும் மிகவும் கலவரமடைந்து இருக்கிறார்கள். சந்தை எங்கே போகிறது? இன்னும் எவ்வளவு தூரம் இறங்க வாய்ப்பு இருக்கிறது? என்று பல கேள்விகளை நம்மிடம் கேட்க, வாசகர்கள் கேட்ட கேள்விகளை நாம், நிபுணர் ஸ்ரீராமிடம்  கேட்டோம். சந்தையின் கடந்த கால வரலாறுகளை எடுத்துச் சொல்லி நமக்கு விளக்கம் தந்தார் அவர்.

''நான் சொன்ன கருத்தில் இப்போதும் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஏற்கெனவே சொன்ன 4531 என்ற புள்ளிகள் தான் அடுத்த பத்து வருடங் களுக்கான சந்தையின் குறைந்தபட்ச புள்ளியாக இருக்கும். ஆனால், இப்போது சந்தை இறங்கும் என்றும் அதற்கான காரணங்களையும் பலரும் பலவிதமாக அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இதுபோன்ற நெகட்டிவ் செய்திகள் ஒவ்வொரு காலத்திலும் சந்தையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

என்னைப் பொறுத்தவரை, சந்தை இப்போது டபுள் பாட்டம் என்ற நிலையை அடைய தயாராகிறது. இந்த டபுள் பாட்டம் தற்போதைய நிலையில்கூட முடிவடையலாம் அல்லது இன்னும் 100 புள்ளிகள் குறைந்து 4800 புள்ளிகளில் முடிவடையலாம்; 4600 புள்ளிகளில்கூட முடிவடைய லாம். பிறகு 4550 என்ற புள்ளியை அடைந்து மீண்டும் உயரத் தொடங்கலாம்.

சமயத்தில் ஏதாவது ஒரு நாளில் இன்ட்ரா டே-வில் 4531 என்ற புள்ளியை உடைத்து, முடியும்போது 4531 என்ற புள்ளியைவிட உயர்ந்து முடிவடையலாம். 2012-ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் சந்தை ஒரு சரிவை சந்தித்த பிறகு மேலே செல்லும் என்று நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதை நோக்கி தான் சந்தை இப்போது போய்க் கொண்டிருக்கிறது.

எல்லோரும் வரலாறை மறந்துவிடுகிறார்கள். 2003-ம் ஆண்டு குறைந்தபட்ச புள்ளி யில் இருந்து சந்தை உயர்ந்தது. அதேபோல 2009-ம் ஆண்டு மார்ச்சில் சந்தை குறைந்தபட்ச புள்ளியை சந்தித்து மீண்டும் உயர்ந்தது என்று சொல்வார் கள்.

ஆனால், இந்த இருமுறை யும் சந்தை சந்தித்தது குறைந்த பட்ச புள்ளிகளை அல்ல. 2001-ல் அமெரிக்காவில் குண்டு வெடித்தபோது சந்தித்ததுதான் குறைந்தபட்ச புள்ளி. அதேபோல் 2008-ம் ஆண்டு அக்டோபரில் சந்தை சந்தித்தது தான் குறைந்தபட்ச புள்ளி.

அதேபோல, கடந்த வருடம் 4531 என்ற குறைந்தபட்ச புள்ளியை சந்தை சந்தித்து விட்டது. அதனால் இன்னொரு முறை அந்த புள்ளியை உடைத்துக் கொண்டு கீழே செல்ல வாய்ப்பில்லை. இப்போது போலவே 2003-ம் ஆண்டும், 2009-ம் ஆண்டும் பல நெகட்டிவ் செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனாலும் சந்தை உயர்ந்தது.

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

அதுபோல, இப்போது சந்தையில் எண்ண முடியாத அளவுக்கு நெகட்டிவ் செய்திகள் இருக்கிறது. ஆனால், செய்திகள் எப்போதும் சந்தையைத் தீர்மானம் செய்யும் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் சந்தையின் போக்குக்கு ஏற்பவே செய்திகளும் வரும். இந்த முறையும் சந்தை உயரும்போது ஏதாவது ஒரு காரணம் வெளிப்படும்.

இப்போதைக்கு சந்தையின் மிகப் பெரிய நெகட்டிவ் செய்தி, இந்திய ரூபாயின் சரிவுதான். ரூபாய் இன்னும் சரிந்தாலும் அது ஒரு பிரச்னையே இல்லை. 1970-ம் ஆண்டுகளில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 ரூபாய்க்கு இருந்தது. எதிர்காலத்தில் நம் இந்தியப் பொருளாதாரம் நன்கு வளர்ந்து ஒரு டாலர் ஏழு ரூபாய் என்ற நிலையை அடைய வாய்ப்பிருக் கிறது. ஆனால், நம் ரூபாயின் மதிப்பு 60 ரூபாய் வரை சரிந்த பிறகே இது நடக்கும்.

இது நடக்குமா என்று சந்தேகப்படாதீர்கள். எந்த ஒரு பொருளும் சரிவுக்கு உட்பட்டவைதான். 90 சதவிகிதம் சரிவு என்பது எல்லாவற்றிலும் சாத்தியம்தான். அப்படிப்பட்ட சரிவு டாலருக்கும் வரலாம்.  அப்போது இந்திய ரூபாய் மதிப்பு ஏழு ரூபாய்க்கு வரும். ஆனால், அது உடனடியாக நடந்துவிடாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும்'' என்றவர், சந்தை பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!


ரிஸ்க் எடுப்பது எப்படி?  

இறக்கத்துக்குப் பிறகு ஏற்றம்!

பிஸினஸில் ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். அதற்காக கண்ணை மூடிக்கொண்டு ரிஸ்க் எடுக்கலாமா? டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் அற்புதமான ஆலோசனை சொல்கிறார்.

'ஊழியர்கள், கஸ்டமர் கள், பணம் ஆகிய மூன்றும் பிஸினஸ் முக்காலியின் மூன்று கால்கள். இவை மூன்றிலும் ஒரே சமயத்தில் ரிஸ்க் எடுக்கக்கூடாது. எடுத்தால், பிஸினஸ் தள்ளாடிவிடும். மற்ற இரண்டு அம்சங்களும் உறுதியாக இருந்தால், மூன்றாவது அம்சத்தில் ரிஸ்க் எடுங்கள். உதாரணமாக, உங்கள் கம்பெனிக்குத் திறமையான ஊழியர்களும், கஸ்டமர்களும் இருக்கிறார் களா? அப்படியானால், நீங்கள் பண விஷயத்தில் ரிஸ்க்  எடுக்கலாம்.'

- அத்வைத்

''சந்தையானது 4500க்கு மேலேயே நீண்ட காலம் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையை உடைத்துக் கொண்டு கீழே செல்ல பெரும்பாலும் வாய்ப்பில்லை. இப்படிச் சொல்வதால் நடக்கவே நடக்காது என்று அர்த்தமல்ல. நாம் ஏறும் விமானம் நாம் இறங்க நினைக்கிற ஊருக்கு 99% சென்றடையும் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, நூறு சதவிகிதம் விபத்தே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. அதுபோல, சந்தை 4500 (4531) புள்ளிகளுக்கு கீழே செல்ல 10 சதவிகித வாய்ப்பு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை அப்படி நடக்கும்பட்சத்தில் நிஃப்டி கூடுதலாக 1000 புள்ளி களுக்கு மேல் சரிய வாய்ப்பு உண்டு.

ஆனால், சார்ட் படியும், கடந்த கால வரலாறு படியும் சந்தை ஒரு டபுள் பாட்டம் என்ற நிலையை தொட முயற்சி செய்கிறது. அதை தொட்டபின் 2012-ம் ஆண்டில் இரண்டாம் பகுதியில் இந்திய சந்தையில் ஏற்றம் இருக்கும்'' என்று முடித்தார்.

ஸ்ரீராம் சொல்வது போல செய்திகள் சந்தையை தீர்மானிப்பதைவிட, சந்தை வரவிருக்கும் செய்திகளுகேற்ப முன்கூட்டியே செயல்படுகிறது. இனி சந்தை எப்படிச் செல்லும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism