Published:Updated:

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டெக்னிக்கல் அனாலிசிஸ்

Published:Updated:
நீங்களும் அனலிஸ்ட்தான்!
நீங்களும் அனலிஸ்ட்தான்!

கொஞ்ச நாளாக நாம் பல அட்வான்ஸ்டு டெக்னிக்குகளையே பார்த்து வருகிறோம். எனவே, இந்த வாரம் கொஞ்சம் சிம்பிளான ஒரு டெக்னிக்கைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்களும் அனலிஸ்ட்தான்!

டிரேடர்கள் அனைவரும் தினமும் தெரிந்து கொள்ள ஆசைப்படுவது என்ன? பிவோட் பாயின்ட் எனும் ஒரு நாளின் விலையின் போக்கைப் பற்றிய எதிர்பார்ப்புதான் அது. பிவோட் பாயின்ட்கள் சந்தை எத்திசையில் போகிறது என்பதை ஓரளவுக்கு உறுதி செய்யவும், சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.

பிவோட் பாயின்ட்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் ஓப்பன், ஹை, லோ, குளோஸை வைத்துக் கொண்டு எதிர்வரும் காலத்தில் எப்படி விலை மூவ்கள் (சப்போர்ட்/        ரெசிஸ்டன்ஸ்கள்) இருக்கலாம் என்று கணிப்பதாகும்.

பிவோட் பாயின்ட் என்பது ஒரு நிமிடம், ஐந்து நிமிடம், ஒரு மணி நேரம், மூன்று மணி நேரம் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என எந்த மாதிரியானதாகவும் இருக்கலாம்.

இந்த பிவோட் பாயின்ட் என்ற விஷயத்தை முதலில் ஃப்ளோர் டிரேடிங்கில் ஈடுபட்ட வர்கள்தான் கண்டுபிடித்தனர். ஃப்ளோர் டிரேடிங் என்பது மனிதர்கள் கூடி சத்தமிட்டு ஷேர்களை வாங்கி விற்பது. டிரேடிங் நடக்கும் இடத்துக்குள் செல்லும்முன்னர் நேற்றைய ஓப்பன் ஹை, லோ மற்றும் குளோஸிங் விலையை வைத்து ஒரு பிவோட் பாயின்டை கணக்கிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது.

இது ஒருவிதமான கைடென்ஸிற்கு அவர்களுக்கு உதவியது. பிவோட் பாயின்டை ஒரு லெவலாக வைத்துக் கொண்டு, சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல்களை கணக்கிட்டு அவற்றை எல்லையாக வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்தார்கள் அந்த காலத்தில்.

இன்றைக்கு கணினிமயமான டிரேடிங்கிலும் கூட பிவோட் பாயின்ட்களை வைத்து சப்போர்ட்-1, சப்போர்ட்-2, ரெசிஸ்டன்ஸ்-1, ரெசிஸ்டன்ஸ்-2 என்று கீழேயும் மேலேயும் இரண்டு லெவல்களை கண்டுபிடித்து வைத்து கொண்டுதான் பெரும்பான்மையானவர்கள் டிரேட் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

1, 5, 10, மற்றும் 15 நிமிட சார்ட்டிற்கான பிவோட் பாயின்ட்கள் கணக்கீடு ஏற்கெனவே சொன்னது போல் முந்தைய நாள் ஹை, லோ மற்றும் குளோஸிங்கை உபயோகப்படுத்தி வரையறுக்கப் படுவதாகும். 30 மற்றும் 60 நிமிட சார்ட்டிற்கான பிவோட் பாயின்ட்கள் முந்தைய வாரத்தின் ஹை, லோ மற்றும் குளோஸை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்.

வாரம் என்பது திங்களன்று ஆரம்பித்து சனிக்கிழமை முடியும் காலண்டர் வாரம். ஒருமுறை கணக்கிடப்பட்டுவிட்டால் பின்னர் நாள் முழுவதற்கும் இதில் எந்த மாற்றமும் வர வாய்ப்பில்லை. ஒரு வாரம் ஆரம்பிக்கப்படும்போது ஃபிக்ஸ் செய்யப்படும் இந்த 30 மற்றும் 60 நிமிடத்திற்கான பிவோட் பாயின்ட்கள் வாரம் முடியும் வரை எந்த மாறுதலையும் காண்பதில்லை. இந்த வாரத்தில் நடந்த ஹை, லோ மற்றும் குளோஸிங் விலையைக் கொண்டு அடுத்த வாரத்திற்கான 30 மற்றும் 60 நிமிடங்களுக்கான பிவோட் பாயின்ட்கள் கணக்கிடப்படும்.

நீங்களும் அனலிஸ்ட்தான்!
##~##
இப்படி வாரா வாரம் தொடர்ந்து கணக்கீடுகள் போய்க் கொண்டேயிருக்கும். வாராந்திர மற்றும் மாதாந்திர பிவோட் பாயின்ட்களை கணக்கிட சென்ற வருடத்தின் விலைகள் எடுத்துக் கொள்ளப் படுகிறது.

பிவோட் பாயின்ட்களில் பல வகையுள்ளது. ஸ்டாண்டர்ட், டிமார்க், ஃபிபோனோகி பிவோட் பாயின்ட் போன்றவை பாப்புலரானவை.

ஸ்டாண்டர்ட் பிவோட் பாயின்ட் கணக்கிடுவது எப்படி?

இந்த வகை பிவோட் பாயின்ட் ஹை, லோ மற்றும் குளோஸ்-ன் சிம்பிள் ஆவரேஜை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒரு சார்ட்டில் பிவோட் பாயின்ட் நீல நிற தொடர் கோட்டில் காண்பிக்கப்படுகிறது.சப்போர்ட்களும் ரெசிஸ்டன்ஸ் களும் புள்ளிகளால் அமைந்த கோடாக காண்பிக்கப் படுகிறது.

பொதுவாக பிவோட் பாயின்ட் என்பது விலைகள் எப்படிப் போகும் என்பதை அறிய உதவியாக இருக்கும் ஒரு இண்டிகேட்டர். முன்பக்கத்தில் தரப்பட்டுள்ள  சார்ட்டில் (பி) என தொடர் கோட்டில் காட்டப்பட்டுள்ளது நிஃப்டியின் 11-05-12 தேதியைக் கொண்டு கணக்கிடப்பட்ட பிவோட் லைன். பிவோட் பாயின்ட் என்பது முந்தைய விலைகளிலிருந்து கணக்கிடப் படுவதால் இன்றைய விலை மூவ்மென்ட்களுக்கு அது முக்கியமானதொரு அடிப்படை யாக கொள்ளப்படுகிறது.

நீங்களும் அனலிஸ்ட்தான்!

பிவோட் பாயின்ட்டிற்கு மேலே விலை போனால், அது பாசிட்டிவ் மூவ் என எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த பாசிட்டிவ் மூவ் ரெசிஸ்டன்ஸ்-1 (ஆர்-1) வரை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாசிட்டிவ் மூவ் ஆர்-1-ஐ தாண்டிச் செல்ல ஆரம்பித்தால் ஆர்-2 (ரெசிஸ்டன்ஸ்-2) வரை செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதேபோல் பிவோட் பாயின்ட்டிற்கு கீழே போக ஆரம்பித்தால் முதலில் சப்போர்ட்-1 (எஸ்-1) வரை போகலாம் என்றும், எஸ்-1-ஐத் தாண்டி இறங்கினால் எஸ்-2 வரையும் போகலாம் என்றும் எதிர்பார்க்கலாம்.

பொதுவாக, சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ்கள் சொல்லும் செய்திகள் இரண்டு. ஒன்று, விலை இறங்க ஆரம்பித்து சப்போர்ட் அருகே வந்தபின்னர் இறக்கம் நின்று தொடர்ந்து அதே லெவலிலேயே ஸ்ட்ராங்காக நின்றுவிட்டால் மீண்டும் அந்த லெவலை நோக்கி இறங்கிவரும் போதெல்லாம் நல்லதொரு மீட்சியை எதிர்பார்க்கலாம்.

அதேபோல் விலை ஏற ஆரம்பித்து ரெசிஸ்டன்ஸின் அருகே வந்து, அந்த லெவலில் முட்டி நின்று பின்னர் இறங்க ஆரம்பித்தால் மீண்டும் ஏறிவரும்போது அதே லெவலை வந்தடையும் போது மறுபடியும் இறங்க பெரியதொரு வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கலாம்.

இதுபோல சப்போர்ட்டை யும் ரெசிஸ்டன்ஸையும் தாண்ட முடியாமல் அங்கிருந்து ஏறவும்/இறங்கவும் செய்கிறதா என்பதைத்தான் டிரேடர்கள் கண்கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறார் கள். செல்லும் திசைக்கேற்ப ஷார்ட்டோ, லாங்கோ போய் வியாபாரம் செய்ய முயற்சிக்கலாம்.

அது மட்டுமல்லாமல் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல்களைத் தாண்டி வேகமாகச் செல்லும் போது சந்தை ஓவர் பாட் மற்றும் ஓவர் சோல்டாக மாறிவிட்டது என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

சில சமயங்களில் சந்தை இந்த பிவோட் பாயின்டையோ, சப்போர்ட்டையோ அல்லது சிஸ்டன்ஸையோ தாண்டி ஓப்பனாகிவிடலாம். அந்தச் சூழ்நிலைகளில் விலை நிலையாகி  பிவோட் பாயின்ட் எல்லைகளுக்குள் வரும்போதே சப்போர்ட்/ரெசிஸ்டன்ஸ் என்பது ஒர்க் அவுட் ஆகும்.

(வளரும்)

நீங்களும் அனலிஸ்ட்தான்!


மாத்தி யோசிச்சா... பிஸினஸ்!    

மெக்ஸிகோவில் சிமென்ட் தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி. ஆளுக்கு ஆள் விலை குறைத்தார்கள். பலன்? எல்லா கம்பெனிகளுக்குமே பயங்கர நஷ்டம் வந்தது.  

சிமெக்ஸ் (Cemex) என்னும் கம்பெனி இந்தப் பிரச்னைக்கு வித்தியாசமாகத் தீர்வு கண்டது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்கள் வீடுகள் வாங்கத் தயங்குகிறார்கள் என்கிற உண்மையை முதலில் கண்டுபிடித்தது. இவர்கள் வீடுகள் கட்டினால்... அதற்கான சிமென்டை, சிமெக்ஸ் சப்ளை செய்ய முடிந்தால்... விற்பனையை அதிகமாக்கலாம் என்று திட்டமிட்டார்கள்.

உடனே களத்தில் இறங்கி சிமெக்ஸ் கம்பெனியில் தனி டிபார்ட்மென்ட் தொடங்கியது. அடிமட்ட, நடுத்தரக் குடும்பங்களுக்கு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கிக் கொடுப்பது, வீட்டு டிசைன் ஆகிய சேவைகளை இந்த டிபார்ட்மென்ட் நியாயமான விலையில் வழங்கியது.

ஏராளமான மக்கள் வீடுகள் கட்டத் தொடங்கினார்கள். சிமெக்ஸின் சிமென்ட் அமோகமாக விற்பனையானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

- அத்வைத்

நீங்களும் அனலிஸ்ட்தான்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism