Published:Updated:

சன் பார்மா, டாடா மோட்டார்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

சன் பார்மா, டாடா மோட்டார்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் காலாண்டு முடிவுகளை வெளி யிட்ட முக்கியமான நிறுவனங்களின் தொகுப்பை இனி பார்ப்போம்.

பஜாஜ் ஃபைனான்ஸ் (Bajaj Finance)

வங்கி அல்லாத பிற நிதிச் சேவைகள் வழங்கும் பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட அதிகரித்துள்ளது. நிகர லாபம் 159% அதிகரித்து, ரூ.2,596 கோடியாக உள்ளது. இது இந்த நிறுவனத்தின் ஒரு காலாண்டில் அதிகபட்ச லாபமாகும். மேலும், நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் 48% அதிகரித்து,ரூ.6,038 கோடியாக உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்குகள் 12 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைத் தந்துள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ் (Bajaj Finserv)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 57% அதிகரித்து, ரூ.1,309 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 14% அதிகரித்து, ரூ.15,888 கோடியாக உள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் ஒரு பங்குக்கு மேலும் ஒரு பங்கை போனஸாக வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தச் செய்திக்குப் பிறகு, இந்த நிறுவனப் பங்குகளின் விலை 10 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்து, வர்த்தகம் ஆகிறது. சென்ற வாரத்தில் நிஃப்டி குறியீடு அதிகரிக்க, பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங் களும் முக்கியப் பங்கு வகித்தன.

சன் பார்மா, டாடா மோட்டார்ஸ்... 
ரிசல்ட் எப்படி..?

ஐ.டி.சி (ITC)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 38% அதிகரித்து, ரூ.4,169 கோடியாக உள்ளது. இது இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 41.36% அதிகரித்து, ரூ.18,320 கோடியாக உள்ளது. பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்தித்த இந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. நிறுவனத்தில் உள்ள ஹோட்டல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த துணை நிறுவனங்களைப் பிரித்து பங்குச் சந்தையில் தனியாகப் பட்டியலிட நிறுவனம் தரப்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரெயின் இண்டஸ்ட்ரீஸ் (Rain Industries)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 52.07% அதிகரித்து, ரூ.5,541 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 184% அதிகரித்து, ரூ.668 கோடியாக உள்ளது. காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பைவிட சிறப்பாக இருந்ததால் இந்த நிறுவனப் பங்குகள் சென்ற வாரத்தில் 15% அதிகரித்து வர்த்தகம் ஆகியது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors)

இந்த நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.5,007 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே கால கட்டத்தில் இந்த நிறுவனம் ரூ.4,451 கோடி நஷ்டத்தை சந்தித்து இருந்தது. கடந்த ஆறு ஆண்டு களாக இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.68% அதிகரித்து, ரூ.71,228 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்திருந்தாலும் வருங்காலத்தில் இந்த நிறுவன பங்குகள் நல்ல விலை ஏற்றம் காணும் என்று பெரும்பாலான பங்குத் தரகு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன.

மாருதி சுஸூகி (Maruti Suzuki)

இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1,013 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானமும் 50% அதிகரித்து, ரூ.25,286 கோடியாக உள்ளது. மேலும், 2,80,000 புதிய வாகனங் களுக்கான ஆர்டர் நிறுவனத் தின் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளி யிட்டுள்ளதால், இந்த நிறுவனப் பங்குகள் வருங்காலத்தில் நல்ல ஏற்றம் காணும் என தரகு நிறு வனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddys Laboratory)

முன்னணி பார்மா துறை நிறுவனம் இது. இதன் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 1,257% அதிகரித்து, ரூ.1,188 கோடி யாக உள்ளது. நிகர வருமானம் 6% அதிகரித்து, ரூ.5,215 கோடி யாக உள்ளது.

எல் & டி (L&T)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 45% அதிகரித்து, ரூ.1,702 கோடி யாக உள்ளது. இந்த நிறுவனத் தின் வருமானம் 22% அதிகரித்து, ரூ.35,853 கோடி யாக உள்ளது. சென்ற காலாண்டில் 42,000 கோடி அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்து உள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஒப்பந்தங்களில் 43% வெளிநாடுகளில் உள்ளது. மிக அதிக அளவில் அரபு நாடுகளில் இந்த நிறுவனம் கட்டுமானப் பணி களை மேற்கொண்டு வருகிறது.

கரூர் வைஸ்யா பேங்க் (Karur Vysya Bank)

தமிழகத்தைத் தலைமை இடமாகக் கொண்ட முன்னணி வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் இரண்டு மடங்காக அதிகரித்து, ரூ.229 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வருமானம் சென்ற காலாண்டைவிட சற்று அதிகரித்து, ரூ.1,673 கோடியாக உள்ளது.

சன் பார்மா (Sun Pharma)

இந்த நிறுவனத்தின் லாபம் சந்தை வல்லுநர்கள் கணிப்பைவிட சிறப்பாக ஜூன் காலாண்டில் வருடாந் தர அடிப்படையில் 43% அதிகரித்து, ரூ.2,061 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 11% அதிகரித்து, ரூ.10,762 கோடியாக உள்ளது.

சன் பார்மா, டாடா மோட்டார்ஸ்... 
ரிசல்ட் எப்படி..?

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)

இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 79% அதிகரித்து, ரூ.2,168 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ.20,119 கோடியாக உள்ளது. வாராக்கடன் அளவு குறைந்ததன் காரணமாக வைப்புத்தொகை கணிசமாகக் குறைந்தது, லாப விகிதத்தை அதிகரிக்க உதவியுள்ளது. பல ஆண்டுகளாக சரியாகச் செயல் படாத பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை சீரடைந்து வருவதால், வருங்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்று முன்னணித் தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

நமது நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 70% குறைந்து, ரூ. 308 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ. 20,119 கோடியாக உள்ளது. வாராக் கடன்கள் குறைந்து, வைப்புத் தொகை அதிகரித்ததன் காரணமாக லாபம் குறைந்துள்ளது.

கோல்கேட் இந்தியா (Colgate India)

முன்னணி பற்பசை தயாரிக்கும் கன்ஸ்யூமர் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் 10% குறைந்து, ரூ.209.7 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானம் 2.6% அதிகரித்து, ரூ.1,197 கோடியாக உள்ளது.

யு.பி.எல் (UPL)

பூச்சிக்கொல்லி மற்றும் உரம் தயாரிக்கும் விவசாயத் துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் நிகர லாபம் 29% அதிகரித்து, ரூ.877 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 27% அதிகரித்து, ரூ.10,821 கோடியாக உள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்