
கடந்த இதழில் நான் சொன்னது போலவே இந்த வாரம் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தது. செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களை தவிர மீதம் மூன்று நாட்களும் சந்தை கடுமையாக இறங்கியது. சந்தை சரிந்ததன் காரணமாக எந்த ஒரு பங்கும் நமது போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியேறவில்லை. ஆனால், கிராம்ப்டன் கிரீவ்ஸ், நெய்வேலி லிக்னைட், ஆதித்யா பிர்லா நுவா மற்றும் ஜைடஸ் வெல்னஸ் ஆகிய நான்கு பங்குகளை இந்த வாரம் நாம் சராசரி செய்திருக்கிறோம்.
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூபாய் சரிவு, ஐரோப்பிய பிரச்னை ஆகியவற்றை பார்க்கும்போது, அடுத்த சில நாட்களுக்கு சரிவு இருக்கும் என்றே தோன்றுகிறது. மேலும், சந்தை 200 வார மூவிங் ஆவரேஜ் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. அதனால், சந்தையில் சரிவு வரவே அதிக வாய்ப்பிருக்கிறது. அப்படி சரிவு வரும்போது சராசரி செய்ய வேண்டிய பங்குகளை சராசரி செய்யத் தவற வேண்டாம். இது முதலீடு செய்வதற்கான நேரம் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.


நமது இரண்டு லட்ச ரூபாய் போர்ட்ஃபோலியோவில் ஒரு லட்ச ரூபாயை நெருங்கி விட்டோம். வரும் வாரத்தில் இன்னும் அதிக தொகையை முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வோம்.
முதலீடு செய்ய வேண்டிய நேரத்தில் முதலீடு செய்து விட்டால், பிறகு சந்தையில் ஏற்றம் வரும்போது நமது பங்குகள் மிக வேகமாக லாபத்துடன் வெளியேறும். மீண்டும் சொல்கிறேன், தற்காலிக இறக்கத்தை மறந்துவிட்டு, இது முதலீடு செய்வதற்கான நேரம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
தொகுப்பு: வா.கார்த்திகேயன்
