Published:Updated:

மீண்டும் என்ட்ரி லோட்?!

மீண்டும் என்ட்ரி லோட்?!

மீண்டும் என்ட்ரி லோட்?!

மீண்டும் என்ட்ரி லோட்?!

Published:Updated:
மீண்டும் என்ட்ரி லோட்?!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் தவிக்கிற மாதிரி, என்ன செய்தால் இந்த மியூச்சுவல் ஃபண்ட் துறை சீரடையும் என்று தெரியாமல் தவிக்கிறது செபி. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கையாளும் மதிப்பு மார்ச் 2010-ல் 7.48 லட்சம் கோடியிலிருந்து மார்ச் 31.2012-ல் 5.87 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் 8 லட்சம் ஃபோலியோக்கள் குறைந்துள்ளன. முதலீட்டாளர்கள் அபிமானத்தையும் ஆதரவையும் பெற என்ன செய்யலாம் என்று யோசிக்கிறது செபி.

மீண்டும் என்ட்ரி லோட்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பேசாமல் மீண்டும் நுழைவு கட்டணத்தை (என்ட்ரி லோட்) கொண்டு வரலாமா? என்று யோசித்து வருகிறது செபி. இதுகுறித்து ஃபண்ட்ஸ் இந்தியாவின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் பேசினோம்.

''நுழைவு கட்டணத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதினால் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிக முதலீடுகள் வரும் என்று நான் நினைக்கவில்லை.  மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இருக்கும் பிரச்னைகளுக்கு நுழைவு கட்டணம் மட்டுமே காரணமல்ல.

2009, ஆகஸ்ட் மாதத்தில் நுழைவு கட்டணம் நிறுத்தப் பட்டது. ஆனால், அதற்கு முன்பிருந்தே சந்தையின் நிலைமை சரியில்லை. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச் சந்தையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால் மியூச்சுவல் ஃபண்டில் செய்யும் முதலீடு குறைந்துள்ளது.

மேலும், ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு கணிசமான வட்டி கிடைப்பது, தங்கம், ரியல் எஸ்டேட்டில் நல்ல வருமானம் கிடைத்திருப்பது போன்ற பல காரணங்களால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறைந்திருக்கிறது.

தவிர, இந்த வருடமே புதிய நேரடி வரிவிதிப்பு முறை கொண்டு வரப்படும் என்று சொன்னார்கள். இப்போது அதை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். (புதிய நேரடி வரி விதிப்பு முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துக்கு வரிவிலக்கு கிடையாது.) இது எப்போது அமலுக்கு வரும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

##~##
இதுபோன்ற பல காரணங்களால் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது குறைந்திருக்கிறது.

இப்போது மீண்டும் நுழைவு கட்டணத்தை கொண்டு வந்தால் சந்தையில் குழப்பங்களே உருவாகும்.  கே.ஒய்.சி. படிவத்தை எளிமையாக்குவது உள்ளிட்ட வேறு நடவடிக்கைகள் மூலமே மியூச்சுவல் ஃபண்டுகளில்  இன்னும் அதிக மக்களை முதலீடு செய்ய வைக்க முடியும்'' என்றார் ஸ்ரீகாந்த மீனாட்சி.  

பிரகலா வெல்த் மேனேஜ்மென்டின் இயக்குநர் சொக்கலிங்கம் பழனியப்பனிட மும் இதுபற்றி பேசினோம்.

''மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் கொஞ்சம் ஊக்கத்தொகை கொடுத்தால் தான் அவர்கள் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மியூச்சுவல் ஃபண்டை கொண்டுபோய் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பதன் மூலம்தான் மியூச்சுவல் ஃபண்ட் துறை இன்னும் அதிக வளர்ச்சி அடையும்.

சென்னை போன்ற நகரங் களில் இருப்பவர்கள் நிதி ஆலோசகர்கள் மூலமாகவோ, இணையதளம் மூலமாகவோ முதலீடு செய்துவிடுகிறார்கள். ஆனால், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால்கூட அவர்களால் முதலீடு செய்ய முடியாது.  காரணம், அங்கு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகம் செய்பவர்களே இல்லை. சிறு முதலீட்டாளர்களையும் சென்று சேர மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்களுக்கு ஊக்க தொகை தருவது அவசியம். கம்பெனி டெபாசிட்களை விற்பவர்களுக்குகூட 1 முதல் 1.5% வரை கமிஷன் கிடைக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.

மீண்டும் நுழைவு கட்டணத்தை திரும்பக் கொண்டு வந்தால், கமிஷனுக்கு ஆசைப்பட்டு, ஃபண்டை தவறாக விற்பதற்கு (மிஸ்செல்லிங்) வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க இரண்டு வழி இருக்கிறது.

முதலாவது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கும் டிரெயில் கமிஷனை அதிகப் படுத்தலாம். இரண்டாவது, பங்குகளை வாங்கி விற்கும்போது புரோக்கரே கமிஷன் எடுத்துக் கொள்கிற மாதிரி, மியூச்சுவல் ஃபண்டை வாங்கும்போதே,  இவ்வளவு கமிஷன் கொடுக்கத் தயாரா என முதலீட்டாளரிடம் கேட்டு வாங்கலாம். இதற்கான உச்சவரம்பை செபி நிர்ணயம் செய்யலாம். அப்படி செய்தால்,  விநியோகம் செய்பவர்களுக்கும் பணம் கிடைக்கும், முதலீட்டாளர்களுக்கும் சேவை கிடைக்கும்'' என்றார் சொக்கலிங்கம் பழனியப்பன்.

இந்தியப் பொருளாதாரம் வளர்வதற்கு இத்துறையின் பங்களிப்பு அவசியம் என்பதை செபி உணர்ந்து, தொலைநோக்கு பார்வையோடு போர்க்கால அடிப்படையில் முடிவெடுப்பது  அவசியம். மியூச்சுவல் ஃபண்ட் துறையிலிருந்தே வந்த செபியின் சேர்மன் யூ.கே.சின்ஹா என்ன செய்வார் என்று பார்ப்போம்!

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism