Published:Updated:

எல்.ஐ.சி இந்தியா, டிவிஸ் லேப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

எல்.ஐ.சி இந்தியா, டிவிஸ் லேப்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

தொழில் நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வாரம் காலாண்டு முடிவு களை வெளியிட்ட முக்கியமான நிறுவனங் களின் தொகுப்பை இனி பார்ப்போம்.

ஹீரோ மோட்டார் கார்ப் (Hero Motorcorp)

இருசக்கர வாகனம் உற்பத்தி செய்யும் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 71% அதிகரித்து, ரூ.625 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 53% அதிகரித்து, ரூ.8,393 கோடியாக உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் பெரிய அளவில் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கவில்லை. சென்ற காலாண்டில் இந்த நிறுவனம் 13.90 லட்சம் வாகனங்களை விற்றதன் மூலம் ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதை அறியமுடிகிறது.

இனி பண்டிகைக் காலம் வரவிருப்பதால், வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் முனைப்புக் காட்டி வருகிறது.

விரைவில் இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாக உள்ளன. இது இந்த நிறுவனத்தை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதால், இந்த நிறுவனப் பங்குகளை வாங்க பல சந்தை வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

எல்.ஐ.சி இந்தியா, டிவிஸ் லேப்... ரிசல்ட் எப்படி..?

கிராசிம் இண்டஸ்ட்ரிஸ் (Grasim Industries)

பிர்லா குழுமத்தைச் சார்ந்த முன்னணி டெக்ஸ்டைல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13% அதிகரித்து, ரூ.2,159 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 40.77% அதிகரித்து, ரூ.28,042 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் தற்போது பெயின்ட் உற்பத்தியில் இறங்க முனைப்புக் காட்டி வருகிறது. தற்போது ஆறு இடங்களில் பெயின்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செய்யாறு பகுதியில் இந்த நிறுவனத்தின் ஒரு தொழிற்சாலை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பெயின்ட் உற்பத்தியில் இறங்குவதால், சந்தையில் பெயின்ட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி இந்தியா (LIC India)

நமது நாட்டின் முதன்மையான பொதுத்துறை சார்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் பல மடங்கு உயர்ந்து, ரூ.603 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர பிரீமியம் 20% அதிகரித்து, ரூ.98,805 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுவனத்தின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதை நிறுவனத்தின் காலாண்டு முடிவு காட்டு கிறது.

காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்துள்ளது. என்றாலும், புதிய பங்கு வெளியீட்டின்மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் தற்போது 30% வரை நஷ்டத்தில் உள்ளனர்.

ஓ.என்.ஜி.சி (ONGC)

எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு செய்யும் நமது நாட்டின் முதன்மையான பொதுத்துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 25% அதிகரித்து, ரூ.15,206 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 84% அதிகரித்து, ரூ.42,321 கோடியாக உள்ளது. ஒரு பங்குக்கு ரூ.3.25 டிவிடெண்டாக வழங்க இருக்கிறது.

டிவிஸ் லேப் (Divis Lab)

பார்மா துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 26% அதிகரித்து ரூ.702 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 17.32% அதிகரித்து, ரூ.2,343 கோடியாக உள்ளது. என்றாலும் காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, இந்த நிறுவனப் பங்குகள் 6% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

பாட்டா இந்தியா (Bata India)

காலணி தயாரிப்பில் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 72% அதிகரித்து, ரூ.119 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் முன்னெப் போதும் இல்லாத அளவில் மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.943 கோடியாக உள்ளது.

அப்போலோ டயர்ஸ் (Apollo Tyres)

டயர்கள் உற்பத்தி செய்யும் நமது நாட்டின் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 49% அதிகரித்து, ரூ.191 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 30% வரை அதிகரித்து, ரூ.5,942 கோடி யாக உள்ளது. நிறுவனத்தின் நிதிநிலையை உயர்த்தும் வகையில் ரூ.1,000 கோடிக்கு பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டு வதற்கு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. விரைவில் இது குறித்து விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி இந்தியா, டிவிஸ் லேப்... ரிசல்ட் எப்படி..?

ஜீ என்டர்டெயின்மென்ட் (Zee Entertainment)

தொலைக்காட்சி சேவை கள் வழங்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 49% குறைந்து, ரூ.107 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 4% அதிகரித்து, ரூ.1,879 கோடியாக உள்ளது. அதிகரித்த பல்வேறு செலவினங்கள் காரணமாக, சென்ற காலாண்டில் லாபம் சற்றுக் குறைந்ததாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network)

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி தொலைக்காட்சி சேவைகள் வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 49% அதிகரித்து, ரூ.1,219 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 35.32% அதிகரித்து, ரூ.494 கோடியாக உள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.5 டிவிடெண்ட் வழங்க நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் (Page Industries)

ஜாக்கி என்ற பிராண்டில் உள்ளாடைகள் உற்பத்தியில் நமது நாட்டின் முதன்மையான நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் ரூ.1,344 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 10% அதிகரித்து, ரூ.207 கோடியாக உள்ளது.

அரபிந்தோ பார்மா (Aurobindo Pharma)

பார்மா துறை சார்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 32% குறைந்து, ரூ.520 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 9.4% அதிகரித்து ரூ.6,236 கோடியாக உள்ளது.

அமெரிக்காவில் அதிக லாபம் கொடுக்கக்கூடிய ஸ்பெஷாலிட்டி மருந்துகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்