அதிக எண்ணிக்கையிலான சேவைகள், அதிக வங்கி கிளைகள், அதிக வருமானம் கொண்ட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவைதான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம். 1806-ம் ஆண்டு துவங்கப்பட்ட பேங்க் ஆஃப் கல்கத்தாதான் 1955-ம் ஆண்டு ஜூலை முதல் தேதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவாக மாற்றப்பட்டது. 1959-ம் ஆண்டு எஸ்.பி.ஐ. மற்றும் அதன் துணை வங்கிகளுக்கான சட்டம் இயற்றப்பட்டது.

பிஸினஸ்கள்!

. ஆரம்பத்தில் வங்கிச் சேவையை மட்டுமே செய்துவந்த இந்நிறுவனம் காலப்போக்கில் தன்னை மாற்றிக்கொண்டு மற்ற சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. எஸ்.பி.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட்ஸ், எஸ்.பி.ஐ. செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ. கார்டுகள், எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல பிஸினஸ்களில் இந்த வங்கி செயல்படுகிறது. மேலும், 15,000 வங்கிக் கிளைகள், 21,000 ஏ.டி.எம். மையங்கள், 33 நாடுகளில் 173 வங்கிக் கிளைகள் என இந்த வங்கியின் பிஸினஸ் பரந்துவிரிந்து இருக்கிறது..
இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 12 டிரில்லியன் ரூபாய்கள். இந்த துறையில் இதற்கடுத்து இருக்கும் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.யின் சொத்து மதிப்பைவிட இது இரண்டு மடங்கு பெரியது. இது மட்டுமல்லாமல் டெபாசிட்கள், வங்கிக் கிளைகள், பணியாளர் களின் எண்ணிக்கை என்று எதை எடுத்தாலும் இந்தியாவின் எந்த வங்கியும் இந்த வங்கியை நெருங்கக்கூட முடியாத அளவுக்கு பெரிது.

ரிசர்வ் வங்கி குறிப்பிட்டி ருக்கும் முன்னுரிமை கடன் களை மிகச் சரியாகக் கொடுத்து வருகிறது இந்த வங்கி. இந்த வங்கியின் அனைத்துக் கிளை களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2008-ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் சௌராஷ்ட்ராவையும், 2011-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூரையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது தவிர, தன்னுடைய மற்ற ஐந்து துணை வங்கிகளையும் தன்னுடன் இணைக்கும் முடிவை கடந்த பிப்ரவரி (2011) மாதமே எடுத்துவிட்டது. இந்த ஆண்டுக்குள் இந்த இணைப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு மட்டும் நடந்து விட்டால், உலக அளவில் குறிப்பிடத் தகுந்த பெரிய வங்கியாக எஸ்.பி.ஐ. வங்கி மாறும்.

செயல்பாடு எப்படி?

2011-ம் ஆண்டு முழுவதும் இந்த வங்கியின் செயல்பாடுகள் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஆனால், சமீபத்தில் வந்திருக்கும் முடிவுகள் சந்தையின் எதிர்பார்ப்பைவிட நன்றாகவே வந்திருக்கிறது. கடந்த வருட மார்ச் மாத காலாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் வெறும் 21 கோடி ரூபாய்தான். காரணம், அப்போதுதான் அந்த வங்கியின் அப்போதைய தலைவர் ஓ.பி.பட்டின் பதவிக் காலம் முடிவடைந்து இப்போதைய தலைவர் பிரதீப் சௌத்ரி பொறுப்பேற்றார்.

புதிதாகப் பொறுப்பேற்றதன் காரணமாக வாராக்கடன் களுக்கு நிறைய ஒதுக்கீடு செய்தார். ஆனால், கடந்த 2011-12-ன் நான்காவது காலாண்டில் இதற்கான ஒதுக்கீடு மிகவும் குறைத்திருப்பதால் நிகர லாபம் அதிகரித்திருக்கிறது. அதே சமயம் 'வாராக் கடன் களுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்திருக்கிறோம். அதன் விளைவுதான் இந்த முடிவுகள்’ என்றும் சொல்லி இருக்கிறார் பிரதீப் சௌத்ரி.

அவர் சொல்வது போல வாராக் கடன்கள் கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த மார்ச் காலாண்டில் 2,837 கோடி ரூபாய் அளவுக்கு வாராக் கடன்கள் இருக்கிறது. இது கடந்த மார்ச் (2011) காலாண்டைவிட 13% குறைவாகும்.

வங்கிகளைப் பொறுத்தவரை முக்கியமான விஷயம், நிகர வட்டி வரம்பு. அதாவது, வங்கிகள் டெபாசிட்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்துக் கும், கடன்களுக்கு வாங்கும் வட்டி விகிதத்துக்கும் உள்ள வித்தியாசம். இந்த காலாண்டில் நிகர லாப வரம்பு 3.89 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலாண்டில் (மார்ச் 2011) 3.07 சதவிகிதமாகவே இருந்தது.

வரும் காலாண்டில் 3.75 சதவிகிதம் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுவோம் என்று சொல்லி இருக்கிறார் எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர். 2012-13-ம் ஆண்டுக்கான கடன் வளர்ச்சி விகிதம் 17 சதவிகித மாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. கிட்டத்தட்ட இதே அளவு வளர்ச்சி விகிதத்தில் (சுமார் 16-18) நாங்களும் செயல்படுவோம் என்று கூறியுள்ளார் சௌத்ரி.

கடந்த அக்டோபரில் 'மூடி’ நிறுவனம் இந்த வங்கியைத் தகுதி இறக்கம் செய்தது. அதன் பிறகு 7,900 கோடி அளவுக்கு மூலதனத்தை இந்த வங்கியில் செலுத்தியது அரசாங்கம். இதன் காரணமாக மூலதனத்தில் இந்த வங்கிக்கு எந்த பிரச்னையும் கிடையாது. தற்போதைய நிலை யில் மூலதன தன்னிறைவு விகிதம் 13.86 சதவிகிதமாக இருக்கிறது.

ரிஸ்க் என்ன?

மூலதனத்துக்குப் பிரச்னை யில்லை, நிகர வட்டி வரம்பு அதிகரித்திருப்பது, வாராக் கடன் அளவு குறைந்திருப்பது போன்ற சில நல்ல விஷயங்கள் இருந்தாலும், சில ரிஸ்குகளும் இருக்கவே செய்கிறது.

வாராக் கடன்கள் குறைவாக இருந்தாலும், டெலிகாம், மின் துறை மற்றும் விமானத் துறைக்கு அதிகளவு கடன்களை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று துறைகளுமே இப்போது நெருக்கடியில் இருப்பதால் இந்த கடன்களை எப்படி வசூலிக்க முடியும் என்பது மிகப் பெரிய கேள்வி. ஏர் இந்தியா மத்திய அரசு நிறுவனமாக இருப்பதால், ஓரளவு தொகையாவது இந்த வங்கி வாங்க முடியும். ஆனால், கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு மட்டும் 1,400 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இந்த தொகையை எப்படி வாங்க முடியும் என்பது தெரியவில்லை. அதேபோல பணியாளர் களுக்கான சம்பள உயர்வு ஒரு முக்கியமான விஷயமாக மாறி இருக்கிறது.

மேலும், எதிர்கால பொருளாதார சூழ்நிலைகளும் ஒரு ரிஸ்காக இந்த வங்கிக்கு இருக்கலாம். ஜூன் மாதம் நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கும் அறிவிப்பு வராது என்கிறார்கள் சிலர். ஏற்கெனவே பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. மேலும், ரூபாய் சரிவு பணவீக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும். அப்போது வட்டி விகிதம் உயர்த்தப்படலாம். அதனால் வளர்ச்சி பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

வாங்கலாமா?

கடந்த சில காலாண்டுகளாக சுமாரான செயல்பாடுகளை காண்பித்துவிட்டு, ஒரே ஒரு காலாண்டில் மட்டும் சிறப்பாகச் செயல்பட்டதினால் உடனடியாக இந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பல புரோக்கிங் நிறுவனங்கள் இந்த பங்கினை ஏற்கெனவே வாங்கச் சொல்லி இருப்பதால், இந்த பங்கின் விலை சுமார் 10% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இச்சூழ்நிலையில் இந்த பங்கினை மிக சிறிதளவு இப் போது வாங்கி, அடுத்து வரும் நாட்களில் சில சதவிகிதம் சரிந்த பின்னர் கொஞ்சம் அதிகமாக வாங்குவதே நல்லது என்பது எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்