Published:Updated:

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

Published:Updated:
கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

இந்த வாரம் நாம் அலசும் தெர்மேக்ஸ் நிறுவனம் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தொழிலில் இருக்கும் நிறுவனம். இந்த இரண்டுமே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாயிற்றே என்கிறீர்களா?  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நி
ச்சயமாக மிக மிக முக்கியமானவையே! 1966-ல் வான்சன் இந்தியா என்ற பெயரில் புனேயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனி 1973-ல் தன்னுடைய முதல் ஏற்றுமதியை அப்போதைய சோவியத் ரஷ்யாவிற்கு செய்து பெருமிதம் கொண்டது. பெரும் தொழிற்சாலைகளில் வெப்பத்தை அதிகரிக்கவோ, குறைத்து குளிர்விக்கவோ வேண்டுமா? மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? காற்று மாசுபடுவதைத் தடுக்க, தண்ணீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிக்க வேண்டுமானால் தெர்மேக்ஸ் தான் என்று சொல்லுமளவுக்கு முன்னணியில் இருப்பது இந்நிறுவனம்.

தொழில் எப்படி?

இந்நிறுவனம் செய்து வருவது பவர் மற்றும் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுகளை வெளிக்கொண்டுவரும் தொழில்களைத்தான். இதன் தொழில்கள் எல்லாமே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானவை. எனவே, பொருளாதார வளர்ச்சி ஜிடிபி அளவில் 8 சதவிகிதமாக இருக்கும்போது தெர்மேக்ஸ் சம்பந்தப்பட்ட தொழில்களில் முதலீடுகள் கணிசமாக அதிகரிக்கலாம்.

அதிலும், வெப்பத்தை அதிகரிக்கச் செய்யத் தேவை யான கொதிகலன்கள்  மற்றும் வெப்பத்தைக் குறைக்க உதவும் சில்லர்கள் என்ற இரண்டுமே எல்லா பெரிய தொழிற்சாலைகளுக்கும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் நிச்சயமாகத் தேவைப்படுபவை. இந்த பாய்லர் மற்றும் சில்லர் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக தெர்மேக்ஸ் செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 50% பாய்லர் மற்றும் சில்லர்கள் விற்பனையால் வருவது. பொருளாதார மந்தநிலை மாறி, தொழில் நிறுவனங்கள் புதிய வளர்ச்சிக்கான முதலீடுகளைச் செய்யும்போது நிச்சயமாக தெர்மேக்ஸிற்குப் பெருமளவில் இதனால் பலன் கிடைக்கலாம்.

கம்பெனி எப்படி?

ஏற்கெனவே சொன்னபடி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரு துறைகளில் மட்டுமே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எரிசக்தி பிரிவில் இரண்டு உட்பிரிவுகள் உண்டு. முதலாவது, ஒரு புராஜெக்ட்டை செய்து தருவது. இரண்டாவது, தொழிற்சாலைகளுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட புராடக்ட்டை உற்பத்தி செய்து தருவது. தெர்மேக்ஸ், புராஜெக்ட்ஸ் பிரிவில் பெரிய கொதிகலன்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள் நிறுவுதல், மாற்று எரிசக்திக்கான இயந்திர சாதனங்கள் போன்றவற்றில் முன்னணி பங்கை வகிக்கிறது.

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

புராடக்ட்ஸ் பிரிவில் சிறிய பாய்லர்கள், சில்லர்கள், மாற்று எரிசக்தி பிளான்ட்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சுற்றுச்சூழல் தொழிலில் மாசுக்கட்டுப்பாட்டுக்கான இயந்திரங்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள், ரசாயனங்கள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

புனேயில் தலைமை யகத்தினையும் உலகளாவிய அளவில் 19 நாடுகளில் அலுவலகங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம். கிட்டத்தட்ட 75 நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. புனேவில் பாய்லர்கள் மற்றும் சில்லர்கள் தயாரிப்பு, சாவ்லியில் பாய்லர் கள் மற்றும் ஹீட்டர்கள் தயாரிப்பு, முந்த்ராவில் ஏற்றுமதிக்கான தயாரிப்புகளை ஒன்று சேர்க்கும் பிளான்ட், சீனாவில் ஒரு தொழிற்சாலை என இயங்கும் நிறுவனம் இது.

தொழில்நுட்பம் நிறைய தேவைப்படும் தொழில் என்பதால், கம்பெனிக்குள் இருக்கும் ஆராய்ச்சி வசதி களையும் தவிர்த்து, பல்வேறு விதமான அயல்நாட்டு முன்னணி நிறுவனங்களின்  தொழில் நுட்பங்களைப் பெற்று வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வருகிறது தெர்மேக்ஸ்.

நான்கு முதல் முப்பது மெகாவாட் வரையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கான கொதிகலன்கள் மற்றும் ஹீட்டர்கள் தயாரிப்புக்கு உதவும் தொழில் நுட்பத்துக்காக ஜெர்மனி நிறுவனமான லாம்பியன் எனர்ஜி சொல்யூஷனுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாப்காக் மற்றும் வில்காக்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து 300 மெகாவாட் மின் உற்பத்திக்கு உதவும் இயந்திரத் தயாரிப்புக்கான தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டுள்ளது. எஸ்.பி.எக்ஸ். என்ற நெதர்லாந்து நிறுவனத்துடன் சேர்ந்து 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களில் மாசுக்கட்டுப்பாட்டுக்கான தொழில் நுணுக்கங்களை பெற்று வருகிறது.

கம்பெனி அலசல் - தெர்மேக்ஸ்!

ஜி.இ. வாட்டர் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் சேர்ந்துள்ளபடியால் கழிவுநீரை பதப்படுத்தும் தொழில்நுட்பம் தெர்மேக்ஸிற்குக் கிடைக்கிறது. மிகவும் கடினமான தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றும் தொழில்களான பல்க் ட்ரக்ஸ், சாயங்கள், கெமிக்கல்கள், காகிதக் கூழ் தயாரிக்கும் கம்பெனிகள், சாராய ஆலைகள் போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை வடிகட்டி சுத்தப்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக வெர்லே உம்வெல்ட் என்ற ஜெர்மானிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. 300 மெகாவாட்டிற்கு அதிகமான மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசுக்களை சுத்தம் செய்வதற்கான தொழில் நுட்பத்தைப் பெறுவதற்காக பேக்லே-டர் என்ற ஜெர்மன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

காகித நிறுவனங்களுக்கு இன்றியமையாத சில ரசாயனங் களைத் தயாரிப்பதற்காக அமெரிக்க நிறுவனமான ஜியார்ஜியா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து லைசென்ஸ் பெற்றுள்ளது. தன்ஸ்டோக்கர் என்ற ஜெர்மானிய கம்பெனியை வாங்கிப் போட்டதால் ஜெர்மன், ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளில் தெர்மேக்ஸால்  கால்பதிக்க முடியும் எனலாம்.

ரிஸ்க் ஏதும் உண்டா?

பொருளாதாரத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும் சைக்ளிக்கல் என்றழைக்கப் படும் தொழிலில் உள்ள கம்பெனிகள் எல்லாமே அதிக ரிஸ்க் உள்ளவைதான். தவறான சமயத்தில் அதிக விலையில் முதலீடு செய்துவிட்டால் லாபம் பார்ப்பது மிகவும் கடினமாகிவிடும்.

தெர்மேக்ஸ் இந்த வகை கம்பெனிகளில் ஒன்றுதான். இருப்பினும் தொழில் நுட்பத் திறன் அதிகம் தேவைப் படுகிற மற்றும் போட்டிகள் குறைவான சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தொழில்களிலும் நல்ல நிலையில் தெர்மேக்ஸ் வியாபாரம் செய்து வருவதால், பொதுவாக சைக்ளிக்கல் கம்பெனிகளில் இருப்பதைப் போன்ற அதிகமான ரிஸ்க் இந்த கம்பெனியில் இல்லை.

மேலும், இந்நிறுவனம் முக்கியமாக நினைப்பது புராடக்ட் ஆர்டர்களைத்தானே தவிர, புராஜெக்ட் ஆர்டர்களை அல்ல. எனவே, இந்த அளவீட்டிலும் ரிஸ்க் குறைவே. இதுபோன்ற சைக்ளிக்கல் ரிஸ்க் இருக்கும் தொழில்களில் முதலீடு செய்கிறபோது நிர்வாகத்தின் திறனையும் பார்க்க வேண்டும். அந்த வகையில் சிறந்த நிர்வாகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனப் பங்கினை வாங்கலாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism