Published:Updated:

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

Published:Updated:
ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலக அளவில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உருவானவைதான் இந்த இ.டி.எஃப். ஃபண்டுகள் (Exchange Traded Funds). ஆனால், இதற்குள் உலகம் முழுவதும் பரவிவிட்டது இந்த முதலீட்டுக் கருவி. அதிலும் அமெரிக்காவில் இந்த இ.டி.எஃப்.கள் படுபாப்புலர்.

ஃபண்ட் ரிசர்ச்!

ந்தியாவிலும் கடந்த சில வருடங்களாக பல வகையான இ.டி.எஃப்.கள் அறிமுகமாகி வருகின்றன. இவ்வளவு ஏன், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இ.டி.எஃப்.களை நிர்வகிப்பதையே தங்களது பிரதான தொழிலாக கொண்டுள்ளன.

பொதுவாக, ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளில் பங்குகள் தான் வர்த்தகமாகும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் வர்த்தகமானால் அதுதான் இ.டி.எஃப். இவை ஒரு குறியீட்டை அடிப்படையாக கொண்டவையாக இருக்கும். அந்த குறியீட்டில் எந்தப் பங்குகள் எந்த அளவில் உள்ளனவோ, அதே பங்குகள் அதே அளவில் இ.டி.எஃபிலும் இருக்கும். ஆகவே, அந்த அடிப்படை குறியீட்டின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, இ.டி.எஃப்-ன் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இ.டி.எஃபை உருவாக்குவது, நிர்வகிப்பது போன்ற வற்றை எல்லாம் இ.டி.எஃப்.பை ஸ்பான்ஸர் செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பார்த்துக் கொள்கிறது.

இ.டி.எஃப்.பினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். என்னென்ன நன்மைகள் என்று சொல்லவா?

##~##
1. பங்குச் சந்தையில் எந்த ஒரு பங்கையும் வாங்குவது விற்பது போல, இ.டி.எஃப்.பையும் எளிதாக வாங்கி விற்கலாம் - அதுவும் மிகக் குறைந்த கமிஷனில். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இதை நிர்வாகம் செய்ய எடுத்துக் கொள்ளும் தொகையும் மிக மிகக் குறைவு (low expense ratio).

2. சந்தையின் ரிஸ்க்கை மட்டும்தான் முதலீட்டாளர்கள் எடுக்கிறார்கள். சந்தையின் ஏற்றத் தாழ்வுகளைப் போலவே நமது லாப நஷ்டமும் இருக்கும்.

3. மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாளில் எப்போது முதலீடு செய்தாலும், அன்றைய முடிவில் தரப்படும் என்.ஏ.வி.தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், இ.டி.எஃப்.பை பொறுத்தவரை, பங்குகளைப் போல ஒரேநாளில் பல விலைகளில் வியாபாரம் செய்யலாம்.

4. அலுத்துக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு (passive investment) செய்ய விரும்புபவர்களுக்கு, இ.டி.எஃப்.கள் ஒரு வரப்பிரசாதம்தான். இத்தகைய முதலீடுகளை கவலை இல்லாத முதலீடுகள் (investment minus  worries) என்று கூறலாம்.

5. ஒருவர் சந்தையில் நுழைந்த வுடனே முதலீடு செய்ய விரும்பி னால், இ.டி.எஃப்.பைவிட வேறு சிறந்த முதலீடு எதுவும் இருக்க முடியாது.

6. பங்கு சார்ந்த இ.டி.எஃப்.களுக்கான வருமான வரி, பங்குகளைப் போலவே பாவிக்கப்படும். கடன் சார்ந்த இ.டி.எஃப்.களுக்கு, கடன் திட்டங்களைப் போல பாவிக்கப்படும்.

இப்படி பல நன்மைகள் இ.டி.எஃப்.பில் இருப்பதால், வளர்ந்த பொருளாதாரங்களில் பல வகையான இ.டி.எஃப். திட்டங்கள் வர்த்தகமாகின்றன. இவற்றுள் பங்கு சார்ந்தவை, வெளிநாட்டு குறியீடு சார்ந்தவை, கடன் சார்ந்தவை, துறை சார்ந்தவை, கமாடிட்டி சார்ந்தவை (தங்கம் உட்பட பல உலோகம் சார்ந்தவை, கச்சா எண்ணெய் சார்ந்தவை, விவசாயப் பொருட்கள் சார்ந்தவை என பலப்பல), கரன்சி சார்ந்தவை என பலவாறாக உள்ளன.

ஃபண்ட் ரிசர்ச்!

இதெல்லாம் போதாது என்று தற்போது தலைகீழ் இ.டி.எஃப். என்கிற புதிய திட்டமும் வந்திருக்கிறது. இதன்படி, எந்தப் பொருளை அடிப்படையாக கொண்டு அந்த இ.டி.எஃப். உள்ளதோ, அந்தப் பொருளின் விலை சரியும்போது, அந்த இ.டி.எஃபின் மதிப்பு ஏறும்; பொருளின் விலை ஏறும்போது, இந்த இ.டி.எஃப்.பின் மதிப்பு குறையும்.

நம் நாட்டில் பெரும்பாலான இ.டி.எஃப்.கள் பங்குக் குறியீடு சார்ந்தவை. கடன் சார்ந்த இ.டி.எஃப்.களும் ஒன்றிரண்டு உள்ளன. வெளிநாட்டு பங்குக் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் இ.டி.எஃப்.கள் உள்ளன. ஆனால், தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட இ.டி.எஃப். திட்டங்களை பல நிறுவனங்கள் அளிக்கின்றன. துறை சார்ந்த இ.டி.எஃப்.களும் ஒன்றிரண்டு உள்ளன.

நமது நாட்டில் மிகவும் பாப்புலராக இருக்கும் இ.டி.எஃப்.கள் பற்றி சற்று சுருக்கமாகவும், புதிதாக அறிமுகமாகியுள்ள இ.டி.எஃப்.கள் பற்றி சற்று விரிவாகவும் பார்ப்போம். தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 32 இ.டி.எஃப்.கள் வர்த்தகமாகின்றன. அவற்றின் பட்டியலை அட்டவணையாக தந்திருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்.

தங்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் அனைத்து இ.டி.எஃப்.களின் வருமானமும் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு அமையும். தங்கம் சார்ந்த இ.டி.எஃப்.களில் முதலீடு செய்யும்போது அதிகமான யூனிட்டுகள் வர்த்தகமாகும் நிறுவன இ.டி.எஃபை முதலீட்டாளர்கள் வாங்கலாம்.

அந்த வகையில் கோல்டுமேன் சாக்ஸ் நிர்வகிக்கும் கோல்டுபீஸ், இந்தியாவில் இருக்கும் கோல்டு இ.டி.எஃப்-களிலேயே அதிகமான எண்ணிக்கையில் வர்த்தகமாகிறது. அரை கிராம் தங்கத்திற்குச் சமமாக வாங்க நினைப்பவர்கள் குவான்டம் கோல்டு இ.டி.எஃபை வாங்கலாம்.

நிஃப்டி 50 குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஏழு இ.டி.எஃப்.களும், அக்குறியீட்டில் இருக்கும் பங்குகளில், குறியீட்டில் உள்ள சதவிகிதத்திலேயே முதலீடு செய்கின்றன. இந்த வகையில் மிகவும் பாப்புலர், கோல்டுமேன் மியூச்சுவல் ஃபண்ட் நடத்தும் நிஃப்டி பீஸ் ஆகும். சந்தையில் இருக்கும் பிற இ.டி.எஃப்-கள்: கோட்டக் நிஃப்டி, க்யூநிஃப்டி, எம்50, பி.எஸ்.எல். நிஃப்டி, ஐ.ஐ.எஃப்.எல். நிஃப்டி, ரெலிகர் நிஃப்டி.

எம்100: இது சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இ.டி.எஃப். ஆகும். ஜனவரி 2011-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் மோத்திலால் ஆஸ்வால் நிறுவனத்தால் நடத்தப்பட்டு தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகிறது. இந்த குறியீடு டாப் 100 மிட்கேப் பங்குகளின் சங்கமம் ஆகும். அலகாபாத் பேங்க், என்.ஹெச்.பி.சி., ஏ.பி.பி., ஆந்திரா பேங்க், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், டாடா கெமிக்கல்ஸ், பெட்ரோனெட், வோல்டாஸ் போன்ற தரமான 100 மிட்கேப் பங்குகளை கொண்டுள்ளது.

இந்த இ.டி.எஃப்., மிட்கேப் குறியீட்டின் 1/1000 மதிப்பில் வர்த்தகமாகும். உதாரணத்திற்கு, மிட்கேப் குறியீடு 7000 என்றால், இந்த இ.டி.எஃப் ரூ.7-ற்கு வர்த்தகமாகும். மிட்கேப் பங்குகளை பொறுக்க கடினமாக உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். சி.என்.எக்ஸ். மிட்கேப் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒரு இ.டி.எஃப்.தான் சமீபத்தில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஃபண்ட் ரூ.79 கோடி தொகையை நிர்வாகம் செய்து வருகிறது.

ஃபண்ட் ரிசர்ச்!

ஹேங்செங் பீஸ்: மார்ச் 2010-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இ.டி.எஃப். ஹாங்காங் பங்குச் சந்தைக் குறியீடான ஹேங்செங் குறியீட்டில் முதலீடு செய்கிறது. கோல்டுமேன் சாக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்திவரும் இந்த ஃபண்டில் ரூ.26 கோடி தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் விலை ஹேங்செங் குறியீட்டின் மதிப்பில் 1/100-ஆக இருக்கிறது.

இந்த  ஃபண்டின் டாப் முதலீடு ஹெச்.எஸ்.பி.சி. ஹோல்டிங்ஸ், சைனா மொபைல், சைனா கன்ஸ்ட்ரக்ஷன் பேங்க், சி.என்.ஓ.ஓ.சி. போன்ற நிறுவனங் கள் ஆகும். இந்த குறியீட்டின் டிவிடெண்ட் யீல்ட் மற்றும் பி/இ விகிதம் முறையே 3.46% மற்றும் 10.5 ஆகும். சீனச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு இந்த ஃபண்ட் ஒரு நல்ல உபகரண மாகும். இந்த ஃபண்டின் செலவு விகிதம் 1% ஆகும்.

நாஸ்டாக் 100: மோத்திலால் ஆஸ்வால் நிர்வகித்து வரும் இந்த ஃபண்ட் அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையின், நாஸ்டாக் 100 குறியீட்டினை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு  வருகிறது. நாஸ்டாக் 100 குறியீட்டில், அச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 100 மிகப் பெரிய நிதித் துறை சாராத நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் குறியீட்டில் கூகுள், ஆப்பிள், இன்டெல், மைக்ரோசாஃப்ட், டெல், யாகூ, ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

இந்தியாவில் இருந்து கொண்டே அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு அரிய ஃபண்ட். வெளிநாட்டு பங்குகளை அடிப்படையாக கொண்ட ஃபண்டுகளுக்கு, கடன் சார்ந்த முதலீடுகளுக்கு உண்டான வருமான வரி அப்ளை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷரியாபீஸ்: நிஃப்டி ஷரியா குறியீட்டினை அடிப்படை யாகக் கொண்டு இந்த ஃபண்ட் நடந்து வருகிறது. ஷரியா குறியீட்டின் 1/10 மதிப்பில் இந்த ஃபண்ட் வர்த்தகமாகும். ஒரு கோடிக்கும் சற்று குறைவான தொகையை நிர்வகித்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், இன்போஃசிஸ், டி.சி.எஸ்., ஓ.என்.ஜி.சி., ஹிந்துஸ்தான் யூனிலீவர் போன்ற நிறுவனங் கள் இந்த ஃபண்டின் டாப் முதலீடுகளாக உள்ளன. ஷரியா முறையில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல ஃபண்டாகும்.

இவை தவிர, நிஃப்டி இன்ப்ஃரா குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இன்ப்ஃராபீஸ், ஜூனியர் நிஃப்டி குறியீட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஜூனியர்பீஸ், பேங்க் நிஃப்டி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் பேங்க்பீஸ் மற்றும் ரெல்பேங்க் (Relbank), பொதுத் துறை வங்கி குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் கோட்டக் பி.எஸ்.யூ. பி.கே. மற்றும் பி.எஸ்.யூ. பேங்க்பீஸ் போன்ற ஃபண்டுகளும் முதலீட்டாளர்கள் தேவைக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன.

இ.டி.எஃப்-களை பங்குச் சந்தை மூலம் வாங்குவதால் டீமேட் கணக்கு அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism