
இந்த வார டார்கெட் 4700 என்பது ஒரு கன்ஸர்வேட்டிவ் எதிர்பார்ப்பு என்றும், அவ்வப்போது மைனர் ரெக்கவரி வரலாமே தவிர, பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பதற்கில்லை என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்றையச் சூழ்நிலையில் 4705 என்ற லெவலைத் தாண்டி கீழே போனால் 4550 என்ற லெவல்கள் நிச்சயமாக சாத்தியமே என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நிஃப்டி 5050-க்கு மேலே வால்யூமுடன் குளோஸாகாத வரை டிரெண்ட் தற்காலிகமாககூட மாற வாய்ப்பில்லை. மிகவும் நிதானமாகவும், ஒவ்வொரு இறக்கத்திற்கும் சிறியதொரு டெக்னிக்கல் ரெக்கவரியைக் காண்பித்தும் இறங்குவதால் கொஞ்சம் சீரியஸான இறங்குமுகத்திலேயே நிஃப்டி இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.
இப்போதைக்கு உதவும் டெக்னிக் எது என்று பார்த் தால் வேகமான இறக்கத்தைச் சந்திக்கும் நாளன்று ஓவர் சோல்டாக மாறும் ஸ்டாக்கு களை சிறிதளவு வாங்கி விற்றும், வேகமான ரிவர்ஸல்கள் வரும் நாளன்று ஓவர்பாட்டாக மாறும் ஷேர்களை விற்று வாங்கியும் மட்டுமே வியாபாரம் செய்வதாகவே இருக்கும். ஓவர்நைட் பொசிஷன்களை மொத்தமாக மறந்துவிடுவது நல்லது.

