Published:Updated:

பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட முக்கியமான நிறுவனங் களின் தொகுப்பை இனி பார்ப்போம்.

எஸ்.பி.ஐ (SBI)

இந்த வங்கியின் நிகர லாபம் பல சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 6.7% குறைந்து, ரூ.6,068 கோடியாக உள்ளது. கருவூல செலவினங்கள் அதிகரித்ததன் காரணமாக லாப விகிதம் சற்றுக் குறைந்து உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 12.87% அதிகரித்து, ரூ.31,196 கோடியாக உள்ளது.

பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ்...
ரிசல்ட் எப்படி..?

லூபின் (Lupin)

இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் ரூ.2,095 கோடியாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் சர்க்கரை வியாதிக்கான மருந்து தொடர்பான வழக்குக்காக நஷ்ட ஈடு வழங்குவதற்காக நிறுவனத் தரப்பில் ரூ.1,880 கோடி வைப்புத் தொகை ஒருமுறை மட்டும் ஒதுக்கப்பட்டது காரணமாக இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் நஷ்டத் தைச் சந்தித்து இருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் 6.7% அதிகரித்து, ரூ.4,003 கோடியாக உள்ளது.

அதானி பவர் (Adani Power)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 16 மடங்கு உயர்ந்து, ரூ.4,780 கோடியாக உள்ளது. நிறுவனத் தின் நிகர வருமானமும் 109% அதிகரித்து, ரூ.13,723 கோடியாக உள்ளது.

சென்ற காலாண்டு கோடைக்காலமானதால், மின்சாரத்துக்கான தேவை அதிகரித்தது, நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க உதவியுள்ளது. மேலும், மின் சாரத்துக்கான தேவை ஒவ்வோர் ஆண்டும் 18.6% அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனப் பங்குகள் வருங்காலத்தில் இன்னும் விலை ஏற்றம் பெறும் என சந்தை வல்லு நர்கள் கருதுகின்றனர்.

கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் (Godrej Consumer Products)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 17% குறைந்து. ரூ.345 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8% அதிகரித்து, ரூ.3,125 கோடியாக உள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (Britania Industries)

பிஸ்கெட், கேக்குகள் தயாரிக்கும் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப் படையில் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பை விடக் குறைவாக 13.2% குறைந்து, ரூ.336 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 8.7% அதிகரித்து, ரூ.3,701 கோடியாக உள்ளது. மூலப் பொருள்களின் விலை ஏற்றம் லாப விகிதத்தைக் குறைத்துள்ளது என்றாலும், சென்ற காலாண்டில் நிறுவனம் தனது தயாரிப்பு பொருள்களின் விலையை சற்று உயர்த்தியுள்ளது காரணமாக இன்னும் இரண்டு காலாண்டுகளில் லாப விகிதம் அதிகரிக்கும் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் மிக அதிகமாக ஆறு மடங்கு உயர்ந்து ரூ.925 கோடியாக உள்ளது. இதன் நிகர வட்டி வரம்பு சென்ற ஆண்டின் அளவான 2.2% என்ற நிலையிலிருந்து 2.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வாராக்கடன் அளவு குறைந்தது காரணமாக வைப்புத் தொகை குறைவாக ஒதுக்கப் பட்டதால் லாப விகிதம் அதிகரித்துள்ளது.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (Bharath Petroleum Corporation)

இந்த நிறுவனத்தின் நிகர நஷ்டம் ஜூன் காலாண்டில் ரூ.6,291 கோடியாக உள்ளது. அதற்கு மாறாக, நிறுவனத்தின் நிகர வருமானம் அதிகரித்து ரூ.1,38,000 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு ஒரு பேரல் எண்ணெய் சுத்திகரிப்பதற்குக் கிடைத்த சராசரி வருமானமான ரூ.4.12 என்ற அளவிலிருந்து ஆறு மடங்குக்குமேல் உயர்ந்து, ரூ.27.51 பேரலுக்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கேற்ப எரிபொருள் விலை நமது நாட்டில் ஏற்றப்படாத காரணத்தால் அதிக நஷ்டத்தை நிறுவனம் சந்தித்துள்ளது. தற்போது கச்சா எண்ணெய் 90 ரூபாய்க்குக் கீழ் வர்த்தகமாகி வருவதால், நிறுவனத் தின் லாபம் வரும் காலாண்டில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் (Adani Transmission)

மின்சார சப்ளைக்கு வழித் தடங்கள் அமைக்கும் அதானி குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 61% சரிந்து, ரூ. 168 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத் தின் நிகர வருமானம் 11% அதிகரித்து, ரூ.3,250 கோடியாக உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank)

இந்த வங்கியின் நிகர வருமானம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10% குறைந்து, ரூ.5,028 கோடியாக உள்ளது. இந்த வங்கி யின் லாபம் 20% அதிகரித்து, ரூ.392 கோடியாக உள்ளது. வாராக்கடன்களின் அளவு இரட்டை இலக்க அளவான 11.48% என்ற கடந்த ஆண்டில் நிலையிலிருந்து 9.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக வாராக்கடன்களுக்கான வைப்புத்தொகை குறைந்து வங்கியின் லாப விகிதத்தை அதிகரித்துள்ளது.

பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ்...
ரிசல்ட் எப்படி..?

பார்தி ஏர்டெல் (Bharati Airtel)

இந்த நிறுவனத்தின் லாபம் பல சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிடக் குறைவாக ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 467% அதிகரித்து, ரூ.1,607 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 22% அதிகரித்து, ரூ.32,805 கோடி யாக உள்ளது. சராசரியாக ஒரு வாடிக்கையாளருக்கு கிடைக்கும் வருவாயின் அளவு சென்ற ஆண்டின் அளவான ரூ. 146 என்ற நிலையிலிருந்து ரூ. 183-ஆக அதிகரித்துள்ளது.

சேவையின் தரத்தை அதிகரித்தது, விலையேற்றம் போன்ற காரணங்களால் தனிநபர் மூலம் கிடைக்கும் வருமானம் உயர்ந்துள்ளது. இது வருங்காலங்களில் நிறுவனத் தின் லாப விகிதத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ் (Adani Ports)

இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 16% குறைந்து, ரூ.1,072 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 21% அதிகரித்து, ரூ.4,638 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான பொருள்களை கார்கோ மூலம் நிறுவனம் கையாண்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (Power Grid Corporation)

இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 37% குறைந்து, ரூ.3,801 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வருமானம் 7% அதிகரித்து, ரூ.10,905 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் குறைந்ததன் காரணமாக இ.பி.எஸ் அளவு ரூ.7.86 என்ற கடந்த ஆண்டின் அளவிலிருந்து ரூ.5.34 ஆக தற்போது குறைந் துள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்